Translate

Saturday 18 February 2012

பிரான்ஸ் புலி வலையமைப்பு ஜெனீவா பயணம்- கொழும்பு பத்திரிகை


எதிர்வரும் மனித உரிமைக் கவுன்ஸில் அமர்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் பிரான்ஸ் புலிகள் வலையமைப்பு ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதுஇலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் பிரான்ஸ் புலிகளின் வலையமைப்பு ஜெனீவா விஜயம் செய்ய உள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி பிரான்ஸ் புலிகளின் வலையமைப்பு ஜெனீவாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜெனீவா செல்வதற்காக விசேட ரயில் ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த அதிவேக ரயிலுக்கு பிரபாகரன் என பெயரிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலை ஒதுக்கீடு செய்வதற்காக ஒரு லட்சம் யூரோ செலவிடப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போர்வையில் ரயில் ஒதுக்கப்பட்டுள்ளது என கொழும்பு திவயின பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment