Translate

Wednesday 3 October 2012

படிப்பறிவே இல்லாத பிள்ளையான் என்ன ஆலோசனையை அரசுத் தலைவருக்கு வழங்கப் போகிறார்? - கயந்த கருணாதிலக சீற்றம்

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை மீறி அங்கு ஜனநாயக முறைக்கு எதிராக ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் அரசு என்னென்ன இணக்கப்பாடுகளைச் செய்துள்ளது என்பதை மக்களுக்குப் பகிரங்கப் படுத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலை எவ்வாறு நடத்துவது, வாகனங்களையும் ஆட்களையும் எவ்வாறு கடத்துவது என தெரிந்துகொள்வதற்காகவா பிள்ளையானுக்கு அரசுத்தலைவருக்கான ஆலோசகர் பதவி� வழங்கப்பட்டது என்று கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கிழக்கில் தமது ஆட்சியைப் பலமாக அமைத்துக்கொள்வதற்காக பிள்ளையானுக்கு அரச தலைவருக்கான ஆலோசகர் பதவியை வழங்கப்பட்டுள்ளது. அரசுத்தலைவர் ஆலோசகர் பதவி என்பது ஒரு பொறுப்புவாய்ந்த பதவி.
இந்தப் பதவி வகிப்பவர்கள் பல்துறைசார் அறிவுடையவர்களாக இருக்கவேண்டும். படிப்பறிவே இல்லாத பிள்ளையான் என்ன ஆலோசனையை அரசுத் தலைவருக்கு வழங்கப் போகிறார். வாகன கடத்தல் கொலை கொள்ளை தற்கொலை குண்டுத்தாக்குதல்களை எவ்வாறு நடத்துவது என்ற ஆலோசனையை மட்டும் தான் பிள்ளையானால் வழங்க முடியும் என்றும் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசுத்தலைவர் ஆலோசகர் பதவி வகிப்பதற்குப் பல தகைமைகள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு அரசு இந்த பதவியை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment