Translate

Wednesday, 29 June 2011

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி புறக்கோட்டையில் நாளை ஆர்ப்பாட்டம்


சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை நாளை கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடத்த நாம் இலங்கையர் அமைப்பு தீர் மானித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண தெரிவித்தவை வருமாறு சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு வெளியிடும் மாறுபட்ட தகவல்கள், அவர்கள் விடுதலை செய்ய கால தாமதித்தல் மற்றும் அவசர காலச் சட்டத்தை நீக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, சிறைச்சாலைகளில் சுமார் 17 ஆயிரம் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார் உதுல் பிரேமரட்ண.

No comments:

Post a Comment