இணைந்து ஐ.நா மனித உரிமைகள் சபையில் கையளிக்கவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத் தொடரில் மூதூர் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை தொடர்பான அறிக்கை ஒன்றை, பிரான்ஸைத் தளமாகக் கொண்ட ''அக்ஷன் பெய்ம்'' எனப்படும் பட்டினிக்கு எதிரான நிறுவனமும், ''ஸ்பீக்'' எனப்படும் மனித உரிமைகள் அமைப்பும் இணைந்து கையளிக்கவுள்ளன.
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 'அக்ஷன் பெய்ம்'' பணியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், இந்த வழக்கில் இலங்கை அதிகாரிகள் நீதியை நிலை நாட்டத் தவறியுள்ளதைக் சுட்டிக் காட்டும் வகையிலும், இந்த அறிக்கை அமையவுள்ளது.
மூதூர் படுகொலைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், இலங்கை அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கவோ, சட்டத்தின் முன் நிறுத்தவோ இல்லை. இந்த விடயத்தில் இலங்கை நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதை இந்த அறிக்கை குறிப்பிட்டுக்கூறவுள்ளது.
நீதித்துறையின் மீதான அரசியல் தலையீடுகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில் உள்ள குறைபாடுகள் என்பனவற்றை இலங்கைத் தரப்பில் உள்ள தவறுகளாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டவுள்ளது.
இந்த அறிக்கை வரும் நவம்பர் 1ஆம் திகதி ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கைக்குக்கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment