Translate

Saturday, 26 November 2011

மாவீரர்வாரத்தை முன்னிட்டு ஈழதேசம் வாசகர்களுக்காக கடலோரக் காற்று திரைப்படம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கடலோரக் காற்று திரைப்படம் ஈழதேசம் வாசகர்களுக்காக இணைத்தொள்ளோம்.

Maaveerar Naal 2011

Maaveerar Naal 2011

Seeman Maaveerar Nall Speech At Ambathur 2011


Seeman Maaveerar Naall Speech At Ambathur 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரான்சில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின!

தமிழர் தாயகத்தில் மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் நவம்பர் 25ம் நாள் தொடங்குகின்ற மரபுக்கமைய, மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் ஆரம்பமாகியுள்ளன. இதனொரு அங்கமாக நேற்று வெள்ளிக்கிழமை (25-11-2011) பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன..,.... read more 


விடுதலைச்சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் மாவீரர் நாள்


மேதகு பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்தநாள் : 1000 பேருக்கு சக்கரை பொங்கல்

மேதகு பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்தநாள் : 1000 பேருக்கு சக்கரை பொங்கல்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்தநாள் விழா விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள வீரநங்கை செங்கொடி அரங்க வாயிலில் கொண்டாடப்பட்டது. ஆயிரம் பேருக்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், சங்கத்தமிழர், எழில் இமயன், சாராநாத்,  விடுதலை செல்லன் ஏராளமான விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டனர்........... read more 

போரில் இறந்தவர்களுக்கு ஒரு பூவை வைத்து வணங்க முடியாத நிலையே இப்போது காணப்படுகிறது! இலங்கை நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி


போரில் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பூவைத்து வணங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே எமது நாட்டில் காணப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்................ read more 

இமயம் முதல் ஈழம் வரை இந்து நாடு – அர்ஜீன் சம்பத்!

கடந்த 23ம் தேதி புதன்கிழமை விடியற்காலை 6.30 மணியளவில் ஸ்ரீலங்கா ஹிந்து சுரக்சா பரிசத்தின் துவக்க விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்புப் பூசையுடன் துவக்கப்பட்டது. ஏற்கனவே முடிவு செய்தபடி இதனை உருவாக்கிய அர்ஜீன் சம்பத், பிரமோத் முத்தாலிக் இந்த இயக்கத்திற்கு அமைப்பாளராகவும், தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.......... read more 

சிறுசிறு அபிவிருத்திகள் அல்ல- அரசியல் உரிமையே முக்கியம்- யாழ்.ஆயர்!


சிறுசிறு அபிவிருத்திகள் அல்ல- அரசியல் உரிமையே முக்கியம்- யாழ்.ஆயர்!

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளை பெறும் போதுதான் உண்மையான அமைதியும் சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படும் என்று யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதி ஜென்ரினஸ் கிறிஸ்ரியிடம் தெரிவித்துள்ளார்.......... read more 

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு சூரிச் சிவன் கோவிலில் நினைவாலயம் திறப்பு!


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு சூரிச் சிவன் கோவிலில் நினைவாலயம் திறப்பு!

சுவிஸ் சூரிசில் அமைந்துள்ள அருள்மிகு சிவன் கோவிலில் இதுவரை காலமும் தாயகவிடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக பூசை வழிபாடு நடைபெற்று வந்தது, நேற்று முதல்  தாயக்கனவுடன் சாவினைத் தழுவியவர்களுக்காக நினைவாலையம் விசேடமாக அமைக்கப்பட்டு, மண்டபம் நிறைந்த அடியார்கள் முன்னிலையில் திறப்பு விழா  நடாத்தப்பட்டது.

மாலை 19.00 மணியளவில் சிவவழிபாட்டுடன் ஆரம்பமாகி நினைவாலயம் தமிழகத்தில் இருந்து வருகை தந்த விடுதலை இராஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைசுடரேற்றி அகவணக்கம், மலர்வணக்கம், மலர்வணக்கம், தீபவழிபாடு, கவிதாஞ்சலி, எழிச்சி உரை, வாழ்த்துச் செய்திகள் போன்ற அம்சங்களோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ......... read more 

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பெரும்போக வேளான்மை அழிவு – விவசாயிகள் கவலை


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பட்டிப்பளை மற்றும் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சில பகுதிகளில் வேளான்மை நிலங்கள் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் சிறிதளவு பெருக்கெடுத்துள்ளதனால் இந்த நிலையேற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்........... read more 

வவுனியா, மெனிக் பாம் இடம்பெயர் முகாம் மாணவர்கள் கஸ்டப்படுகின்றனர்


வவுனியா, மெனிக் பாம் இடம்பெயர் முகாம் மாணவர்கள் கஸ்டப்படுகின்றனர்

வவுனியா மெனிக் பாம் இடம்பெயர்ந்த முகாமில் உள்ள மாணவர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குள்ள 1500 போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 60 ஆசிரியர்கள் வரை பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் கல்வி புகட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடம் புகட்டுவதில் ஆசிரியர்கள் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்........... read more 

இலங்கையில் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச ஆணைக்குழு அவசியம்!- அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றச்சாட்டு விசாரணை தொடர்பில் தோல்வியடைந்தால், சர்வதேச சுயாதீன ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் மூவர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்............. read more 

இன்று வழக்கமான நாள் தான், ஆனால் பாதுகாப்பு அதிகரிப்பு“ – யாழ்.படைகளின் தளபதி

யாழ்ப்பாணத்தில் இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை சுவரொட்டிகளை ஒட்டி கொண்டாடுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதனை படையினர் தடுத்து விட்டதாகவும் சிறிலங்காவின் யாழ்.படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்............ read more 

57 வது அகவை காணும் வீரப் பெரும் தலைவா உங்கள் பின்னால் உலகத் தமிழினம்!

57 வது அகவை காணும் வீரப் பெரும் தலைவா உங்கள்  பின்னால் உலகத் தமிழினம்! நீங்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலை அறிந்திருக்கிறோம். மகாபாரதம் கேட்டிருக்கிறோம், இராமாயணம் படித்திருக்கிறோம். கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் .. ஒன்றல்ல இரண்டல்ல .. பல நூறு தடவைகள் எமக்குள் எதிரொலி செய்கிறது. ஆயினும் என்ன? இவை யாவற்றுள்ளேயும் புதைந்து கிடக்கின்ற அற்புதத்தை – வாழ்க்கையின் உன்னதத்தை–ஊடுருவிப் பார்க்கின்ற சிந்தனைத்திறன்–நானறிந்தவரை–இதுவரை யாருக்கும் ஏற்பட்டதில்லை உங்களைத்தவிர........ read more 

இலங்கையின் போர்க் குற்றம் - வெளிநாடுகளின் ஆலோசனை தேவையில்லை - மூச்சு திணறும் கோத்தபாய..,?! ஈழதேசம் செய்தி..!


  • நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பொது மக்களுக்கு வெளியிடுவதற்கு முன் தீர்ப்பு வேண்டாம் என்று ஜி.எல்.பிரிஸ் கெஞ்சி உள்ளார். 
  • யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப திட்டங்களில்லை என்கிறார் ஐ.தே.க.,வின் மற்றும் ஒரு எம்.பி., விஜயகலா மகேஸ்வரன். 
  • தமிழ் இன சங்காரத்தை விரைந்து முடிப்பதற்கான வரவு - செலவு திட்டம். இராணுவ ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கிறது என்கிறார் சுரேஷ் எம்.பி.,  
  • இன விகிதாசாரத்தை நோக்காகக் கொண்டதே மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம், இந்த சலுகையை சகலருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார் செல்வராசா எம்.பி.,............ read more 

தமிழர் புனர்வாழ்வுக்கழக முக்கிய செயற்பாட்டாளர்கள் 5பேருக்கு உயர்நீதிமன்றம் பிடியாணை


தமிழர் புனர்வாழ்வுக்கழக முக்கிய செயற்பாட்டாளர்கள் 5 பேருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தமிழ் மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை பெற்றுக்கொடுத்தல் மற்றும் தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல் என்பவற்றை முன்னிலைப்படுத்தி தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அதனை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது........... read more 

அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வழங்கிய அறிக்கையின் நகல் அரசிடம் சிக்கியது


அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது........... read more 

பிரித்தானிய தமிழ் மாணவர்களினால் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு


பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2011 நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். லண்டன் சவுத் பேங் பல்கலைக்கழகம் உட்பட பிரித்தானியாவின் பிரசித்தி பெற்ற எட்டு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியங்களும் சேர்ந்து சிறப்பித்த இவ் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

Friday, 25 November 2011

தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேசிய எதிர்ப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேசிய எதிர்ப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்
ரணிலிடம் மனோ கணேசன் கோரிக்கை

தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் இனப்பிரச்சினை, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமி ழ்க் கைதிகள் விடயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவ் வாறாயின் நாமும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கி றோம் என ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவி ற்கு தெரிவித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.......... read more

பிரான்சில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


தமிழர் தாயகத்தில் மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் நவம்பர் 25ம் நாள் தொடங்குகின்ற மரபுக்கமைய, மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
இரத்தானம், வணக்க தலங்களில், வழிபாட்டு பூசைகள், மாவீரர் குடும்பங்களை கௌரவித்தல் என மாவீரர்களை நினைவேந்தும் வகையிலான பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன........... read more 

50,000 விளக்குகள் மூலம் அமைக்கப்பட்ட பிரிட்டனின் பிரம்மாண்ட கிறிஸ்மஸ் ஒளிப்படைப்பு


கிறிஸ்துமஸ் கால நிகழ்வுகள் களைகட்டி வரும் வேளையில் ஒரு கலைஞர் 50,000 ஒளி விளக்குகளைப் பயன்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான முறையில் பூக்கள் தரையில் படர்ந்திருப்பது போன்று வடிவமைத்துள்ளார்.
இரவில் இவை அனைத்தும் ஒன்றாக  ஒளிரும்போது அழகின் முழு உருவமாய் தெரிகின்றன. இதற்கான திட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே தம் மனதில் உதித்ததாக Ed Manders குறிப்பிட்டார். ............. read more 

மாவீரர் தினக்கொண்டாட்ட ஏற்பாடுகளைத் தடுப்பதில் பாதுகாப்புத் தரப்பு முழு அளவில் ஈடுபாடு?

இலங்கையின் வடபுலத்தினில் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினக்கொண்டாட்ட ஏற்பாடுகளைத் தடுப்பதில் பாதுகாப்புத் தரப்பு முழு அளவினில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக வன்னியிலும் குடாநாட்டிலும் பெருமளவினில் பொலிஸார் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக பிரதான வீதிகளெங்கும் பெருமளவினில் பொலிஸார் வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்............ read more 

ராஜீவ் காந்தி ஒரு துரோகி என்கிறார் லங்காஸ்ரீ வானொலிக்கு வழங்கிய பேட்டியில் “உச்சிதனை முகர்ந்தால் தயாரிப்பாளர் புகழேந்தி


இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக சர்வதேசத்திற்கு பொய் கூறிவரும் சிங்கள தலைவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கான கருவியே உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் என்கிறார் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி.
அவர், லங்காஸ்ரீ வானொலிக்கு இன்று அளித்தபேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி மேலும் தெரிவிக்கையில்,
புனிதவதி என்ற அந்தச் சிறுமி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரிகளின் அடையாளம் எனத் தெரிவித்துள்ளார்................ read more 

ஆணைக்குழுவின் அறிக்கையின் முக்கிய பகுதியை அழிக்கத் திட்டமிடும் மகிந்த!

ஆணைக்குழுவின் அறிக்கையின் முக்கிய பகுதியை அழிக்கத் திட்டமிடும் மகிந்த!



இலங்கையில் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும் அக் குழுவின் 400 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதி இருட்டிப்புச் செய்யப் போவதாகவும் அவ் அறிக்கையின் முழுவிபரத்தையும் அவர் வெளியிடப் போவதில்லை எனவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று சந்தேகம் தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ளது............ read more 

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதியில்லை! நாடாளுமன்றில் சிறிதரன்!!


நாட்டில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களுக்கு பூ வைத்து அவர்களை நினைந்து வணங்குவதற்குக் கூட நம் நாட்டில் அனுமதி மறுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இத் துர்ப்பாக்கிய நிலை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார். ............... read more 



இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதியில்லை! நாடாளுமன்றில் சிறிதரன்!!

மேற்குலகநாடுகளுக்கு புலிமுத்திரை குத்தியதால் உதவிகள் தடைப்பட்டு பொருளாதாரம் பின்னடைவு; சபையில் கருஜயசூரிய. குற்றச்சாட்டு

நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டால், உலக முதலீட்டாளர்கள் தாமாகவே உதவ முன்வருவார்கள். உதவி வழங்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புலி முத்திரை குத்தப்பட்டதாலேயே உதவிகள் தடைப்பட்டன. இதனால்தான் பெரும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய.................... read more 

அரசாங்கம் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகிறது -ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மாணவர்கள்


அரசாங்கமே ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
மாணவர்களுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

சனிப்பெயர்ச்சி பாதகமாம் - சோதிட ஆலோசனைப்படி அமைச்சரவையை மாற்றவுள்ளார் மகிந்த

Posted Imageசோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்தமாதம் 23ம் நாள் அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சனிப்பெயர்ச்சியால் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்ளில் சிறிலங்கா அதிபருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சோதிடர்கள் பலர் ஆலோசனை கூறியுள்ளனர்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கும் என்ன நடந்தது - சிறீதரன் :


இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கும் என்ன நடந்தது - சிறீதரன் :
 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்தவர்களுக்கும் ஆயர் ஒருவரின் உதவியுடன் சரணடைந்த 100க்கு மேற்பட்டோருக்கும் என்ன நடந்தது என்ற தகவலை அரசாங்கம் இன்னும் வெளியிடாது இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விசனம் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்........... read more 

லண்டனில் பிரமாண்டமாய் அமைக்க படும் மாவீரர் துயிலுமில்லம் -அதை காண மக்கள் குதுகலம் .. ! -


லண்டனில் பிரமாண்டமாய் அமைக்க படும் மாவீரர் துயிலுமில்லம் -அதை காண மக்கள் குதுகலம் .. ! -



பிரித்தானியாவில் இதுவரை இடம்பெற்றிராத வரலாற்று சிறப்பு மிகு மாவீரர் மண்டபம் அமைக்க பட்டு வருகின்றது ./
தடவையில் நிற்க கூடிய வகையிலான மண்டபமும் ..அத்துடன் ஐயாயிரம்
வாகனம்கள் நிறுத்தவல்ல வாகன தரிப்பிடமும் அமைக்க பட்டு வருகின்றன .
அத்துடன் சிறப்பு அம்சமாக தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறான........... read more 

தமிழ் மக்களுக்கு வழங்கியவை போதுமானவை..

தமிழ் மக்களிற்கு வழங்கியவை போதுமானதென பாதுகாப்புச் செயலர் கூறுகின்றார். 
அரசியல் தலைவர்கள் கூடித் தீர்மானிக்க வேண்டிய விடயத்தை அவரால் எவ்வாறு தீர்மானிக்க முடியும். இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமது நாட்டிற்கு பொருத்தமற்ற ஒன்று. இம்முறையினையும் நாம் ஒழிக்க வேண்டும். ஊழல் மோசடிகள் ஏகாதிபத்தியம் போன்ற பிரச்சினைகளை ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்........... read mor

முதலில் தீர்வு! பின்னரே தெரிவுக்குழு..

அரசுடன் நடத்தப்படும் பேச்சுக்களில் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பரிசீலிக்கும் என்று தெரிவித்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.............. read more 

மாவீரர் வாரம்: கோவில் மணி ஓசைக்கு கடற்படையினர் தடை !

மாவீரர் வாரம் ஆரம்பித்து விட்டதனால், காரைநகரில் உள்ள இந்து ஆலயம் எதிலும் மணி ஓசை எழுப்பக்கூடாது என்று கடற்படையினர் தடைவிதித்துள்ளனர். காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் கடற்படையினரின் இந்த அடாவடித்தனத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீர்கள் நினைவாக நவம்பர் 21ஆம் திகதியில் இருந்து மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுவது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வழமை நிகழ்வாக இருந்தது............... read more 

பேச்சுக்களில் தீர்வு எட்டப்படாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு புறக்கணிக்கப்படும் - த.தே.கூ


அரசுடன் நடத்தப்படும் பேச்சுக்களில் தீர்வு எட்டப்படாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு புறக்கணிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கு 6 மாத காலத்துக்குள் தீர்வைக் காணும் நோக்குடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தெரிவுக் குழுவுக்கு எதிர்க் கட்சிகள் வரிசையில் இருந்து 12 பேர் நியமிக்கப்பட வேண்டும்............ read more 

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர்ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Imperial's Tamil society launch 2011's 'Breaking the Silence'




Tamil societies in universities across London have come together to hold 'Breaking the Silence' - a fortnight of exhibitions aimed at raising awareness about the war crimes and genocide comitted against the Tamils in the North-East............... read more 

மலையக மக்களின் பாரம்பரிய பொருட்காட்சி _


  அட்டன் பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுநர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலையக மக்களின் பாரம்பரிய பொருட்களைக் கொண்ட கண்காட்சி ஒன்று நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

இந்தக் கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை வரை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது..................... read more 

வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது: ஐ.தே.க.


  பாதுகாப்பிற்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வில்லை. மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலை தூக்கி விட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிரான் விக்கிரம ரட்ன குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பில்லை. நாட்டில் பொது மக்களுக்கு பாதுகாப்பில்லை. இவ்வாறானதொரு மோசமான ஜனநாயக விரோத சூழலிலேயே நாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ........ read more 

படையினரதும் பொலிஸாரினதும் மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம் இனவாதத்தை நோக்காகக் கொண்டது: செல்வராசா


படையினரதும் பொலிஸாரினதும் மூன்றாவது பிள்ளைக்கான சன்மானம் இனவாதத்தை நோக்காகக் கொண்டது: செல்வராசா 
  வரவு செலவுத்திட்டத்தில் முன் மொழியப்பட்டுள்ளவாறு படையினரதும் பொலிஸாரினதும் மூன்றாவது குழந்தைக்காக ஒரு இலட்சம் ரூபா சன்மானம் என்ற ஊக்குவிப்பானது இனவிகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தை கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட எம்.பி.பொன்.செல்வராசா நேற்று சபையில் தெரிவித்தார். ............ read more 

சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்


சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்
 
கார்த்திகை எங்கள் இனத்துக்கும் மனத்துக்கும் எழுதுகிற கதையை சொல்லத்தவித்து துவழும் உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது.
புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு புதுவை இல்லையென்றும் புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு ஒரு பாவலனும் இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு கல்லறைத்துண்டுகளை கவியாக்கி காலக்கடமையை அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம்.

Thursday, 24 November 2011

இன்று பெண் கொடுமைக்கு எதிரான நாலாம் ............

இன்று பெண் கொடுமைக்கு எதிரான நாலாம் ...... பல நண்பர்கள் தங்களது பகுதியில் 
தகவல் சொன்னார்கள் மகிழ்ச்சி ..... [ என்னக்கு மட்டும் தான் ] பெண்களின் நிலை இதோ ஐ நா வின் அறிக்கையில் இருந்து சில துளிகள் ------------
உலக அளவில் பெண் கொடுமையில் நாலாவது இடம் இந்தியா ,
இந்திய மாநிலங்களில் மூனாவது இடம் தமிழகம் ,
மாற்றம் வேண்டும் -----

பொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வேஸ்ட்?

சில சேனல்கள் திரைப்படப் பிரபலங்களிடம் மக்களுக்கான ஆலோனைகளை வரிவரியாகக் கேட்டு ஒளிபரப்பின. சில சேனல்கள், பட்டிமன்றங்களில் சுதந்திரம் குறித்து உரைவீச்சை ஒளிபரப்பின. இந்தச் சேனல்களின் சுதந்திர கொண்டாட்டத்திற்கிடையே, பொதிகை தொலைக்காட்சியில் வெளியான ஒரு நிகழ்ச்சி, இன்றைய இளைய தலைமுறையின் உண்மையான முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது.


இந்த உணர்வை ஊட்ட வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்தான் பெருமளவு உள்ளது. இதைக் கடமையாகச் செய்யாமல், கவனமாகக் கையாண்டால், சுதந்திரம் பெறுவதற்காக வலியை அனுபவித்த தியாகிகள் இன்று நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்............. read more 

சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை

சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை
ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65  போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். 
அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா?
 பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.  


       சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள்.
 சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது.