Translate

Saturday, 6 October 2012

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயனுள்ள பேச்சுக்களை நடத்தியதாம் சிறிலங்கா – அமெரிக்காவில் பீரிஸ் புளுகு

Posted Imageதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்கள் பயனுள்ளதாக அமைந்ததாகவும், சில பிரச்சினைகளை இனங்காண்பதற்கும், சாத்தியமான தெரிவுகளைத் தேடுவதற்கு உதவியதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இருக்கின்றானா?இல்லையா?

இருக்கின்றானா?இல்லையா?
Posted Image

சிறிலங்காவை எச்சரிக்கும் நவநீதம்பிள்ளை

சிறிலங்காவில் காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் சென்ற ஜ.நா துணைச்செயலாளர் மிகவும் இரகசியமான முறையில் பூட்டப்பட்ட அறைக்குள் ஆய்வு???


ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ் சென்ற ஜ.நா துணைச்செயலாளர் அஜய் சில்பர் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அங்கு சென்ற ஜ.நா துணைச்செயலாளர் சில்பர், யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்தும், இயல்பு வாழ்வு குறித்தும் மிகவும் இரகசியமான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இராணுவம் ப.நடேசனைச் சுட்டது ! எரிக் சொகைம் அதிர்வுக்குப் பேட்டி !


இராணுவம் ப.நடேசனைச் சுட்டது ! எரிக் சொகைம் அதிர்வுக்குப் பேட்டி !


"நாம் கொல்லப்படும்போது உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது" என்ற தொணிப் பொருளில் எழுதப்பட்ட புத்தகம் நேற்று(05) வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொள்ள நோர்வேயில் இருந்து லண்டன் வந்த நோர்வே நாட்டு அமைச்சரும், இலங்கைக்கான சமாதானத் தூதுவருமான எரிக் சொல்கைமை, அதிர்வின் நிருபர் இடைமறித்து கேள்விகளைக் கேட்டுள்ளார். மேடையில் சில கருத்துக்களை தெரிவித்துவிட்டு, கருத்தரங்கு முடிவடைந்ததும், வெளியில் வந்த எரிக் சொல்கைமிடம் அதிர்வின் நிருபர் புலித்தேவன் மற்றும் நடேசன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த எரிக், இலங்கை இராணுவமே புலித்தேவன் மற்றும் நடேசனைக் கொன்றது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ! இதனூடாக கோத்தபாய மற்றும் இலங்கை அரசின் கூற்றை எரிக் சொல்கைம், முற்றாக மறுத்துள்ளதோடு, இலங்கை இராணுவத்தை அவர் நேரடியாகச் சாடியுள்ளார். 

Best Tamil Song ever produced/EVERY ONE WILL CRY


Best Tamil Song ever produced/EVERY ONE WILL CRY


Friday, 5 October 2012

"இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம்!" - யூத பேராசிரியர்


"The Holocaust Industry" (http://en.wikipedia.org/wiki/The_Holocaust_Industry )  என்ற நூலை எழுதிப் பிரபலமான, அமெரிக்க யூத அரசியல் அறிஞர் Norman Finkelstein உடனான கலந்துரையாடல். (டச்சு மொழியில், நெதர்லாந்து பத்திரிகையான  Trouw வில் பிரசுரமானது.)

உலகம் முழுவதும் சூடாக விற்பனையான அந்த நூல் (The Holocaust Industry), இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது. இஸ்ரேல், யூத இனப்படுகொலையை முடிந்தளவு தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது. நிரந்தரமான பலிக்கடாக்கள் என்ற பிம்பத்தை காட்டி, தனக்கெதிரான விமர்சனங்களை அடக்கி வருகின்றது.  இந்த நூலை எழுதிய Finkelstein னின் தாயும், தந்தையும் நாசிகளால் விஷவாயு அடித்து கொலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. சர்ச்சைக்குரிய நூலை எழுதியதன் மூலம், பலரின் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சிக்காகோ பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. Finkelstein தற்பொழுது பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று விரிவுரையாற்றி வருகின்றார்.  கடந்த வாரம், ஆம்ஸ்டர்டாம் Vrije Universiteit க்கு வந்திருந்த பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர், சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சுரேஷ்

வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர், சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சுரேஷ்

By General
2012-10-05 09:21:27
வடக்கு– கிழக்குப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ள போதும் அதனை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்கிறது. ஐக்கிய நாடு கள் சபையில் இலங்கை தொடர்பான மீளாய்வுகள்
நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் இல்லை ௭னக் காட்டுவதற்கே மெனிக்பாம் முகா மி லி ருந்த தமிழர்களைப் பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் காடுகளுக்குள் தள்ளிவிட் டுள்ளார். இதனூடாக இடம்பெயர்ந்தோரை மீள்கு டியமர்த்திவிட்டோம் ௭ன சர்வதேசத் தினை இலங்கை அரசாங்கம் ஏமாற்றி யுள் ளது. இதனை உலக நாடுகள் நன்கு புரிந்து கொள்ளவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளு மன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கையைப் பாக். பயன்படுத்துகின்றதா? இந்தியா விசாரணை!!


இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ இலங்கையை தளமாகப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை அடுத்து, இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் புதுடில்லி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்:

ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்: Top News 
அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
திமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது தயாரிப்பிற்கு பின்னதாக நடத்தப்படும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன.

காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?


சிறிலங்காவில் காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிப்போம்: ஆர். கே. செல்வமணி கோரிக்கை


கனடாவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இசைஞானி இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் களியாட்டங்களை தவிர்க்குமாறு இந்திய திரைப்பட இயக்குனர் ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை சவால்

தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை சவால்
கொழும்பு: "வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரிகள் 45 பேர்  பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுத்துக்  கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சவால் விடுத்துள்ளார். 

ஜனாதிபதி முன்வைத்த காலை பின்​வைக்க மாட்டார் - பசில் பேச்சு


ஜனாதிபதி முன்வைத்த காலை பின்​வைக்க மாட்டார் - பசில் பேச்சுதிவிநெகும சட்ட மூலத்தை ஜனாதிபதி திரும்பப்பெற மாட்டார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்தை மீண்டும் பின்தள்ள மாட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

USஐ தவிர வேறு ஒரு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பை நிர்வகிக்கும் 2 USகாரர் இருக்கும் நாடு இலங்கை


USஐ தவிர வேறு ஒரு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பை நிர்வகிக்கும் 2 USகாரர் இருக்கும் நாடு இலங்கை
அமெரிக்காவை தவிர வேறு ஒரு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை நிர்வகிக்கும் இரண்டு அமெரிக்கர்கள் இருக்கும் ஒரே நாடு இலங்கை எனவும் இவர்கள் வேறு யாருமில்லை எனவும் ஜனாதிபதியின் சகோதரர் இருவர் எனவும் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மூதூர் தன்னார்வ தொண்டர் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ACF


மூதூர் தன்னார்வ தொண்டர் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ACF
மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரான்ஸின் ஏ.சீ.எப் தொண்டு நிறுவனம் மீண்டும் கே;hரிக்கை விடுத்துள்ளது.
2006ம் ஆண்டில் மூதூரில் எக்சன் ஏகேன்ஸ்ட் அங்கர் என்னும் அமைப்பைச் சேர்ந்த 17 தன்னார்வ தொண்டர்கள் கொலை செய்யப்பட்டனர்.

"அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கருத்துக்கு வைகோ கடும் கண்டனம்"

இலங்கை இராணுவத்தினர் என்ன எதிர்ப்பு நடைபெற்றாலும் இந்தியாவில் தான் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள் என அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

"லெப்டினன்ட் கேணல் குமரப்பா "


யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட லெப்டினன்ட் கேணல் குமரப்பா அவர்கள் 1983ம் ஆண்டு தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார்

இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்"


இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்"

கனம் தலைவர் அவர்களுக்கு,

VOTE : Salangai Vinotham 2012

Thursday, 4 October 2012

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: பொலிஸ் சீருடையில் கொள்ளைச் சம்பவம் !

பொலிஸ் சீருடையில் வந்தவர்களினால் லண்டன் தமிழர் வீட்டில் பட்ட பகலில் கொள்ளை !video

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: பொலிஸ் சீருடையில் கொள்ளைச் சம்பவம் !
பிரித்தானியாவின் புறநகர்ப்பகுதியான எல்த்தம் என்னும் இடத்தில், பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் சன நெரிசல் மிக்க இடத்தில் அமைந்துள்ள தமிழரின் வீட்டையே குறிப்பிட்ட மூவர் கொள்ளையடித்துள்ளனர். நேற்றைய தினம்(04.10.2012) மதியம் சுமார் 11.30 மணியளவில், தமிழர் ஒருவரின் வீட்டுக் கதவை பிரித்தானியப் பொலிசாரின் சீருடையில் வந்த இருவர் தட்டியுள்ளனர். அங்கிருந்த வயதான அம்மா ஒருவர், கதவைத் திறந்துள்ளார். தாம் பொலிசார் எனக்கூறி உள்ளே நுளைந்த அவ்விருவரும், குறிப்பிட்ட அம்மாவின் தலைமுடியைப் பிடித்து, அவரது வாயைப் பொத்தி மேல் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவரது கணவரையும் கன்னத்தில் பலமாகத் தாக்கி அவ்விருவரையும், ஒரு இடத்தில் முடக்கியுள்ளனர்.

Wednesday, 3 October 2012

காவேரி நதி நீரில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தி 04/10/12 அன்று சீமான் தலைமையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்!!


காவேரி நதி நீரில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தி....வரும் 04/10/12 அன்று அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.


இடம்: திருச்சி தொடர்வண்டி நிலையன்,காலை 10 மணி.


தொடர்புக்கு : 9865413174,naamtamizhartrichy@gmail.com

படிப்பறிவே இல்லாத பிள்ளையான் என்ன ஆலோசனையை அரசுத் தலைவருக்கு வழங்கப் போகிறார்? - கயந்த கருணாதிலக சீற்றம்

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை மீறி அங்கு ஜனநாயக முறைக்கு எதிராக ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் அரசு என்னென்ன இணக்கப்பாடுகளைச் செய்துள்ளது என்பதை மக்களுக்குப் பகிரங்கப் படுத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்: - கோதபாய ராஜபக்ஷ

Posted Imageவெளிநாடுகளில் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் எஞ்சிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை இல்லாதொழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை சீர் குலைக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

'அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும்' - மன்மோகன்சிங்

இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கடிதமொன்றை எழுதியிருந்தார்.

முருகன் கோயில் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்: தொல்பொருள் ஆராய்ச்சி எனக் கூறி விகாரை அமைக்கும் சூழ்ச்சியா? தாண்டியடி ஆலய நிர்வாகத்தினர்

முருகன் கோயில் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்: தொல்பொருள் ஆராய்ச்சி எனக் கூறி விகாரை அமைக்கும் சூழ்ச்சியா? தாண்டியடி ஆலய நிர்வாகத்தினர்

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் விகாரை அமைக்கும் நடவடிக்கைக்காகவா திருக்கோவில், தாண்டியடி, சங்கமன்கண்டிமலை முருகன் ஆலய நிர்மாணப் பணிகள் நடைபெற்று முடிவுறும் நேரத்தில் நிர்மாணப் பணிகளை தொல் பொருள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது என்று ஆலய நிர்வாகத்தினர்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டிருந்த இளைஞனை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

(எஸ்.எஸ்.செல்வநாயகம்) 

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சட்டத்துக்கு விரோதமாக தொடர்ச்சியாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதியொருவரை உடனடியாக விடுவிக்கும்படி உயர்நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்தது. 

இலங்கைத் தமிழர்களுக்கான இந்திய அரசின் பணிகளில் திருப்தி இல்லை: மு.கருணாநிதி

இலங்கைத் தமிழர்களுக்காக இலங்கையில் இந்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் திருப்தியாக இல்லை. இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். இதற்கான தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த தீர்மானங்கள் ஐ.நா.சபையில் இந்திய அரசின் ஆதரவுடன் ஏற்கப்பட வேண்டும்' என்று தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். 

2012 ஆம் ஆண்டு தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுக்கான மக்கள் சந்திப்பு!


2012 ஆம் ஆண்டு தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுக்கான மக்கள் சந்திப்பு!

கடந்த பல வருடங்களாக பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாளை நடாத்திவரும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் இம்முறையும் மிகவும் சிறப்பாகவும், மக்களின் ஒன்றிணைந்த எழுச்சியோடும் மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை முன்னகர்த்தி வருகிறது.

எம் தலித் இன உறவுகளே .................


நம் குலகொடிக்கான நீதியை வென்றெடுக்க தன்மானமுள்ள எம் தலித் இன உறவுகளே போராட்டத்திற்கு நிதி வழங்குங்கள்.

இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் நோக்கில், அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில், முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்று, மண்ணை தோண்டி சாட்சியங்களை தேடி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த குழுவினரின் பின்னணியில் நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் நெடியவன் இருப்பதாகவும் இந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பட்டாளர்களில் சில பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதை சர்வதேச சமூகத்திற்கு உறுதிப்படுத்துவதற்காக முள்ளிவாய்க்கால் மற்றும் ஆனந்தபுரம் பிரதேசங்களில் மண் தோண்டப்பட்டு வருவதாகவும் திவயின கூறியுள்ளது.


இலங்கை நாட்டு முஸ்லிம் தமிழருக்கு ஒரு வேண்டுகோள்
(இங்கு நான் இந்து தமிழரையோ ,கிறித்துவத் தமிழரையோ குறிப்பிடவில்லை )
ஹக் கீம் மீது ஒரு கண் வைத்திருங்கள்
எலும்பில்லாத நாக்கால் ..என்னாமா ..பொய் சொல்றாரு .
ஆங்...........................

போர் குற்றங்களை சுமத்தும் நோக்கில் முள்ளிவாய்க்காலில் மண்ணை தோண்டி சாட்சியங்களை தேடுகின்றனர் :


போர் குற்றங்களை சுமத்தும் நோக்கில்  முள்ளிவாய்க்காலில் மண்ணை தோண்டி சாட்சியங்களை தேடுகின்றனர் :
இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் நோக்கில், அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில், முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்று, மண்ணை தோண்டி சாட்சியங்களை தேடி வருவதாக தெரியவந்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்களின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்களின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல :
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் இருவரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல எனவும் வேறு இடம் ஒன்றில் வைத்து தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்த பின்னர், விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தில் கொண்டு சென்று போட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மட் ஆகியவற்றையும் விபத்தில் சேதமடைந்தாக தெரியும் வகையில் சேதப்படுத்தி அந்த இடத்தில் போட்டுள்ளதாகவும் இது பாரதூரமான படுகொலை சம்பவம் எனவும் காவற்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துடன் தொடர்புடையவர் துணை இராணுவத்தினரால் கடத்திக் கொலை :


பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துடன் தொடர்புடையவர் துணை இராணுவத்தினரால் கடத்திக் கொலை :
கடந்த 27 ஆம் திகதி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும், தற்போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும், ரேல்பாரே சஞ்ஜீவ என அழைக்கப்படும் மிலங்க பிரபாத் என்பவர் கடந்த 30 ஆம் திகதி அரசாங்கத்தின் துணை இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அகதி செந்தூரன் மீண்டும் வைத்தியசாலையில்

இலங்கை அகதி செந்தூரன் மீண்டும் வைத்தியசாலையில்



நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் செய்தி


இதனால் சக நடிகைகளுக்கு அவர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கும் மேசேஜ் இதுதான். "நடிக்கும் போது உடலை பேணுங்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். சம்பாதிக்கிற பணத்தை கொஞ்சமாகவேனும் சேர்த்து வையுங்கள். நடிகர் சங்கம் இருக்கிறதுஉடன் நடித்தவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் நம்பாதீர்கள். நம்பினால் உங்கள் மரணம் கூட மதிப்பில்லாமல் போகும். சினிமாவில் பணம் மிகவும் முக்கியம் என்பதை உணருங்கள்" என்பதுதான்.

நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும்  செய்தி

நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் செய்தி

பொண்ணாட்டி தேவை படத்தின் மூலம் அறிமுகமானவர் அஸ்வினி. பேரழகி இல்லாவிட்டாலும் குடும்ப பாங்கான கேரக்டருக்கு அச்சு அசலாக பொருந்தக் கூடியவர். ஆனாலும் அவரால் பெரிய இடத்துக்கு வரமுடியவில்லை. சில படங்களில் நடித்த அவர் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். உடல் சற்று பருமனாகிவிட்ட நிலையில் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

கோயிலில் பாலியல் தொழில்

[நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!]
 (ஐந்தாம் பாகம்) 
பூப்புனித நீராட்டு வீழா, அல்லது சாமர்த்திய சடங்கு என்றும் அழைக்கப்படும் பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் சடங்கு, தமிழர் வாழ்வில் பிரிக்கவொண்ணாத ஒன்றாக மாறி விட்டது. புலம்பெயர்ந்து சென்று, மேற்கத்திய நாடொன்றில் வாழ்ந்தாலும், இந்த சடங்குகளை விட்டு விடவில்லை. குறிப்பாக, மேற்கத்திய சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகள் இது போன்ற சடங்குகளை விரும்புவதில்லை. ஏனென்றால், வேற்றின சமூகங்களில் அப்படியான பூப்படைந்த சடங்குகள் எதுவும் இல்லாதபடியால், பிற பிள்ளைகளின் கேலிப் பேச்சுக்கு ஆளாகின்றனர். பெற்றோரைப் பொறுத்த வரையில், இது "தமிழரின் கலாச்சாரம். நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பின்பற்றப் பட வேண்டும்."

ஆடுகளம் 2012


Aadukalam_2012_2.jpgAADUKALAM.jpgஉலகளாவிய தமிழ் இளையோர் அவை நடத்தும் ஆடுகளம் நடனப்போட்டி இரண்டாவது தடவையாக லண்டனில் நடைபெறவுள்ளது. இதில்  ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ளன. இத்தாலி, ஐக்கிய இராச்சியம், மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கபூர், ஸ்வீசலாந்து, ஸ்வீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலுள்ள இளையோர்கள் பங்குபற்றும் மிகப்பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சி லண்டன் லோகன் ஹாலில் 6th of October நடைபெறவுள்ளது.

Tuesday, 2 October 2012

மீள்குடியேற்றத்தின் யதார்த்த நிலை என்ன?


யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் முற்றுபெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மீள்குடியேற்றத்தின் யதார்த்த நிலை என்ன? என்பது தொடர்பாகவும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்களா? அவர்களின் யதார்த்த நிலை என்ன? என்பது தொடர்பிலும் நியூஸ்பெஸ்ட் நேரடியாக சென்று ஆராய்ந்தது.


சோனியா காந்தியின் மருத்துவ செலவு ரூ.1,880 கோடி: பொதுநல வழக்கு தொடர்கிறார் சுப்ரமணிய சுவாமி!

எலியும் பூனையும்...

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,880 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் கூறியுள்ளனர்.

சாதனைகள் பல செய்து தமிழகத்தை உயர்த்திய ஈகைச்சுடர் காமராஜர் நினைவு நாள் இன்று




சாதனைகள் பல செய்து  தமிழகத்தை உயர்த்திய ஈகைச்சுடர் காமராஜர்  நினைவு நாள் இன்று - அக்டோபர் 2

காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.

ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர். காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் ஐயா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

திவிநெகும சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராய கால அவகாசத்தைக் கோருகிறது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.


திவிநெகும சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு விசுவாசம் காட்டக்கூடாது - நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை.
திவிநெகும சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராய கால அவகாசத்தைக் கோருகிறது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
திவிநெகும சட்டமூலம் இன்றைய தினம் கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது குறித்த சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்களை விரிவாக ஆராய்வதற்கான கால அவகாசத்தைக் கோரவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

பொத்துவில், கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிப்பு


மாகாணசபைத் தேர்தலின் பின்னான ஆக்கிரமிப்பு படலம் ஆரம்பம்:
பொத்துவில், கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிப்பு –
பொத்துவில், கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மையவாடியை மீட்டுத் தருமாறு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஷித் பொத்துவில் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெஹ்ருவில் புகலிடம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாது – கிறிஸ் போவுன்


நெஹ்ருவில் புகலிடம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாது – கிறிஸ் போவுன்
நெஹ்ரு தீவகளில் புகலிடம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவுன் தெரிவித்துள்ளார்.
 
நெஹ்ரு தீவுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டிருந்த 15 ஈரான் ஈராக் புகலிடக் கோரிக்கையாளர்கள் கலகத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கலகம் காரணமாக நெஹ்ரு புகலிட முகாம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாலியல் ஏமாற்று பேர்வழி சோபித்த தேரருக்கு 20வருட கடூழிய சிறை


பெண்ணொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் றுவான்வெல்ல ஏ.சோபித்த தேரர் உள்ளிட்ட மூவருக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
றுவான்வெல்ல சோபித்த தேரர் என அழைக்கப்பட்ட சுனில் சாந்த என்பவர் இன்று கேகாலை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறை வைக்கப்பட்டுள்ளார்................  read more 

படிப்பறிவில்லாத பிள்ளையான் கொலை கொள்ளை கற்பழிப்பு கடத்தல் பற்றிய ஆலோசகர்- ஐதேக

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை மீறி அங்கு ஜனநாயக முறைக்கு எதிராக ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் அரசு என்னென்ன இணக்கப்பாடுகளைச் செய்துள்ளது என்பதை மக்களுக்குப் பகிரங்கப் படுத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்......................... read more 

"இராணுவத்தால் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்ட மக்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு நிதியுதவி"


இராணுவத்தால் சீனியா மோட்டைப் பகுதியில் அநாதரவாக விடப்பட்ட கேப்பாபிலவு மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

செந்தமிழன் சீமான் பரபரப்பு பேட்டி “மீடியா வாய்ஸ்” வார இதழில்.


செந்தமிழன் சீமான் பரபரப்பு பேட்டி…  திமுக.,அதிமுக.,மதிமுக.,தேமுதிக., கம்யூனிஸ்ட்.,விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் இந்த வாரம் “மீடியா வாய்ஸ்” வார இதழில்…...............  read more 

உடனடி அரசியல் தீர்வை முன்வைக்கவும்: பான் கீ மூன் இலங்கைக்கு வலியுறுத்த

bankimoon_2_10
இலங்கையில் யுத்தம் ஏற்பட வழிவகுத்த பிரச்சினை தொடர்பில் உடனடி அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமேன ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 67வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கில் NGO கள் நடத்திய போராட்டம் : அழிவுகள் ஆழமடைகின்றன


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை மாற்று’ என்ற தொனிப்பொருளில் சிறுவர் துஷ்பிரயோகத்தினை எதிர்க்கும் மாபெரும் அமைதி ஊர்வலமும் கலாசார விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

உதட்டளவில் தமிழர் உள்ளத்தில் மஹிந்தர்;

உதட்டளவில் தமிழர் உள்ளத்தில் மஹிந்தர்; மு.காவின் செயல் பற்றி அரியநேத்திரன் கருத்து
news
 உதட்டால் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு உள்ளத்தால் மஹிந்த ராஜபக்ஷவை திருப்திப்படுத்துகிறது முஸ்லிம் காங்கிரஸ் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் கேள்வி கேட்க ஐ.நாவில் அனுமதி இல்லை?: இன்னர் சிட்டி பிரஷ் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகள் தொடர்பிலான கேள்விகளை கேட்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று இன்னர் சிட்டி பிரஷ் இணையத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்றைய தினம் பான் கீ மூன் மற்றும் ஜீ.எல்.பீரிஷ் ஆகியோர் சந்தித்த பின்னர், பான் கீ மூன் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. இதற்காக சில கேள்விகளை இன்னர் சிட்டி பிரஸ் முன்னதாகவே சமர்ப்பித்திருந்ததாக கூறப்படுகிறது.

தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித் தனங்கள் - சுரேஷ் நேர்காணல்!(ஒலி)

அவர் தமிழ்லீடர் இணையத்திற்கு வழங்கிய முழுமையான நேர்காணல்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலமான சக்தியாக ஒரு வலுவான இயக்கமாக செயற்படவேண்டும் என்பதே கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் விருப்பமாக உள்ளது. கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் பல நடவடிக்கைகள் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்ற நிலையில் இது குறித்து தமிழ்லீடர் கேள்வி எழுப்பியது.

டெசோ தீர்மானம் ஐ.நாவில் இலங்கைக்கு அவமானம்; தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் டில்லியை விட தமிழ் நாட்டுக்கு சக்தி அதிகம் என்கிறார் கிரியயல்ல எம்.பி

டெசோ தீர்மானம் ஐ.நாவில் இலங்கைக்கு அவமானம்; தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் டில்லியை விட தமிழ் நாட்டுக்கு சக்தி அதிகம் என்கிறார் கிரியயல்ல எம்.பி
news
 டெசோ தீர்மானங்கள் ஐ.நா.சபையில் கையளிக்கப்படுவது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விடயமாகும். தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுடன் அரசு இராஜதந்திர ரீதியிலான நட்புறவுகளை முன்னெடுக்காமையே இந்திய இலங்கை உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவதற்குக் காரணமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார்.