அரசாங்கமே ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
மாணவர்களுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பெருமிதம் பேசிய போதிலும் தமது பல்கலைக்கழகத்தில் அவ்வாறான நிலைமை கிடையாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேச்சாளர் பிரபாத் இந்திக்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு எதிராக சரியான குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தாது இதுவரையில் 67 மாணவர்கள் வகுப்புத் தடைக்கு உட்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி நடவடிக்கைகளுக்காகக் கூட தற்பாது மாணவர்கள் ஒன்று கூடுவதில்லை அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒன்று கூடினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment