எமது நாட்டில் பலர் உதவிகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுத்து வாழலாம் என நினைக்கின்றார்கள். அவ்வாறு வாழ்வோமாக இருந்தால், எதிர்காலத்தை தொலைத்தவர்களாகவே வாழ்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளாரஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் கல்வியை இரண்டு மாதிரியாகக் கற்கவேண்டியுள்ளது ஒன்று பரீட்சைக்கான கல்வியாகவும் இன்னுமொன்று வாழ்க்கைக்கான கல்வியுமாக கற்றுக்கொள்ள வேண்டும். பரீட்சைக்கான கல்வியென்றால் வெறுமனே பாடப்புத்தகங்களை மாத்திரம் கற்றுக்கொண்டு பரீட்சையில் சித்தியடைய முடியும் வாழ்க்கைக்கான கல்வியென்றால் புத்தகங்களுடன் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்வதாகும் ஆகவே பரீட்சைக்கான கல்வியுடன் வாழ்க்கைக்கான கல்வியையும் இங்குள்ள மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று பலர் உதவிக்காக உரிமையை இழக்கின்றனர். உதவிக்காக உரிமையை நாங்கள் இழக்க முடியாது. உதவி என்பது உதவியாக இருக்கவேண்டும். உரிமை என்பது உரிமையாக இருக்கவேண்டும். பலர் உதவிகளுக்காக உரிமைகளை விட்டுக்கொடுக்கலாம் என்று கூறுகின்றனர்.அப்படி செய்வோமாகவிருந்தால் எதிர்காலங்கள் அனைத்தையுமே தொலைப்பவர்களாக நாம் மாறிவிடுவோம்.
இப்பாடசாலையில் உள்ள இரண்டு இல்லங்களுக்கு விபுலானந்தர் இல்லம், நாவலர் இல்லம் என பெயர் வைத்திருக்கின்றனர்
கிழக்கிலே இருந்து சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டாற்றிய உத்தம புருஷர் விபுலானந்தரின் பெயரை தாங்கியிருக்கின்றது ஒரு இல்லம். இன்னொன்று வடக்கிலே இருக்கக்கூடிய சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டாற்றிய நாவலர் பெருமானின் பெயரை தாங்கியிருக்கின்றது.
ஆகவே, வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற இரண்டு பெரியோர்களின் பெயரிலே அமைத்திருக்கும் இந்த இல்லங்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு முன்மாதிரியானதாகும். இந்த வடகிழக்கு இணைப்புத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைளாகும் அந்த வகையில் இந்த பாடசாலையின் இந்த இரண்டு இல்லங்களும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனவே இந்தப் பெரியார்களின் பெயர்களை தேர்ந்தெடுத்திருப்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலர் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர். தமிழ் மக்களின் செல்வாக்கைப்பெற்ற எங்களை சலுகைகளுக்காக விலைபோனவர்கள் விமர்சிப்பது வழமையானதுதான்.
அண்மையில் மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த டக்ளஸ் தேவானந்தா புதிய கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டிருந்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் அங்கம் வகித்து தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டால் கூட்டமைப்புக்கு அரசியல் செய்யமுடியாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவர் ஏற்கனவே கூறிய மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை மறந்துவிட்டு அரசாங்கத்தின் சலுகைகளுக்காக இன்று கொள்கைகளை மாற்றிக்கொண்டுள்ளார் எனவே அவர்களின் கருத்துக்களையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.
No comments:
Post a Comment