பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் எமது எதிர்ப்பினை நாம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு தெரிவுக்குழு அமைக்கப்படுவதானது ஏமாற்று வித்தையென நாம் தெரிவித்துள்ளோம். இந்த நிலையில் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை பாராளுமன்றத்தில் முன்வைக்குமானால் அது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவுக்கு வருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்............ READ MORE













இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு உதவும் சூரியா, சிவகுமாரின் அகரம் அறக்கட்டளை நிகழ்வு சென்னையில் இடம்பெற்றது.



வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு தொடர்ச்சியாகக் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தென்மராட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.












இலங்கையில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களைக் கடத்துவதில் இலங்கையும் ஒரு மூலமாக இருப்பதாக அமெரிக்காவின் 2011 ஆம் ஆம் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. மனித கடத்தல்கள் குறித்துக் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளில் பட்டியலில் இலங்கையை வைத்திருந்த அமெரிக்கா, இப்போது அதை இரண்டாம் மட்டத்தில் சேர்த்துள்ளது. அதாவது கடத்தல்கள் இலங்கையில் நடக்கின்றன, ஆனால் இதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது................
யாழ் மாவட்ட அரச அதிபரும் மகிந்தரின் கை பொம்மையும் ஆனா இமெல்டா சுகுமாரன் திடீர் விஜயமாக கனடா வந்துள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து நேற்றயதினம் மாலை விமான நிலையத்தை சென்றடைந்த அவர் கனடாவுக்கான தனது பயணத்தினை மேற்க்கொண்டுள்ளார். அதற்கு முன்னதாக மஹிந்தராஜபச்சவுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்க்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.............