இறைவனியல்பு
பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும் வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன் |