நாகர்கோவிலில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
தேர்தல் சமயத்தில் அதிமுகவை அழித்து விடுவோம் என கூறிய பலர் இன்று காணாமல் போய் விட்டனர் என்றார்.
இலங்கையில் 3 லட்சம் தமிழ் பெண்கள் விதவையாக காரணம் திமுக தலைவர் கருணாநிதி என குற்றம்சாட்டிய ராதாரவி, தற்போது டெசோ மாநாடு நடத்தி மக்களை குழப்புகிறார் என்றார்.
கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாத குஷ்பு, இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார் என்றார். |
No comments:
Post a Comment