எவ்வித மிரட்டல்கள் வந்தாலும் பயப்பட போவதில்லை! திருமுறிகண்டி போராட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்! சிறிதரன் எம்.பி.
சிங்கள இராணுவத்தினால் தமிழரின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி திருமுறிகண்டி பகுதியில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எந்த நெருக்கடிகளையும் பொருட்படுத்தாது இப் போராட்டத்தில் மக்கள் அனைவரும் வருகை தந்து தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
திருமுறிகண்டியில் இடம்பெறவுள்ள நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது மக்கள் தமது நிலங்கைளையே கேட்கின்றனர் அதற்காகவே போராட்டங்களையும் நடத்துகின்றனர் எங்களுடைய போராட்டம் நியாயமானது.
எமது போராட்டம் யாழில் நடைபெற்றது. தற்போது திருமுறிகண்டியில் நடைபெறப் போகின்றது.
இப்போராட்டங்களை தடுப்பதற்கும் ஒடுக்குவதற்கும் சிங்கள இராணுவமும் அரச புலனாய்வுப் படையினரும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருவெளிப்பாடே வலி.வடக்கில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான தாக்குதலாகும். இவற்றுக்கு எல்லாம் பயந்து போகும் இனம் எமது இனமல்ல.
திருமுருகண்டியில் இடம்பெறப் போகின்ற போராட்டத்தினை குழப்ப அப்பகுதி மக்களை புலனாய்வுத் துறையினர் மிரட்டுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
எங்களுடைய போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.
இந்தப் போராட்டத்திற்கு எந்தவிதமான மிரட்டல்கள் வந்தாலும் தமிழ் மக்கள் பயப்பட போவதில்லை என்பதை மக்களை மிரட்டும் சிங்கள் புலனாய்வாளர்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே எமது போராட்டமானது திட்டமிட்டபடி எதிர்வரும் 26ம் திகதி 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment