
புங்குடுதீவின் பெருமைகளையும் புகழையும் பறைசாற்றும் "புங்குடுதீவு மான்மியம்" என்னும் நூல் அரிய நூல் கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது. ![]() |
யாழ்ப்பாண குடாநாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றாக இருந்து தற்போது பாலம் ஒன்றினால் இணைக்கப்பட்டுள்ள புங்குடுதீவு கிராமம் உலகெங்கிலும் புகழ் பரப்பும் ஒரு ஊராக தற்போது பிரகாசிக்கின்றது. அதற்கு காரணங்கள் பலவுள்ளன. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான வர்த்தகப் பெருமக்கள் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் வர்த்தக நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் தமது கிராமத்திற்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தார்கள். |