Translate

Sunday, 30 December 2012

கம்பளையில் தமிழ் வர்த்தகர் கடத்தல் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு: - மனோ கணேசன்

News Service
கம்பளை நகரில் கோவிந்தசாமி அருணாசலம் பிரபாகரன் என்ற 56 வயது தமிழ் வர்த்தகர் நேற்று இரவு கடத்தப்பட்டுள்ளார். அவர் பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையில் குடும்பத்தவர்கள் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது,
நேற்று இரவு 9 மணியளவில் கம்பளை கண்டி வீதியில் அமைந்துள்ள தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு மலபார் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு திரும்பிய கோவிந்தசாமி அருணாசலம் பிரபாகரன், வீட்டு வாயிலில் வைத்து வெள்ளை வேனில் வந்த நபர்களால் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டுள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கம்பளை போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலும் கடத்தப்பட்டவர் தொடர்பாக எந்த வித தகவல்களும் கிடைக்க வில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment