கிழக்கு தமிழ் மக்களால் தோற்கடிக்கப்படும்:சுரேஷ் எம்.பி
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் தமிழ் மக்களால் மிக மோசமாகத் தோற்கடிக்கப்படுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஒரு வருடத்துக்கு முன்னரே கிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தி கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என்பதை எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வில் நாட்டுவதற்கான காய் நகர்த்தலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பேரிடியாக இருக்கும்.
இதை உணர்ந்து தமிழ் மக்கள் வாக்களிக்க உறுதி பூண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களில் 85 சதவீதமானோர் வாக்களித்தால் கிழக்கு மாகாணத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும்.
எனவே எந்த அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து தமிழ் மக்கள் தவறாது வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment