Translate

Saturday, 12 May 2012

சனல் 4வுக்கும் அல்ஜசீராவுக்கும் கடும் போட்டி- கொலைக்களம் முன்னணியில்!


சனல் 4வுக்கும் அல்ஜசீராவுக்கும் கடும் போட்டி- கொலைக்களம் முன்னணியில்!

பிரித்தானியாவின் புகழ்பெற்றBAFTA  விருதுக்காக ரேடியோ ரைம்ஸ் நடத்தும் நேயர் கருத்துக்கணிப்பில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்படம் தற்போது முன்னணிக்கு வந்துள்ளது.

இதுவரை நாளும் அல்ஜசீரா தயாரித்த பஹ்ரெய்ன் கிளர்ச்சி குறித்த ஆவணப்படமே முன்னணியில் இருந்தது. சனி அதிகாலை தொடக்கம் சனல் 4 ஆவணப்படும் முன்னணிக்கு வந்துள்ளது. அல்ஜசீராவின் ஆவணப்படும் இரண்டாம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை அகாடமி 1954ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் துறை சார்ந்த சிறந்த படைப்புகளுக்கு BAFTAவிருதுகளை வழங்கி வருகிறது.
2012ஆம் ஆண்டுக்கான BAFTA விருதுக்கு, சமகால விவகாரங்கள் குறித்த பிரிவில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ உள்ளிட்ட 4 ஆவணப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரேடியோ ரைம்ஸ் இணையத்தளத்தில் இந்த நான்கு ஆவணப்படங்கள் தொடர்பாகவும் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த செய்தி பதிவேற்றம் செய்யப்படும் இவ்வேளையில் சனல் 4வின் சிறிலங்காவின் கொலைக்களம் 18,43,708 வாக்குகளை பெற்று 50.6 வீதத்துடனும், அல்ஜசீராவின் பஹ்ரெய்ன் கிளர்ச்சி குறித்த ஆவணப்படும் 18,35,121 வாக்குகளை பெற்று 49.82 வீதத்துடனும் உள்ளன.
ஏனைய இரண்டு ஆவணப்படங்களும் 3ஆயிரத்திற்கு உட்பட்ட வாக்குகளுடன் மிகவும் பின்தங்கியுள்ளன.
இந்த இணைப்பில் நீங்களும் வாக்களிக்கலாம்  http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs—which-should-win#pd_a_6166811

No comments:

Post a Comment