Translate

Friday, 23 March 2012

ஐ நா முன்றலில் பதாதை ஏந்தி நன்றி தெரிவித்த தமிழர்கள் (படங்கள்)


ஐ நா முன்றலில் பதாதை ஏந்தி நன்றி தெரிவித்த தமிழர்கள் (படங்கள்)


ஐ நா வில் மார்ச் 22 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது . இந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டது. உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் விரல் நகங்களை கடித்த வாறே இந்த வாக்கெடுப்பை உன்னிப்பாக கவனித்தனர். முடிவில் இந்த வாகேட்டுப்பு இலங்கைக்கு எதிராய் அமைந்தது குறித்து தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர். குறிப்பாக ஐ நா கட்டிடத்தின் வெளியே நின்று காத்திருந்த தமிழர்கள் தங்கள் அளவு கடந்த மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். அவர்கள் புதிய தலைமுறை , சன்னல் 4 தொலைக்காட்சி மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதாதைகளை ஏந்தி பிடித்தனர். ஐ நா அலுவலகத்திற்கு வெளியே நின்று பதாதைகள் ஏந்தி நிற்கும் தமிழர்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு........ read more

அமெரிக்காவைவிட ஜீ.எல். பீரிஸ் அதிக சந்தோசத்தில் காணப்படுகிறார்!


அமெரிக்காவைவிட ஜீ.எல். பீரிஸ் அதிக சந்தோசத்தில் காணப்படுகிறார்!
ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் அமெரிக்காவைவிட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அதிக சந்தோசத்தில் இருப்பதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் வெட்கப்பட தேவையில்லை

ஐநா கூட்டத் தொடரில் அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கை சர்வதேசத்தை கோபித்துக் கொள்ள தேவையில்லை என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நடைமுறைப்படுத்த முடியும்.

மக்கள் போராட்டம் விஸ்தரிக்கப்படுகின்றது, உள்ளூர் தமிழர் பேரவைகள் நாடெங்கும் புனரமைக்கப்படுகின்றன.


மக்கள் போராட்டம் விஸ்தரிக்கப்படுகின்றது, உள்ளூர் தமிழர் பேரவைகள் நாடெங்கும் புனரமைக்கப்படுகின்றன.

மே 2009ற்கு பின்னர் சர்வதேச அரங்கத்தில் மீண்டும் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயங்கள் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தத் தொடங்கியுள்ளது.
வேவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் அமைப்புக்களில் ஒருசிலவும், தனி நபர்களும் தனித் தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுத்த பல்வேறு செயற் திட்டங்கள் இதற்கு காத்திரமான பங்களிப்பினை வகித்தன.

நா.க.தமிழீழ அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும்


நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணையை தெடர்ச்சியாக வலியுறுத்துவதோடு சர்வதேசப் பாதுகாப்பு பொறிமுறை ஒன்றின் அவசியத்தினையும் கோரி நிற்கின்றோம்.

ஆதரவாக வாக்களிக்க பிரதிநிதிகளை மிரட்டிய இலங்கை : ஐ.நா மனித உரிமை தலைவர்

ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார்.

அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா: விஜயகாந்த் கிண்டல்


சென்னை: ""அமெரிக்க தீர்மானம் நீர் மோர் என்றால், இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போக செய்துவிட்டது. இலங்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாக கருதுகிற அணுகுமுறையையே, இந்திய அரசு மேற்கொண்டுள்ளது'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது ஏன்?


ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டளித்ததால் அமெரிக்கா பக்கம் சாய்ந்ததாக அர்த்தம் இல்லை . ஏனெனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையின் எதிர்கால நல்வாழ்வைச் சுட்டிக்காட்டும் வகையில் சில வாசகங்களை இந்தியா சேர்த்த செயல் அதற்கு ஆதாரம்.

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி நிச்சயம் - ஜெயலலிதா: தமிழீழம் காணும் வரை போராடுவேன் - கருணாநிதி


இலங்கைத் தமிழர்களுக்கு நீதி நிச்சயம் - ஜெயலலிதா: 

தமிழீழம் காணும் வரை போராடுவேன் - கருணாநிதி

ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவளிக்ககும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில்,
ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அதற்காக உலகத் தமிழர்கள் சார்பாக பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தீர்மானம் வெற்றி.. தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்


இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி, தமிழகத்தில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், வக்கீல்கள், மாணவர்கள், அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழ மக்கள் இந்த தீர்மான வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

தளபதி ரமேஸ் படுகொலை - அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail ஊடகத்தில்.


தளபதி ரமேஸ் படுகொலை - அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail ஊடகத்தில்.
[ Friday, 23 March 2012, 02:05.52 PM. ]
The Global Mail ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் "எவ்வித சந்தேகமும் இல்லை" என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
அக்கட்டுரையின் முழுவிபரமாவது,........... read more

பிரபாகரன் போராட்டம் சரியானதே! தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்: கருணாநிதி


பிரபாகரன் போராட்டம் சரியானதே! தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்: கருணாநிதி

தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பாயும் சிறிலங்கா‏


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பாயும் சிறிலங்கா‏


சிறிலங்கா தொடர்பில் சர்வ அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறிலங்காவின் கோபம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இதனொரு அங்கமாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் செயற்பாடுகளுக்கு அமையவே, அமெரிக்க அரசாங்கம் செயற்படுவதாக, சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்


அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
கொக்ககோலா உள்ளிட்ட அமெரிக்க உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் கோரப்பட்டது
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.

தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும்! இந்தியா


தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும்! இந்தியா
தமிழர் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் விலக்கப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது உரையாற்றிய இந்திப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

இந்திய எதிர்ப்புக்கு சிதம்பர இரகசியமே காரணம்!


இந்திய எதிர்ப்புக்கு சிதம்பர இரகசியமே காரணம்!
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்தமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் இந்திய மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க போராடிய தமிழக இரத்த உறவுகளுக்கு நன்றி-எஸ்.ஜெயானந்தமூர்த்தி


இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க போராடிய தமிழக இரத்த உறவுகளுக்கு நன்றி-எஸ்.ஜெயானந்தமூர்த்தி

அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியாவை வாக்களிக்க வைத்தமைக்கு தமிழக அரசில் கட்சிகளும் அதன் தலைவர்களும், மக்களுமே காரணம். அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும், தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பபு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மிரட்டல்கள் குறித்து ஐ நா கவலை


பேரவையின் தலைவர் நவி பிள்ளை
பேரவையின் தலைவர் நவி பிள்ளை
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்திற்காக கொழும்பில் இருந்து வந்திருந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களை இலங்கைத் தூதுக் குழுவினர் மிரட்டியதாக ஐ நா மனித உரிமை பேரவையின் செயலாளர் நாயகம் நவி பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்............ read more

மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன்: மெர்வின் சில்வா


வேட்டியை வரிந்துகொண்டு நிற்பவர் அமைச்சர் மெர்வின் சில்வா
வேட்டியை வரிந்துகொண்டு நிற்பவர் அமைச்சர் மெர்வின் சில்வா
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன் என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது......... read more

அடப் படுபாவி செய்தியாளர்களா நீங்கள் உண்மையில் மனிதப்பிறவிகள் தானா?


ஒரு பத்திரிகை கையில் இருந்தால் அதை வைத்து என்ன அநியாயம் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு தினமலம் சரியான உதாரணம். இதோ இங்கே பகிரப் பட்டுள்ள அதன் கோவை பதிப்பில் அது செய்துள்ள அநியாயங்கள். 

நெல்லையில் வைகோ- சீமான் மற்றும் தலைவர்கள் ஒரே மேடையில் எழுச்சி முழக்கம் (55 படங்கள்)


நெல்லையில் வைகோ- சீமான் மற்றும் தலைவர்கள் ஒரே மேடையில் எழுச்சி முழக்கம் (55 படங்கள்)


நெல்லையில் அணு உலைக்கு எதிராக போராடிவரும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் தமிழக கட்சிகள் மற்றும் பல இயக்கங்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் மதிமுக , பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், நாம் தமிழர், பாமக , தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் , மே 17 இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் இன்னபிற இயக்கங்கள் கலந்து கொண்டன. காலையில் தொடங்கிய இந்த போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது, பிற்பகல் 2 மணிக்கு கூடங்குளத்தை நோக்கி பேரணியாக அனைவரும் நகர முற்பட்டனர் ............. read more 

வைகோ, சீமான், திருமாவளவன், குளத்தூர் மணி ஆகியோரை கைது செய்ய காவல்துறை முயற்ச்சி..?


வைகோ, சீமான், திருமாவளவன், கொளத்தூர் மணி ஆகியோரை கைது செய்ய காவல்துறை முயற்ச்சி..?

திருநெல்வேலி: போலீஸ் அனுமதியின்றி நாளை (மார்ச் 23) நெல்லையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் கைதாகின்றனர்

Thursday, 22 March 2012

உலக தமிழினத்திற்கு கிடைத்திருக்கிற முதல் வெற்றி


உலக தமிழினத்திற்கு கிடைத்திருக்கிற முதல் வெற்றி


தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் மீது ஐநா மனித உரிமை கவுன்சிலில் இன்று பொது விவாதம் நடந்தது. ஒட்டுமொத்த 47நாடுகள் கலந்துகொண்ட இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும்எதிர்ப்பு தெரிவித்து 15 நாடுகளும் வாக்களித்துள்ளன.

ஜெனீவாவின் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது : இலங்கை தூதுக் குழு தலைவர் சமரசிங்க _


ஜெனீவாவின் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது : இலங்கை தூதுக் குழு தலைவர் சமரசிங்க _

  ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், கடந்த 2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தை அது பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கையின் விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும்!- பிரதமர் செயலகம்


நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும்!- பிரதமர் செயலகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணையை தெடர்ச்சியாக வலியுறுத்துவதோடு சர்வதேசப் பாதுகாப்பு பொறிமுறை ஒன்றின் அவசியத்தினையும் கோரி நிற்கின்றோம். இவ்வாறு நா.த. அரசாங்கத்தின் பிரதமர் செயலகம் விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

ஜெனீவாவில் சிங்களக் காடையர்கள் ! ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டனர் !!


ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில்,  திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தியுள்ளனர்.

தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள்: கலைஞர்


தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள்: கலைஞர் 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு திமுக தலைவர் கலைஞர் நன்றி தெரிவித்துள்ளார். 

ஜாதிக்காய் நேச்சுரல் வயகரா

ஜாதிக்காய் நேச்சுரல் வயகரா

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது.
இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:

இனவாதத்திற்கு வரைவிலக்கணமாக விளங்கும் சிறீலங்கா - கரன்பார்கர் அம்மையார்.


இனவாதத்திற்கு வரைவிலக்கணமாக விளங்கும் சிறீலங்கா - கரன்பார்கர் அம்மையார்.




 உலக அரங்கில், இனவாத அரசுக்கான வரைவிலக்கணமாக, சிறிலங்காவை முன்னுதாரணமாக கொள்ளலாம் என IEDஅமைப்பின் பிரதிநிதி கரன் பார்கர் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.



 ஐ.நா மனித உரிமைச் சபையில், இனவாதம், இனத்துவேசம் தொடர்பில் இடம்பெற்ற விவாத அமர்வில், கரன் பார்கர் அம்மையார் அவர்கள் உரையாற்றியிருந்தார்.

உலகில் எங்கு இனநெருக்கடி இருக்கின்றதோ, அங்கு இனவழிப்பு ஏற்படுத்துவதற்கான வழிநிலையுள்ளது என்ற ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனானின் கூற்றினை மூலதாரணமாக கொண்டு தனது உரையை வழங்கிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள், இனவாத மேலாதிக்க நிலையில், இனவழிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.
 
ஜெனீவா ஐ.நா உரிமைகள் சாசனத்தில், இனவாத அரசுக்கான வரைவிலக்கணம் இல்லை என்பதனைச் சுட்டிக்காட்டிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள், இன்றைய உலகில் சிறிலங்காவை ஒரு இனவாத அரசுக்குரிய முன்னுதாரணமாக கொள்ளாம் என் வலியுறுத்தினார்.
 
இலங்ககைத் தீவின் பெருன்பான்மை இனவாத சிறிலங்கா அரசானது, தமிழ் தேசிய இனத்தின் மீது கட்டவிழ்த்து வரும் இனவழிப்பை, அடுக்கிப் பேசிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள், 1948ம் ஆண்டு முதல் சிறிலங்கா இனவாத அரசனாது, தமிழர்களின் அரசியல், சமூக ,பொருளதார, கலாச்சார உரிமைகளை பறித்தெடுத்து வருகின்றமையை குறித்து கோடிட்டுக்காட்டினார். தமிழர்கள் மீது பயங்கரவாத முலாம்பூசி, சர்வதேச மனிதச் சட்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சிறிலங்கா அரசானது, தமிழர்கள் மீது இனவாதத்தை கட்டவிழ்த்து வருவதாக குறித்துரைத்த கரன் பார்கர் அம்மையார் அவர்கள், தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் மீதும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறிலங்கா பயங்கரவாத முத்திரையை குத்தி வருவனைக் கோடிட்டு, தன்மீதும் இத்தகைய முத்திரையை, சிறிலங்கா இனவாத அரசு குத்தியுள்ளதாக இடித்துரைத்தார்.
 
மானிடத்துக்கான உரிமைகளும் , பாதுகாப்பும் எனும் ஐ.நாவின் உயரிய சாசனக் கோட்பாட்டுக்கு முன்னால், சர்வதேச சமூகத்தால் கைவிடப்பட்ட இனமான, தமிழினம் பெரும் அழிவைச் சந்தித்துள்ளமையை, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையே தெளிவாக எடுத்துரைத்துள்ள நிலையில், இனவாத அரசுக்குரிய வரைவிலக்கணத்தை ஐ.நா விரைந்து வரைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவை மிரட்டும் மகிந்த சமரசிங்க


அமெரிக்காவை மிரட்டும் மகிந்த சமரசிங்க

கண்ணாடி வீடுகளில் வசிப்போர் மற்றவர் மீது கல்லெறியும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்துக் கொண்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார் -பீரிஸ்


விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார் -பீரிஸ்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் காணாமல் போன டக்ளஸ்


ஜெனீவாவில் காணாமல் போன டக்ளஸ்
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்றைய தினம் அதிகப்படியான 9 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் மக்களிடம் பிரதான கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டும் : ரணில் தெரிவிப்பு


தமிழ் மக்களிடம் பிரதான கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டும் : ரணில் தெரிவிப்பு
நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சத்தமிட்டால் வெளியேற்றப்படுவீர்!- ஐ.நா சபையில் ஒலித்த சுவாரஸ்ய அறிவிப்பு!


சத்தமிட்டால் வெளியேற்றப்படுவீர்!- ஐ.நா சபையில் ஒலித்த சுவாரஸ்ய அறிவிப்பு!
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டு சிறிது நேரத்தில் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
பக்க விளைவு மருந்துகள்

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது.

உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?

ஜெனீவா எதிரொலி: எமது கொள்கையில் மாற்றம் இல்லை, சிங்கள தேசம்

இன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்து சில சிங்கள அரச அதிகாரிகள் வெளியிட்ட உடனடி கருத்தில் தமது கொள்கையில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அறிவித்தனர்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷ் கொலையில் புதிய வீடியோ ஆதாரம்!


FILE
விடுதலைப்புலிகள் இயக்க கிழக்குப் பகுதி தளபதியாக இருந்த கர்னல் ரமேஷை இலங்கை ராணுவம் கொலை செய்தது பற்றிய புதிய காணொளி ஆதாரம் கிடைத்துள்ளது.

இலங்கை இறுதி போரின் போது அவர் ராணுவத்திடம் சரணடைந்தார். ஆனால் அவரை இலங்கை ராணுவத்தினர் கொலை செய்து பிணத்தை தெருவில் வீசினார்கள். அவர் சரண் அடைந்த பிறகு ராணுவத்தினர் அவரிடம் விசாரிக்கும் புகைப்படங்கள், காணொளிகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

பாவக்கறையை போக்க வேண்டியது இந்தியாவுக்கு அவசியமானது என்கிறார் விக்கிரமபாகு


இலங்கைக்கு எதரிரான அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விடாது தடுப்பதற்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருவதாக இடது சாரி முன்னணியின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணராத்ன தெரிவித்துள்ளார்.

15 நாடுகள் எங்களுக்கு ஆதரவு! பெருமிதம் கொள்ளுகிறார் பீரிஸ்!!

15 நாடுகள் எங்களுக்கு ஆதரவு! பெருமிதம் கொள்ளுகிறார் பீரிஸ்!!

அமெரிக்காவால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 9 வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் பெறப்பட்டுள்ள நிலையில் தமக்கு 15 நாடுகள் ஆதரவாக வாக்களித்தமை திருப்தியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.