பிரித்தானியா வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கை அறிவிப்பை, ஏனைய மேற்கு நாடுகளும் பின்பற்றலாம் என்று அச்சம் கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியா, சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சிறிலங்காவில் தேசியவாதம் எழுச்சி பெற்றுள்ளதாலும், மேற்கு நாட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதாலும், பாலியல் குற்றங்கள் அதிகமாக இடம்பெறுவதாலும் அவதானமாக இருக்கும்படி பிரித்தானியா தமது குடிமக்களை எச்சரித்துள்ளது.
இது சிறிலங்காவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பயண எச்சரிக்கை அறிவிப்பை ஏனைய பல நாடுகளும், குறிப்பாக மேற்கு நாடுகள் பின்பற்றலாம் என்று சிறிலங்காவுக்கு அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, “உண்மை நிலவரம் குறித்து அந்த நாடுகளுக்கு விளக்கமளிக்குமாறு வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காவில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, யாரும் எங்கும் செல்லாம், போதிய பாதுகாப்பு உள்ளது.
பிரித்தானியாவின் பயண எச்சரிக்கை குறித்த நாம் அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் அதை ஏனைய நாடுகளும் பின்பற்றக் கூடும்.
அது நாட்டின் பெயரையும், சுற்றுலாத்துறை வருமானத்தையும் பாதிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 14ம் நாள் வெளியிடப்பட்ட இந்த பயண எச்சரிக்கையை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் கடந்த 23ம் நாள் புதுப்பித்தது.
பயண எச்சரிக்கை குறிப்பை நீக்குமாறு கடந்த 20ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரித்தானியத் தூதுவரை சந்தித்து கேட்டுக் கொண்ட போதும், பிரித்தானிய அதைக் கவனத்தில் எடுக்கவில்லை.
இதையடுத்து பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விரைவில் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசவுள்ளார்.
மேற்கு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் வருகையை பிரித்தானியா வெளியிட்ட எச்சரிக்கை பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், ரஸ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பரப்புரைகளை சிறிலங்கா தீவிரப்படுத்தவுள்ளது.
இந்த நாடுகளில் உள்ள தலா 5 நகரங்களில் வீதி நிகழ்வுகள், வணிகச்சந்தை, உணவுத் திருவிழா, இரத்தினக்கல் மற்றும் அணிகலன்கள் கண்காட்சி போன்றவற்றை சிறிலங்கா மூன்று நாட்கள் நடத்தவுள்ளது.
இதற்கான உத்தரவை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
http://www.puthinapp...?20120827106872

No comments:
Post a Comment