Translate

Wednesday, 8 August 2012

கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது; அமைச்சர் வாசுதேவ

கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது; அமைச்சர் வாசுதேவ
news
சிறையிலிருந்த கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுள்ளது என அரசின் பங்காளி கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


டெல்றொக்சன் என்ற அரசியல் கைதி உயிரிழந்தமை தொடர்பாக ஒன்லைன் உதயன் வாசுதேவ நாணயக்காரவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த கைதியின் மரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருப்பினும் சிறையில் இருந்த வேளை எவ்வாறு  உயிரிழக்கலாம்? என கேள்வி எழுப்பிய அவர்,

எனவே அது தொடர்பாக உரிய தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசின் பங்காளி கட்சியாக ஆட்சியில் பங்கு வகிக்கும் நீங்கள் இச்சம்பவத்திற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் என கேட்டபோது,

அதற்கு உரிய விசாரணைக்கு கோரிக்கை விடுப்பதை தவிர என்னால் தனிப்பட்ட ரீதியில் எதுவும் செய்ய முடியாதுள்ளது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment