இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐநா - ஜெனீவாவில் ஆய்வு ஒன்றை நடத்த தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய கால இடைவெளிக்குள் விமர்சனம் என்ற திட்டத்தில் பல நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் பங்குபற்றும் எனவும் இத்திட்டம் இந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் இடையே ஜெனீவாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகளாவிய கால இடைவெளிக்குள் விமர்சனக் கூட்டம் 2008ம் ஆண்டு இடம்பெற்ற போது கலந்துரையாடப்பட்டது போன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய கால இடைவெளிக்குள் விமர்சனக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 85 பரிந்துரைகளில் 52ஐ ஏற்றுக் கொண்ட இலங்கை 25ஐ நிராகரித்ததாகவும் 8ஐ மாத்திரமே செயற்படுத்தியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிந்துரைகளில் சுயாதீன மனித உரிமை அமையம், கருத்து வெளியீட்டு சுதந்திர பாதுகாப்பு, உள்நாட்டு இடம்பெயர் மக்களின் மனித உரிமை போன்ற விடயங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை பாதுகாப்பு குறித்து ஐநா மனித உரிமை கவுன்ஸில் ஆதரவுடன் உலகளாவிய கால இடைவெளிக்குள் விமர்சனக்குழு ஆரம்பிக்கப்பட்டது.

இக்குழு ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமை செயற்பாடுகளையும் கண்காணித்து விமர்சனத்திற்கு உட்படுத்தும்.