பிரித்தானியாவின் BAFTA விருதுக்கான கருத்து வாக்கெடுப்பில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ முன்னிலை
http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811
http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811
பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.
பிரித்தானியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை அகாடமி 1954ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் துறை சார்ந்த சிறந்த படைப்புகளுக்கு BAFTA விருதுகளை வழங்கி வருகிறது.
2012ஆம் ஆண்டுக்கான BAFTA விருதுக்கு, சமகால விவகாரங்கள் குறித்த பிரிவில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ உள்ளிட்ட 4 ஆவணப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரேடியோ ரைம்ஸ் இணையத்தளத்தில் இந்த நான்கு ஆவணப்படங்கள் தொடர்பாகவும் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பஹ்ரெய்ன் கிளர்ச்சி குறித்த அல்ஜெசீரா தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படத்துக்கும், சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துக்கும் இடையில் கடந்த பல நாட்களாக கடும் போட்டி நிலவி வந்தது.
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்கு இதில் இரண்டாம் இடமே கிடைத்திருந்தது. ஆனால் தற்போது 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் முன்னிலை பெற்றுள்ளது.
சிறிலங்கா- இந்திய நேரம் இன்று காலை 5.40 மணி நிலவரப்படி ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்கு 1,774,070 வாக்குகளும் (50.01 வீதம்), அல்ஜெசீரா தயாரித்த பஹ்ரெய்ன் தொடர்பாக ஆவணப்படத்துக்கு 1,769,159 வாக்குகளும் (49.87 வீதம்) கிடைத்துள்ளன.
இந்த இணையத்தள வாக்கெடுப்பு விருதுக்கான தெரிவைத் தீர்மானிக்காது. நடுவர்களே அதனைத் தீர்மானிப்பர். ஆனாலும் வாசகர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் இந்த வாக்கெடுப்பில் நீங்களும் பங்கேற்று வாக்களிக்கலாம்.
No comments:
Post a Comment