Translate

Friday, 25 November 2011

சனிப்பெயர்ச்சி பாதகமாம் - சோதிட ஆலோசனைப்படி அமைச்சரவையை மாற்றவுள்ளார் மகிந்த

Posted Imageசோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்தமாதம் 23ம் நாள் அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சனிப்பெயர்ச்சியால் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்ளில் சிறிலங்கா அதிபருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சோதிடர்கள் பலர் ஆலோசனை கூறியுள்ளனர்.



இதனால் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

வரவுசெலவுத் திட்ட விவாதங்கள் முடிந்த பின்னர், டிசம்பர் 23ம் நாள் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்குமாறு சோதிடர்கள் சிறிலங்கா அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சமல் ராஜபக்ச பிரதமராகவும், நிமால் சிறிபால டி சில்வா சபாநாயகராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியில் இருந்து பசில் ராஜபக்சவை நீக்கி விட்டு, அவருக்கு அனைத்துலக உறவுகளில் தொடர்புபட்ட அமைச்சு ஒன்று வழங்கப்படவுள்ளது.

மகிந்தானந்த ஆளுத்கமகே இளைஞர் விவகார அமைச்சராகவும், அவரது பிரதி அமைச்சராக நாமல் ராஜபக்சவும் நியமிக்கப்படவுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், பொருளாதார விவகாரங்களை கவனிக்கும் மூத்த அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படவுள்ளதாகவும், எல்லா அமைச்சர்களினது துறைகளும் முற்றாக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அந்த இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinapp...?20111125105097 

No comments:

Post a Comment