“அமெரிக்காவின் திட்டம், இலங்கையில் படிப்படியாக காலூன்றி, இலங்கையை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் என்று விடுதலைப்புலகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முன்று கூறினார்” இவ்வாறு கூறியிருப்பவர் யாரோ விடுதலைப்புலிகள் ஆதரவாளர் அல்ல. இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்!
“இந்தத் தகவலை பிரபாகரன் இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்” என்று தெரிவித்த இலங்கை அமைச்சர், அந்த பேட்டியில் பிரபாகரன் அமெரிக்கா பற்றி கூறியவற்றை, பொதுக்கூட்டம் ஒன்றில் படித்தும் காண்பித்தார்.