Translate

Friday, 23 March 2012

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பாயும் சிறிலங்கா‏


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பாயும் சிறிலங்கா‏


சிறிலங்கா தொடர்பில் சர்வ அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறிலங்காவின் கோபம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இதனொரு அங்கமாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் செயற்பாடுகளுக்கு அமையவே, அமெரிக்க அரசாங்கம் செயற்படுவதாக, சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டியே இக்கூற்றினை, விமல் வீரவன் முன்வைத்துள்ளார்.
சிறிலங்காவில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை ஊக்குவிக்கவே அமெரிக்கா முயற்சிக்கின்றது
என குறிப்பிட்ட விமல் வீரவன்ச, அமெரிக்காவில் இருக்கும் வி.உருத்திரகுமாரனை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஏன் அமெரிக்கா கைது செய்யவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, விடுதலைப்புலிகளின் சர்வதேச தலைவராகச் வி.உருத்திரகுமாரன் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்திய விமல் வீரவன்ச,  பல பயங்கரவாத செயற்பாடுகளுடன் வி.உருத்திரகுமாரன் சம்பந்தப்பட்ட குற்றவாளி எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, வி.உருத்திரகுமாரனை அமெரிக்கா பாதுகாப்பதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு சக்தியளித்து, சிறிலங்காவில் அதன் செயற்பாட்டை ஊக்குவிக்க முயல்கிறது  எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதுஇவ்வாறிருக்க, அவுஸ்றேலியாவுக்கான சிறிலங்காவின் ஆணையளர் திசரா சமரசிங்கே, ஒஸ்றேலியன் ஒலிபரப்புக்கு கூட்டுத்தாபனத்துக்கு வழங்கி செவ்வியொன்றில், ஒஸ்றேலியாவில் இருக்கின்ற குறைந்தளவிலான தமிழர்கள், விடுதலைப் புலிகளின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்குவதாக தெரிவித்திருப்பதோடு, விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கி இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்காவின் ஜாதிகல உறுமக்கட்சினைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, விடுதலைப் புலிகளுடன் தொடர்பினைக் கொண்டிருந்த வி.உருத்திரகுமாரனுக்கு, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரத்தை வழங்கியிருப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்.
வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஓர் போர் குற்றவாளியெனவும் சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.
இவ்வாறு சிறிலங்கா அரச தரப்பின் இக்கருத்துக்கள் குறித்து நா.த.அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள  செய்திக்குறிப்பில், முள்ளிவாய்காலுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தையும் புதைத்துவிட்டதாக கனவு கண்ட சிங்கள தேசத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் இனிப்பான செய்தியல்ல.
இலங்கைத் தீவுக்கு வெளியே, சர்வதேச அரங்கில் தமிழீழ சுதந்திர வேட்கையை உயிர்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் காவிச் செல்கின்றது.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி நா.த.அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதானது, சிங்கள தேசத்துக்கு கசப்பானதாகவே இருக்கும் என தகவல்துறை அமைச்சக குறிப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment