தமிழ் சட்ட அறிஞர் சங்கம் (ஐ.இ)
TAMIL LAWYERS ASSOCIATION (UK)
முக்கிய அறிவித்தல்
பிரித்தானிய அரசாங்கம் அகதி விண்ணப்பம் செய்து அகதி நிலை மறுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை 28-09-2011 இலங்கைக்குத் திருப்பி அனுப்ப இருப்பதால்,
அதற்கு எதிர்ப்பு நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆராய்வதற்கான பொதுக் கூட்டம் ஒன்று 25-09-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 7 மணிவரை ஈலிங் கனக துர்க்கை அம்மன் கோவில் பொதுமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சட்ட அறிஞர்களையும், அகதி வேலைகளில் ஈடுபடுபவர்களையும், தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களையும், சமூக இயக்கங்களையும், பொதுமக்களையும் திரண்டுவந்து கலந்துகொண்டு ஏற்ற ஆலோசனைகளை வழங்கும்படி அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.
தமிழ் சட்ட அறிஞர் சங்கம் (ஐ.இ)