இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித் தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. என்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த தனி தமிழ் ஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்றும் கூறியுள்ளார்.
வைகோ போராட்டம் வரலாறு காணாதது, தமிழ் ஈழம் நிச்சயம்!- கலாமின் ஆலோசகர் பரபரப்புப் பேச்சு
இலங்கையில், இந்தியா, அமெரிக்காவில் உள்ளதைப் போன்ற ஜனநாயக அமைப்பு, நடைமுறை வராவிட்டால் நிச்சயம் தமிழ் ஈழம் அமையும். அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தமிழ் ஈழம் அமைந்தால் அது இந்தியாவின் நட்பு நாடாகவே திகழும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகரான பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமின் ஆலோசகர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது அறிக்கையில் ராஜபக்சவை எதிர்த்து வைகோ ம.பியில் நடத்திய போராட்டத்திற்கும் பொன்ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.