லண்டனில் நாளை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்திக்கின்றனர்.

நாளை மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் லண்டன் தமிழர்களைச் சந்திக்கவுள்ளனர். லண்டன் ஹரோ பகுதியில் உள்ள அலெக்ஸ்ஸான்ரா வீதியிலுள்ள சொரஸ்ரியன் சென்ரரில் நாளைமாலை சுமார் 5.30 மணிக்கு இச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இச் சந்திப்பின்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க உள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தீர்வு தொடர்பாக கலந்துரையாட உள்ளதாகவும் அறியப்படுகிறது.......... read more







சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனுவொன்றைக் கையளித்துள்ளது.
திருநெல்வேலிப் பகுதியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் நுளைய முயன்ற ஆயுதந்தரித்த சில நபர்களை துரத்திச் சென்ற பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நேற்றிரவு மோதல் உருவாகியுள்ளது. மர்ம நபர் என்ற போர்வையில் இவ்வாறு வீடுகளுக்குள் நுளைய முயன்றவர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது, மக்களைத் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். இதனையடுத்து படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் பதிலுக்கு இராணுவத்தினரை பொதுமக்கள் சிலர் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன............
அன்னை புபதிக்குப் பின்னர் ஒரு பெண் தனது உயிரை காந்தியின் தேசத்திற்கு காந்தியம் பற்றி போதிக்க தியாகம் செய்துள்ளார். அவரின் தியாகத்தின் முன் நாம் தலைவணங்கி நிற்கிறோம். அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நாடுகடந்த தமிழீழ் அரசின் ஜனாநாயக வாதிகள்ழும் பங்குகொள்கின்றது.............



இந்து நாளிதழ் இலங்கை அரசின் ஒரு கைக்கூலி என்பது யாவரும் அறிந்ததே. பல வருடங்களாக அவ்வாறு செயல்பட்டு வந்த இந்த நாளிதழ் தற்போது அந்தர் பல்டி அடித்து குத்துக்கரணம் போடுகிறது. சமீபத்தில் கோத்தபாய ராஜபக்ஷ அதிகம் பேசக்கூடாது அவரால் காரியங்கள் பல கெட்டுப்போகிறது என இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் எழுதியிருந்தார். தற்போது வெளியான மற்றுமொரு ஆசிரியர் தலையங்கத்தில் தமிழர்களுக்கு உடனடித் தீர்வு ஒன்றைவைக்கவேண்டும் எனவும் அவர் எழுதியுள்ளது, இலங்கை அரசை மட்டுமல்ல பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..............







