தெற்காசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக்கின் இலங்கை விஜயம் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளெக் நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை, இலங்கையில் அவர் விஜயத்தை மேற்கொள்ளவிருந்தார். எனினும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அடுத்தே பிளெக்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். எனினும் பிளெக்கின் இலங்கை விஜயம் எப்போது இடம்பெறும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment