Translate

Saturday, 7 April 2012

இலங்கை இராணுவம் செருப்போடு திரிவதில்லையாம்: புதுக்கண்டுபிடிப்பு !

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு சென்றுள்ள பிரித்தானிய MP மதிப்புக்குரிய(?) நெஸ்பி அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 
பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் சுமார் 8 எம்.பீக்களைத் தெரிவுசெய்யும் வல்லமை படைத்தவர்களாக இருப்பதால், வாக்குகளுக்காக பிரித்தானிய அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு உதவுவதாக நெஸ்பி அவர்கள் கூறியுள்ளார். 


இதன் காரணமாகவே பிரித்தானியாவில் GTF மற்றும் BTF பேன்ற அமைப்புகள் செல்வாக்கோடு செயல்படக்கூடியதாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பாக உலகத் தமிழர் பேரவை(GTF) தனது செயல்பாடுகளுக்கு MPக்களை பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோக நிருபர் ஒருவர் சனல் 4 தொலைக்காட்சி பற்றி கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் காட்டப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் குறித்து வேடிக்கையான விடையம் ஒன்றைக் கூறியுள்ளார். அதாவது சனல் 4 தொலைக்காட்சி காண்பித்த (கைகள் கட்டப்பட்ட புலிகள் கொல்லப்படும்) காட்சிகளில், இலங்கை இராணுவம் என்று கூறப்படுபவர்களில் சிலர் பாட்டா சிலிப்பர் அணிந்துள்ளனராம். ஒழுக்கம் மிக்க இலங்கை இராணுவம் ஆனது அப்படி பாட்டா சிலிப்பரை அணியாதாம். மாறாக பூட்ஸ் சப்பாத்து தான் போடுவார்களாம். இதனால் அந்த வீடியோ பொய்யானது என அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

மதிப்புக்குரிய நெஸ்பி MP அவர்களுக்கு ஒரு விடையம் தெரியவில்லைப் பொலும். இலங்கை இராணுவம் அல்ல, அமெரிக்க இராணுவம் ஆக இருந்தாலும் சரி...... சிரங்கு அல்லது பாத தொற்று நோய் இருந்தால் சிலிப்பர் தான் போட்டாகவேனும். பூட்ஸ் சப்பாத்தை தொடர்ந்து பல நாட்கள் அணிந்திருந்தால் பாதத் தொற்றுநோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதற்கு ஒருவகையான கிருமிநாசினி அடங்கிய பவுடர்களை சில இராணுவம் பயன்படுத்துவது வழக்கம். இல்லையே சிலிப்பர் தான் போடவேண்டும். இதனை வைத்து, வீடியோவில் இருப்பது இலங்கை இராணுவம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா ? இது பெரும் நகைப்புக்குரிய விடையம். மொத்தத்தில் இவர் விஜயம் சிங்களவர்களை திருப்த்திப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

லியாம் பொஃக்ஸ் போல இவரும் இலங்கையின் உற்ற நண்பர் என்பது தற்போது தெள்ளத்தெளிவாக விளங்கியுள்ளது.

No comments:

Post a Comment