Translate

Saturday, 24 September 2011

கூட்டணியும் உள்ளாட்சித் தேர்தலும்!

எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வேகமான பிரச்சார யுத்திகள் ஒரு புறம் பரபரப்பாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இன்னொரு புறம் கூட்டணி குறித்த புலம்பல்களும், ஆதங்கங்களும், கருத்துக்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. கூட்டணி குறித்துப் பேசுவது பழங்கதை; இனி நடக்க வேண்டியதைப் பார்க்க வேண்டும் என்பது புதுக்கதை என்ற ரீதியிலும் சில இடங்களில் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

இருப்பினும், கூட்டணி குறித்த கதைகளில் பெரும்பாலும் அடிபடுவது அ.இ.அ.தி.மு.க.-வும் தே.மு.தி.க.-வும் ஏன் கூட்டணியைக் கைவிட்டுவிட்டன என்ற கேள்வியே ஆகும். இந்தக் கேள்விக்குச் சரியான விளக்கம் பெற நாம் சற்றுப் பின் நோக்கிப் பார்க்க வேண்டும்.

அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் வளர்ந்த கட்சி; பல்லாண்டு காலம் தமிழகத்தை ஆண்டு சரித்திரம் புரிந்த கட்சி. கட்டுக் கோப்பான கட்சி; தோல்விகளைத் தாங்கி வளரும் கட்சி. அதன் தலைமை எதையும் தாங்கும் 'இரும்பு' இதயமும், அதற்கான வல்லமையும் பெற்ற தாக இருந்தது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. அதே சமயம் தே.மு.தி.க. என்பது ஒரு 'புதிய', 'வளரும்' கட்சி; அதுவும் பிறந்த நாளில் இருந்தே ஒரு பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டிராத கட்சி. அக்கட்சித் தலைமை, அக்கட்சியை உடனடியாக வளர்ச்சிப் பாதையில் எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் இருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தல்களில், ஒருவேளை, தோற்று இருந்தாலும் அசைக்க முடியாத உயரத்தில் இருந்த கட்சி அ.தி.மு.க. என்பதும், தோற்று இருந்தால், உருக்குலைந்து போகும் நிலையில் இருந்த கட்சி தே.மு.தி.க. என்பதும் நாம் மறந்து விட்ட உண்மைகள். இந்த உண்மைகளை மக்கள் முன் எடுத்து வைப்பது நமது(AIADMK INTERNET FORUM) கடமையாகும்.

இந்நிலையில், கடந்த ஆட்சியாளர்கள், சாதனைகளைச் செய்தார்களோ இல்லையோ, ஊழல்களைச் செய்து உலகப்புகழ் பெற்றார்கள்! எனவே அந்த ஆட்சியாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டிய நிலையில் தமிழக மக்கள் இருந்தார்கள். தமிழகக் கட்சிகள் அனைத்தும் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததால் அவைகளும், கடந்த கால ஆட்சியாளர்களை வெளியேற்ற எதிர்பார்த்த சரியான தருணம் தான் கடந்த சட்டமன்றத் தேர்தல். எனவே, இத்தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்தனர்; சிலர் வேண்டா வெறுப்பாக ஊழல் வாதிகளுடனேயே தொடர வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர்.

எந்தக் கூட்டணியும் இல்லாமல் இருந்திருந்தாலும், கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் இடத்தில் இருந்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்பதும் நாம் அறிந்ததே. இருப்பினும், ஒரு மாபெரும் வெற்றி என்பது கூட்டணிகளால் ஏற்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், ஆட்சி அமைக்க கூட்டணி தேவை இல்லை என்பதே கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.-வின் நிலை. ஆனால், தொடர்ந்த தோல்விகளால் துவண்டு போயிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள், அவர்களாகவே முன்வந்து அ.தி.மு.க.-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கட்சித் தலைமையை வற்புறுத்தியதாலேயே, மற்றும் அப்படியொரு நிலை இல்லாமல் மேலும் ஒரு தோல்வியை அக்கட்சி சந்தித்தால் அதை அக்கட்சி தாங்கிக்கொள்ள முடியாது என்ற நிலையிலேயே அக்கட்சி அ.தி.மு.க.-வுடன் கூட்டணியில் சேர்ந்தது. கூட்டணி இல்லாமல் இருந்திருந்தாலும், அது அ.தி.மு.க.-வைப் பெரிய அளவில் பாதித்திருக்காது; ஆனால் அது தே.மு.தி.க.-வைக் கடுமையாகப் பாதித்திருக்கும்.

இந்நிலையில் மேற்கொண்ட ஒரு உடன்பாட்டில் கூட்டணி ஏற்பட்டது. இக்கூட்டணி, தேர்தல் முடிந்த பின் அ.தி.மு.க.-விற்கு ஒரு சிறிய நன்மையை ஏற்படுத்திய போதிலும், தே.மு.தி.க.-விற்கு வாழ்நாள் சாதனையாக ஒரு மிகப்பெரிய, எவரும் எதிர்பார்த்திருக்க முடியாத வெற்றி நிலையை வழங்கியது; ஏன் அக்கட்சியின் சின்னத்தைக் கூட, இக்கூட்டணியே பெற்றுத் தந்தது. அ.தி.மு.க.-வுடன் கூட்டணி வைத்ததால் அக்கட்சிக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டிருந்தால், அதை எப்படியாவது சரிசெய்து கொடுக்க அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எதுத்திருக்கும் என்ற நிலையில், கூட்டணி வாழ்வாதாரத்தையே வழங்கியதால், அதற்கு மேல் அ.தி.மு.க. என்ன செய்ய முடியும். மேலும் அக்கூட்டணி உடன்படிக்கை ஏற்படும் போதும் அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கே அந்த உடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டதே ஒழிய எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவதற்காக அல்ல. எனவே, அந்தத் தேர்தல் முடிந்தவுடன் அக்கூட்டணி முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் கூட்டணிக்கான தேவை அ.தி.மு.க.-விற்கு இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம் என்ற நிலையில், உண்மையில் தே.மு.தி.க., கூட்டணியை விரும்பி இருந்திருந்தால், அது முறைப்படி அ.தி.மு.க.-வுடன் கலந்து ஆலோசித்திருக்கவேண்டுமே ஒழிய அ.தி.மு.க. தானாக முன்வந்து கூட்டணி குறித்துப் பேச வேண்டிய தேவை இல்லை.

அதாவது, இரண்டு கட்சிகளின் பரஸ்பர நன்மைகளை எதிர்பார்த்து ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டணியில் ஒரு கட்சி மிகப்பல நன்மைகளை பெற்று, இன்னொரு கட்சி நன்மைகளைப் பெறாமல் இருந்திருந்தால் (அல்லது இழப்புக்களைச் சந்தித்து இருந்தால்), அந்த நன்மைகளைப் பெற்ற கட்சி, அப்படிப் பெறாத கட்சிக்கு உதவி செய்திருக்கும். ஆனால், விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், இந்தக் கூட்டணியில், அ.தி.மு.க.-வை விட, தே.மு.தி.க.-விற்கே நன்மைகள் அதிகம். எனவே அக்கூட்டணி குறித்த உடன்படிக்கை அப்பொழுதே முடிந்து விட்டது.

மேலும் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட்டணி வேண்டும் என்ற நிலை வரும் போது யார், என்ன செய்து இருக்க வேண்டும்? இங்கே- அ.த.மு.க.-வின் நிலை, கூட்டணி தர்மத்திற்காக மட்டுமே கூட்டணியில் தொடர வேண்டிய நிலை. அதற்காக, அக்கட்சி, உண்மையில் அக்கட்சிக்குக் கூட்டணி தேவை இல்லை என்ற நிலையிலும், தானாகவே முன்வந்து, கூட்டணி குறித்த ஒரு முடிவெடுக்கும் குழுவை ஏற்படுத்தியது. அக்கட்சியுடன் கூட்டணி தேவை என்ற நிலையில் இருந்தவர்கள் உடனடியாக அக்குழுவைச் சந்தித்திருக்கலாம்; அல்லது பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை.



 இந்த நிலையில் அ.தி.மு.க., ஒரு குழுவை ஏற்படுத்திவிட்டு, தேர்தல் முடியும் வரைக் காத்துக் கொண்டிருக்க முடியுமா? தேர்தல் கூட்டணி குறித்த ஒரு குழுவை ஏற்படுத்திய பின்பு, சரியான கால அவகாசம் அளித்தும், அக்குழுவைச் சந்திக்க யாரும் முன்வரவில்லை என்ற நிலையில் தான் அ.தி.மு.க. தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. இருப்பினும், அதற்கு மேலும் ஏதாவது கட்சி கூட்டணி குறித்துப் பேச வந்தால் அதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் தான் அக்கட்சி இருந்தது. இந்த வாய்ப்புக்களைஎல்லாம் தவறவிட்ட மற்ற சிறிய கட்சிகள் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்பு, அங்கேயும், சரியான வழியில் தங்கள் முயற்சிகளைத் தொடங்காமல், தன்னிச்சையாக ஏதேனும் முடிவெடுத்தால், அல்லது ஏதாவது கருத்துக்களை எட்டினால், அதற்கு அ.தி.மு.க. பொறுப்பேற்க முடியுமா?
நமது புதிய இணைய தளம்: www.aiadmkinternetwing.org 

No comments:

Post a Comment