Translate

Saturday, 18 February 2012

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: நாம் தமிழர் கட்சி


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது.
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு கிராமங்களில் நெருக்கமாக தஞ்சமடைந்திருந்த தமிழர்களை சுற்றி வளைத்து இலங்கை இராணுவத்தினர் நடத்திய கொடூரமானத் தாக்குதலில் மட்டும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொன்றொழிக்கப்பட்டனர். அப்பட்டமான, திட்டமிட்ட இந்த இன அழித்தல் உலக நாடுகளையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது........... READ MORE 

இலங்கையர் உள்ளிட்ட 40 சிறுவர்களை தடுத்துவைத்த குற்றத்திற்கு பிரித்தானியா நட்டஈடு


சிறுவர், சிறுமியர்களை இளைஞர்கள் என தடுத்து வைத்திருந்த விவகாரத்தில் சுமார் 40 சிறுவர், சிறுமியர் அகதிகளுக்கு பிரித்தானிய அரசு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக செலுத்தியுள்ளது.
சிறிய வழக்கு ஒன்றிற்கு பிரித்தானியா அதிக நஷ்டஈடு வழங்கிய விவகாரமாக இது மாறியுள்ளதென பிரித்தானியாவின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.............. READ MORE 

சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தபால் அட்டைகள் வெளியீடு


மக்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தபால் அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஈழத் தமிழினத்தின் மீது சிறிலங்காவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு, சுயாதீன சர்வதேச விசாரணையின அவசியத்தை, இந்த தபால் அட்டைகள் வலியுறுத்தி நிற்கின்றன................. READ MORE 

இலங்கையை இந்தியா எதிர்க்க வேண்டும் - ஜெனீவாவில் களமமைக்க வேண்டும் - சீமான்.


இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேசத்தின் நிலைப்பாட்டிற்கு இந்திய மத்திய அரசு ஆதரவு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இதற்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என சீமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி போர் நடத்திய ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது.

விக்கிலீக்ஸ்: பிள்ளையான் மீது மதிப்பு வைத்திருக்காத தமிழர்கள்!


பிள்ளையானுக்கு தமிழர்களிடம் மதிப்பு இல்லை என்று அமெரிக்கா கருதி இருக்கின்றது.

இவர் முறையாக கல்வி கற்காதவர் என்பதே இதற்கான காரணம் என்றும் கண்டு இருக்கின்றது.

இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரிப்பு - ஜெனீவாவில் பேச வேண்டியது கட்டாயம்


சர்வதேச நன்மதிப்பை வெல்ல இலங்கை மீது சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நெருக்கடிக்குழு வலியுறுத்தியுள்ளது. 
இலங்கை இராணுவம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அதன் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை என சர்வதேச நெருக்கடிக்குழுவின் இலங்கைப் பணிப்பாளர் அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.

பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது !

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதியுத்ததின்போது பாஸ்பரஸ் என்னும் எரி குண்டுகளை இலங்கை அரசாங்கமானது பாவித்துள்ளமைக்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட இப் புகைப்படமானது இதனை துல்லியமாகக் காட்டுகிறது. இப் புகைப்படத்தை பகுப்பாய்வு செய்த வல்லுனர்கள் பொஸ்பரஸ் குண்டுகளின் தாக்கத்தால், படத்தில் காணப்படும் உடல் கருகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இப் புகைப்படத்தில் காணப்படும் உடலமானது பெரிதும் எரியாமல், மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் எரியாமலும் காணப்படுகிறது. இருப்பினும் குண்டு பட்ட இடம் மட்டும் படு மோசமாக எரிந்தும், தசைகளை மற்றும் தோலை ஒரு பிளாஸ்டிக் போல உருக்கி எரியவைத்துள்ளது பதிவாகியுள்ளது.

வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் - US – தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் இலங்கைக்கே- கோத்தாபய


சொல்கிறது கொழும்பு ஊடகம்:-தமிழில் GTN
வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் - US – தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் இலங்கைக்கே-  கோத்தாபய
 வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் - US – தீர்மானங்களை எடுக்கும் சுதந்திரம் இலங்கைக்கே – கோத்தாபய – சொல்கிறது கொழும்பு ஊடகம்:-
இலங்கையின் வடக்கில், உள்ள இராணுவ  முகாம்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில், இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உயர் அதிகாரிகள் இது குறித்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளனர்....... READ MORE 

நன்மதிப்பை வென்றெடுக்க சுயாதீன விசாரணைகள் அவசியமானது –ICG


நன்மதிப்பை வென்றெடுக்க சுயாதீன விசாரணைகள் அவசியமானது –ICG
நன்மதிப்பை வென்றெடுக்க இலங்கையில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டியது மிகவும் அவசியமானது என சர்வதேச அனர்த்தக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச போர்க்குற்ற விசாரனை அனாவசியம் - சுமந்திரன்!


சர்வதேச போர்க்குற்ற விசாரனை அனாவசியம் - சுமந்திரன்!
  •  
  •  
  •  
  •  
View Results


செய்தி-போர்க்குற்றத்திற்கு சர்வதேச சுயாதீன விசாரனை அனாவசியமான ஒன்று என தமிழ்த்தேசியக் கூட்மைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் சுமந்திரன் பி.பி.சி சிங்கள சேவைக்கு செய்தி என பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுவரை அவரும் வெளிவந்த செய்திகளை மறுக்கவில்லை.

CLICK :  http://rste.org/#

மக்கள் போராட்டம் என்பது என்ன

மக்கள் போராட்டம் என்பது என்ன? தமிழரின் சமகால அரசியலின் மாயைக் கற்பிதங்களை உடைத்தல். ஆய்வாளர் தமிழ்ச்செல்வன்  அவர்கள் GTV வெளிச்சம் நிகழ்ச்சியில் தினேஷுக்கு வழங்கிய செவ்வி 

இரவல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா?

-இதயச்சந்திரன்
 
'தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது' என்று, தனது 'சுயம் நிர்ணயம் உரிமை' என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர்.


தமது பிராந்திய பூகோள நலன்களுக்கு ஏற்றவாறு மனித உரிமை மீறல் என்கிற கருத்து நிலையை நிறுவுவதன் ஊடாக, கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை நிராகரிக்கும் வல்லரசாளர்களின் போக்கு இன்றுவரை மாறவில்லை என்பதனை பி.ஏ. காதரின் கூற்று புலப்படுகிறது.

பிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுவரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் !



http://youtu.be/ozGGAI0OuLw
பிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுவரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் !
ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கியநீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் பிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டுச் செல்லும் இந்த நடைப்பயணம் குறித்தான செய்திபிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளமைவிடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தாயத்தில் தமிழ் மீது ஆக்கிரமிப்பு போர்! புலத்தில் தமிழ் மெல்லச் சாகிறது!


தமிழ் மொழி இனம் சார்ந்தது. இனத்தின் அடையாளம். வாழ்வியல் நெறி. செம்மொழி அந்தஸ்த்தை உடைய மூத்த மொழி. இப்படி தமிழ் மொழியின் சிறப்பும், பெருமையும், தகைமையும், கனதியும் நீண்டிருக்கிறது.

இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்!


எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் கூட்டத் தொடரில் இந்தியா குறித்த இறுதித் தீர்மானத்திற்கு வரும் நிர்ப்பந்தத்திற்குத் தமிழர்கள் தள்ளப்படுவார்கள் என்றே நம்பப்படுகின்றது.
‘குட்டக் குட்டக் குனிபவனும் மடையன், குனியக் குனியக் குட்டுபவனும் மடையன்’ என்ற சொல்லாடல் தமிழில் பிரசித்தமானது. அது யாருக்குப் பொருந்துகின்றதோ, இல்லையோ… இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் நிச்சயம் பொருந்தி வருகின்றது........... read more 

ஈழப் பாடகி மீயா அமெரிக்காவுக்கும் உலகிற்கும் நடுவிரலைக் காட்டியது சரி காணொளி


உலக வல்லரசுகளின் அனுசரனையோடு தமிழினம் அழிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்த உலகிற்கு நடு விரலைக் காட்டிய இந்த தமிழ் பெண்ணுக்கு எமது நன்றிகள்
மாதங்கி மாயா அருள்பிரகாசம், மியா (M.I.A) எனும் பெயரில் அமெரிக்காவில் பொப் இசைப் பாடகியாக வலம்வருகின்றார். இவர் அமெரிக்காவின் Indianapolis இல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் Super Bowl XLVI போட்டியின் இடைவேளையில் நடைபெற்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற பாடகி மடோனாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

இராணுவ நீதிமன்றத்தினால் உண்மைகள் வெளிவராது! -சம்பந்தன்


அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள், அநீதிகள் மற்றும் உண்மைத் தன்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.

உதவிக்காக உரிமையை நாங்கள் இழக்க முடியாது -பா.அரியநேத்திரன் பா.உ


எமது நாட்டில் பலர் உதவிகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுத்து வாழலாம் என நினைக்கின்றார்கள். அவ்வாறு வாழ்வோமாக இருந்தால், எதிர்காலத்தை தொலைத்தவர்களாகவே வாழ்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளாரஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிரான்ஸ் புலி வலையமைப்பு ஜெனீவா பயணம்- கொழும்பு பத்திரிகை


எதிர்வரும் மனித உரிமைக் கவுன்ஸில் அமர்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் பிரான்ஸ் புலிகள் வலையமைப்பு ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதுஇலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் பிரான்ஸ் புலிகளின் வலையமைப்பு ஜெனீவா விஜயம் செய்ய உள்ளது.
தமிழரின் நீதிக்கும் நிரந்தர அமைதிக்குமாக மனித உரிமையை மதிக்கும் அணைத்து மக்களும் அணிதிரள்வோம் இனம்காக்க! 
19th session of the Human Rights Council, Geneva 27 February - 23 March 2012!
190 நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் சமுகம்! 
உலகளிவிலான அணைத்து ஊடகங்களின் சமுகம்!! 
இந்த இரண்டும் தொடங்கும் நாளில் மட்டுமே!!!

Friday, 17 February 2012

ஆர்ப்பாட்டத்தின் மீது அரசாங்கம் மேற்கொண்ட கொடூர தாக்குதலால் மக்களின் குரலை அடக்க முடியாது: ஐ.தே.க.


எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தின் மீது அரசாங்கம் மேற்கொண்ட கொடூர தாக்குதலால் மக்களின் குரலை அடக்க முடியாது என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.


அது மிக அமைதியான ஆர்ப்பாட்டம். அது கொடூரமாக அடக்கப்பட்டது. இதை அரசாங்கம் நீண்டகாலத்திற்குத் தொடர முடியும் என நான் எண்ணவில்லை. மக்கள் எந்தளவு உந்தப்பட்டுள்ளார்கள், எந்தளவு அரசாங்கத்துடன் இணக்கமில்லாமல் இருக்கிறார்கள் என நீங்கள் பார்க்க முடியும். ............ read more 

எங்கட ஊரைப் பார்க்க வேண்டும் போல உள்ளது“ - விஜய் தொலைக்காட்சியில் கலங்கிய கண்களுடன் கனடியன் தமிழச்சி சாரிகா அம்மா !!


எங்கட ஊரைப் பார்க்க வேண்டும் போல உள்ளது“
- விஜய் தொலைக்காட்சியில் கலங்கிய கண்களுடன் கனடியன் தமிழச்சி சாரிகா அம்மா !!

மறந்து போகுமோ... மண்ணின் வாசனை..!!
தொலைந்து போகுமோ... தூர தேசத்தில்..!!.......... read more 

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது போனால் சிறிலங்காவுடனான உறவு சிக்கலாகும் – இந்திய இராஜதந்திரி


சிறிலங்காவில் தமிழர்களின் வாழ்வுக்கு சமஉரிமையளிக்கும், 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது போனால், அது இந்திய – சிறிலங்கா உறவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் லகன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய, அனைத்துலக கருத்தரங்கில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப் போராட்டம் பற்றி தமிழகத்தில் அமெரிக்கா ஆய்வு: கொழும்பு கடும் அதிருப்தி


இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் தமிழ் நாட்டில் நடத்திவரும் ஆய்வு தொடர்பில் இலங்கை அரசு கடும் விசனத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அமெரிக்காதான்: இலங்கை அமைச்சர்


 முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளதாக இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் மேலும்,  ‘’அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.  
 

தமிழீழத்தில் பெண்களுக்கு இருந்த உரிமைகள் – கனடிய செனட்டர்


தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களிற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார்.

கனடிய மனிதவுரிமை மையம் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் செனட்டர்களிற்குமென நடாத்திய மாநாட்டில் மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொண்ட மேற்படி செனட்டரின் உரை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்ததுடன் அனைவருமே அவரது உரையின் சிறப்பை அவரிடம் தெரிவித்து பாராட்டினர்.

லண்டனில் 100 வது "பொன் மாலை பொழுது" அரங்கேறுகிறது.


அன்பு தமிழ் சொந்தங்களுக்கு..
1998  ஆண்டு "எம்மவர் கலை திறன்களின் சங்கமமாக ஆரம்பித்து
ஐரோப்பியாவின் மிக நீண்ட தொடர் கண்ட ஒரே ஒரு நிகழ்வாக
18 -02 -2012 சனிக்கிழமை லண்டனில் 100 வது "பொன் மாலை பொழுது"
அரங்கேறுகிறது.

மும்பை மாநகராட்சி​ தேர்தல்! சீமான் பரப்புரை செய்த இடங்களில், ராஜபக்ச அரசுக்கு துணைபோன காங்கிரஸ் படுதோல்வி


மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பரப்புரை செய்த அனைத்து இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 
மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க கடந்த 13ஆம் தேதி செந்தமிழன் சீமான் பரப்புரை செய்தார்.

தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியிலும், சயான் கோல்லிவாடாவிலும் சீமான் பேசினார். அப்போது ஈழத்தில் தமிழினத்தை அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசுக்குத் துணைபோன காங்கிரஸ் அரசுக்கு பாடம் புகட்ட தமிழர்கள் அனைவரும் காங்கிரஸை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

யாழில் தலைவிரித்தாடும் தமிழ்க் கொலைகள்: புகைப்படம் இணைப்பு !


யாழில் தலை விரித்தாடும் தமிழ்க் கொலைகள் தமிழையே தாய்மொழியாக கொண்ட யாழ்.குடாவில் தமிழ் எழுத்துப் பிழையுடன் தலைநிமிர்ந்து நிற்கும் நிலாவரைக் கிணற்று வழிகாட்டிப் பெயர்ப்பலகை. யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களிலும் தற்போது தாய்மொழி கொலை செய்யப்பட்டு வருகின்றமை வேதனைக்குரிய விடமாகும். யாழ் நிலாவரைக் கிணற்றுப் பிரதேசத்திற்கு செல்வதற்கான வழிகாட்டிப் பலகையில் தமிழ் கொலை எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதைப் பாருங்கள்.

அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்கப்போகும் மகிந்தர் !

இறுதிப் போரில் நடந்த குற்றங்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றமொன்றினை அமைப்பதாக, இலங்கையின் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா அறிவித்திருந்தார். தற்போது கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர்.ஜெனரல், கிரிஷாந்த டி சில்வாவை தலைவராகக் கொண்ட ஐந்து பேரடங்கிய குழு, விசாரணைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களுக்காக

ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள்.
ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது!

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - கோவி.லெனின்



              ன்னால் கற்க முடியாமல்போன கல்வியைத் தமிழகத்தின் தலைமுறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறிவையும் தமிழகத்தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா......... read more 

Thursday, 16 February 2012

என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு


2012/02/16 , 2:33 PM [UTC]
மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் பரப்புரை செய்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்தப்பாடுபடுவேன் என்று பேசினார்.

சிவராத்திரி விரத நாள் 19ஆ? 20ஆ? - Part 1 to 3

சிவராத்திரி விரத நாள் 19ஆ? 20ஆ? - Part 1


சிவராத்திரி விரத நாள் 19ஆ? 20ஆ? - Part 2

சிவராத்திரி விரத நாள் 19ஆ? 20ஆ? - Part 3


லண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ? 20ஆ?


லண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ? 20ஆ?

அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.

ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 மட்டுமே!

மன்னார், தரவன்கோட்டை வீதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கு மாதர் சங்கங்கள் எதிர்ப்பு-செல்வம் எம்.பி யிடம் மகஜர் கையளிப்பு


(எஸ்.திவ்யா)
மன்னார், தரவன்கோட்டை வீதியில் இராணுவத்திற்கு ஒதுக்கிய காணியில் இராணுவ முகாம் அமைப்பதை நிறுத்துமாறு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் வேண்டுகோள்விடுத்துள்ளன.

டக்ளஸ், பிள்ளையான், கருணா, குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது- அரசு அறிவிப்பு!


துணைஇராணுவ குழுக்களான டக்ளஸ், கருணா, பிள்ளையான், ஜிகாத் குழுக்கள் மற்றும் கோத்தபாயாவின் கீழ் இயங்கும் வெள்ளைவான் கடத்தல் குழு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.அவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளிலும், முக்கிய பொறுப்புக்களிலும் இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வலி.வடக்கில் 26ஆயிரம் மக்களின் நிலங்களை நிரந்தரமாக ஆக்கிரமிக்கிறது இராணுவம்?!

வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதியில் பலாலி படைத் தளத்தின் முன்னரங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புலத்திலிருந்து வயாவிளான் ஊடாகத் தெல்லிப்பழைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை நிரந்தரத் தடுப்பு வேலிகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். 

11வது நாளாக தொடரும் நீதிக்கான நடைப்பயணம்

இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் அடக்கப்படுகின்ற ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்று வேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் உலகெங்கும் பரந்துவாழுகின்ற தமிழர்களுடைய ஆதரவுகள் வலுப்பெற்று வருகின்ற நிலையில் இன்று 11வது நாளாகவும் தொடர்ந்தது............... READ MORE 

ஈபிடிபி, கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் பணம் வசூலிப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் அங்கீகாரம் இருந்தது: பா.உ ஸ்ரீரங்கா


ஈபிடிபி மற்றும் கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறுவதற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அங்கீகாரம் வழங்கியிருந்தார் என்று விக்கிலீக்ஸில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று அமெரிக்க முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய தகவலில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் நெருங்கிய உறவைக் கொண்டவருமான ஸ்ரீரங்கா ஜெயரட்ணம் இந்த தகவலை தம்மிடம் கூறியதாக ரொபட் ஓ பிளெக் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்................ READ MORE 

தமிழரின் இறுதி இலக்கை நோக்கிய நகர்வின் முதல் கட்ட மைல்கல்! அனைத்துலகத் தமிழர் மாநாடு


ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் விடயமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்காக, கனடாவில் இரண்டு நாள் 'அனைத்துலகத் தமிழர் மாநாடு' எதிர்வரும் 18 ,19ஆம் திகதிகளில் கனடியத் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
அம்மாநாடு தொடர்பான விபரம் பின்வருமாறு,............. READ MORE