இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களின் பயிற்சி நிறைவு எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது என இராணுவத் தரப்பு தெரிவித்திருந்தது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 28 December 2012
முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! Read more about முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! [7557] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சிங்களர்களின் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்ப்பதாக, முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
"முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த பிக்குகள் சிங்களக் குழுவினரால் முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
சூடு பிடிக்கிறது குற்றப்பிரேரணை விவகாரம்; அரசும் எதிரணியும் பகிரங்க தொலைக்காட்சி விவாதம்
ஆளும் தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் புதுவருடத்தில் பகிரங்க விவாதம் ஒன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுக்கின்றது.
தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருக்கின்றது. |
ஜனநாயகத்தை மதித்து குற்றவியல் பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசு தீர்வு காண வேண்டும்! – ‘த இந்து’ வலியுறுத்து
ஜனநாயகத்தை மதித்து குற்றவியல் பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசு தீர்வு காண வேண்டும்! – ‘த இந்து’ வலியுறுத்து
மஹிந்த ராஜபக்ஷ அரசானது நிறுவனங்கள் அல்லது ஜனநாயக அரசியல் நடைமுறைகள் ஆகியவற்றைப் பலவீனப்படுத்தாத வகையில் பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவந்த குற்றவியல் பிரேரணை மீதான மோதலுக்குத் தீர்வு காணவேண்டுமென சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘த இந்து’ நேற்றைய தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
அகிலன் பவுண்டேசனின் உதவியுடன் வந்தாறுமூலையில் விசேட தேவையுடையோருக்கான பாடசாலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அனர்த்தின் தாக்கம் காரணமாக விசேட தேவையுள்ள சிறுவர்களாக பிறந்தவர்களை அரவணைக்கும் வகையிலான பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலண்டன் அகிலண் பவுன்டேசனின் அனுசரணையுடன் மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இந்தபாடசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அன்பகம் பாடசாலை என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்ட இப்பாடசாலையில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 27 விசேட தேவையுடைய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்பகம் தலைவர் டேவிட் சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, இலண்டன் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபர் கோபாலகிருஸ்ணன், மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்திரகுமார் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் இணைத்தலைவர் சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
http://www.thinakkathir.com/?p=46065
http://www.thinakkathir.com/?p=46065
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்கவில் கைது!
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் குறித்த நபர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு பிரவேசித்த 46 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் விசேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தியிருந்தது.
பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு அனுப்பி வைக்குமாறு சுரேஸ் கோரிக்கை
பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு ஆனுப்பி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைச் சிறைகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியரிமையுடைய சிறைக் கைதிகளை அந்நாட்டு சிறைச் சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தலைவர் பிரபாகரன் பற்றி எம்மிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை;ஹத்துருசிங்க சொன்னது பொய்: மாணவர்கள் தெரிவிப்பு!
பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் புலி உறுப்பினர்களை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை: சிங்கள ஊடகம்
ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு செயற்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத, சரணடையாத மற்றும் கைது செய்யப்படாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.முன்னாள் புலி உறுப்பினர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
மன்னாரில் சிங்கள குடியேற்ற விரிவாக்கம்; கோத்தபாய நேரில் ஆராய்வு!
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லையோரக்கிராமமான முள்ளிக்குளம் சிங்கள மயப்படுத்திவரும் நிலையில் அதன் உச்சமாக பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய நேரடியாகச் சென்று சிங்கள மயமாக்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கடற்படையினருடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்
மன்னார் மாவட்ட அபிவிருத்தியை ஆராய்தல் என்ற போர்வையில் நேற்று முன்தினம் முள்ளிக்குளம் சென்ற கோத்தபாயவை வடமேற்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹன பெரேரா உட்பட அதிகாரிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர்
யாழில் கைதான 45 பேரும் பூசா முகாமில்!- கைது செய்யப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்
யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 45 பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்து வந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மாத்தளையில் தமிழ் இளைஞர் சிங்கள காடையர்களால் அடித்துக் கொலை!
இரத்தோட்டை - பாத்தாளவத்தை மத்திய பிரிவு பண்வில பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கள காடையர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோதல் சம்பவம் 26ம் திகதி மாலை இடம்பெற்றதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 36 வயதுடைய கோபால் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த மோதல் சம்பவம் 26ம் திகதி மாலை இடம்பெற்றதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 36 வயதுடைய கோபால் என்பவரே உயிரிழந்துள்ளார்.
"கொழும்பு சிறைகளின் தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்"
கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயரிடம் சி.ஐ.டி இனர் விசாரணை
மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வடக்கில் அடை மழை; குளங்கள் பெருக்கெடுப்பு: மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிப்பு!
வடக்கில் பெய்துவரும் அடை மழை மற்றும் குளங்களின் பெருக்கெடுப்புக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து சமூக மக்களையும் மீள்குடியேற்றுமாறு JNP , டக்ளஸிடம் கோரிக்கை
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து இன சமூக மக்களையும் மீள் குடியேற்றுமாறு ஜே.என்.பி கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் N;காரியுள்ளது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்ற அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.என்.பி.யின் பேச்சாளர் முஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளன: வசந்த பண்டார
நாட்டில் இன்று வேலுப்பிள்ளை பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கி வருகின்றன.
எனவே, இவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்கு அரசு முயற்சி
தமிழ் இளைஞர்களை மிகவும் திட்டமிட்ட முறையில் வன்முறையில் தள்ளி அவர்களைப் பயங்கரவாதிகள் எனக் காட்டுவதற்கு இந்த அரசு முயல்கிறது. தமிழ் இளைஞர்கள் எவரும் இந்த அரசின் சதி வலையில் சிக்கவேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்: அஸாத் ஸாலி எச்சரிக்கை!
'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பிய முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது.
கோதாபாய கருத்து தெரிவிப்பது தேசிய நல்லிணக்கத்துக்கு எதிரான செயல்..
தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவிடுகிறார்களா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)