Translate

Saturday, 24 September 2011

கொட்டும் மழையிலும் ஐ நா முன்றலில் பொங்கியெழுந்த பொங்கு தமிழர்


வெள்ளிக்கிழமைசெப்டெம்பர் 23, 2011 காலை 10 மணிக்கு ஆரம்பனான நாடு கடந்த தமிழீழஅரசால் ஒழுஙுகு செய்யப்பட்ட வடஅமெரிக்கத் தமிழரின் பொங்கு தமிழ்ப் பேரணிகொட்டும் மழையிலும் பலசாதனைகள் படைத்து உலகத் தமிழினத்தைப் பெருமைப்பட வைத்துள்ளது.

இதுவரை ஐநா சபை கண்டிராத அளவுக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் மானத் தமிழர்களின் உணர்ச்சிவசமானபேரொலியும்கோசங்களும்அதற்கும் மேலாக அவர்கள் தாங்கிநின்ற பதாதைகளும் அங்கு வ்ந்த உலகத்தலைவர்களையும் அவர்களின் உள்ளத்தையும் உறுத்தும் அளவிற்கு பொங்கு தமிழ்ப் பேரணி அமைந்தது கண்டுபெருமையடையாத தமிழர் எவருமே இருக்கமுடியாது.
நாடுகடந்த தமிழீழ அரசால் ஒழுஙுகு செய்யப்பட்ட இந்தப் பேரணியின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ராம்சிவலிங்கத்தின் ஆரம்ப உரையுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
அவர் தனது உரையில் தமிழர் தேசத்துக்கும் சிங்கள் நாட்டுக்கும் நடந்த யுத்தத்தில் சில சக்தி வாய்ந்த நாடுகள் சிங்களஅரசு பக்கம் சார்ந்து செயற்பட்டதாலும்பல நாடுகள் பார்த்தும் பாராமுகம் காட்டியதாலுமே இன்று நாம் இந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவரக் காரணமான சர்வதேச சமூகம் எமக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறதுஎன்றும்இவர்கள் எமக்கு உதவி புரிவதற்கான தகுந்த தருணம் இதுவே எனவும் அவர் தன்து உரையில் மேலும்தெரிவித்தார்.
கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதி தனது சிறப்ப்புரையில்,
ஆப்ரகாம் லிங்கனின் துணிவுமிக்க செயலால் சட்டமூலமாக அடிமைத்தனத்தை அகற்றிய இந்தப் புனித நாட்டிற்கு நான்கூறும் செய்தி என்னவென்றால் தமிழ் ஈழத்தில் தற்போதும் எம்மக்கள் திற்ந்த வெளி மறியலில்தான்இராணுவத்தின்மத்தியில்அடிமைகளாக இருக்கிறார்கள் என்றும்ஒபாமா அரசு இன அழிப்பைச் செய்தபோர்குற்றங்கள் புரிந்தமனிதஉரிமைகளை மீறின ராஜபக்ச'வையும் அவருக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றைய சில குற்றவாளிகளையும்அடிமைத்தனத்தை அகற்றிய புனித நாடான அமெரிக்காவுக்குள் அனுமதித்திருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் கௌரவ விசுவநாதன் உருத்திரகுமாரன் உரையாற்றுகையில்,
 நா சபையின் அறிக்கையை மக்கள் மயப்படுத்தியதன் அவசியத்தையும்அதன் பிரகாரம் நாம் எடுத்த கையெழுத்துவேட்டையின் தேவையையும் எடுத்தியம்பினார்.
சர்வதேச ரீதியில் கையெழுத்துப் போட்ட பத்து இலட்சம் மக்க்களுக்கும்அதன் வெற்றிக்கு உதவிய பல்வேறுகட்சிகளுக்கும்அமைப்புகளுக்கும்தனிப்பட்டவர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசும் உலகத் தமிழினமும் நன்றிகூறுவதில் பெருமையடைகிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் தமிழ்த் தனிநாடுஅதாவது தனிநாடாம் தமிழீழம்மட்டுமே எமது தாகத்தைத் தணிக்கும்எனவும்அது கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் எனவும் பலத்த கரகோசத்தின் மத்தியில் திடமாகவும்திடகாத்திரமாகவும் கூறினார்.
அத்துடன் எமது நோக்கம் நிறைவுபெறும் வரை நாம் சட்ட ரீதியாகவும்அரசியல் அடிப்படயிலும் எமது எதிர்ப்புநடவடிக்ககளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க் வேண்டியதன் அவசியத்தையும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.
 நா அமைப்பும்சர்வதேச சமூகமும் தமிழினத்துக்கு நன்மைதரும் விதத்தில் விரைவில் ஓர் நல்ல தீர்வுக்குவருவதற்கான வழிவகைகளுக்கான அத்தனை செயற்பாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்ந்தும்செய்துவரும் என்றும் உறுதியளித்தார்.
கலாநிதி ராம் சிவலிங்கம் தனது நன்றியுரையில்பொங்கு தமிழ் நிகழ்வைச் சிறப்பாக நடாத்த அங்கு வருகை தந்துசிறப்புரையாற்றிய கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதிக்கும்எமக்கு உறுதுணையாக இருந்துஈடில்லா உதவி செய்த அமைப்புகளுக்கும்சங்கங்களுக்கும்பொருளுதவி புரிந்த மருத்துவர்களுக்கும்வர்த்தகப்பெருமக்களுக்கும்நிகழ்வின் ஒழுங்குகளைக் கவனித்த நாடுகடந்த தமிழீழ அரசின் தொண்டர் படைக்கும்அதன்பிரதிநிதிகளுக்கும்கொட்டும் மழையிலும் வருகை தந்து சரித்திரம் படைத்த வட அமெரிக்க மறத்தமிழருக்கும்நாடுகடந்த தமிழீழ அரசு சார்பில் நன்றியைத் தெரிவித்து நிகழ்வை நிறைவுசெய்தார்.
இந்தப் பொங்கு தமிழ் தமிழ்ப் பேரணியின் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு,அவர்கள் அனுமதியுடன் நிறைவு செய்யப்பட்டமை இந்தப் பேரணியின் முக்கிய அம்சமாகும்.
இந்த நிகழ்வினை ஊடகத்துறை அமைச்சர் கௌரவ சாம் சங்கரசிவம் அவர்கள் தொகுத்து வழங்கியமை இங்குகுறிப்பிடத்தக்கது.
கலாநிதி ராம் சிவலிங்கம் துணைப் பிரதமர் நா.
sivalingham@sympatico.ca
__._,_.___

No comments:

Post a Comment