Translate

Thursday, 16 February 2012

பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு?


வன்னிப் போரில் சிறீலங்கா அரசாங்கம் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான பன்னாட்டு விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பான தீர்மானம் ஒன்று விரைவில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு முன்னோடியாக இத்தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் நிறைவேற்ற இருப்பதாக கூறப்படுகின்றது

No comments:

Post a Comment