உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப்படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen…“. Massaker an Tamilen 1956–2008. எனும் தலைப்பில் இன்று யேர்மனியில் Frankfurt நகரில் வெளியிடப்பட்டது.
இப் புத்தகத்தை வெளியிட்டு வைப்பதற்கு சிறப்பு விருந்தினராக இந்நூலை யேர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் கலந்து கொண்டார் . அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் அவர்களும் அத்தோடு தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் திரு ரொபின்சன் அவர்களும் கலந்துகொண்டனர் .
பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் உரையாற்றுகையில் சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகள் இந் நூலில் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது . அந்த வகையில் இவ்வாறான குற்றங்கள் புரிந்த இலங்கை அரசை சர்வதேச சட்டங்களுக்கு அமைய அனைத்துலக குற்றவியல் மன்றத்தில் நிறுத்த இவ் ஆவணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் .
திரு ரொபின்சன் அவர்கள் உரையாற்றுகையில் தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகள் இன்று வரை அனைத்து நாட்டு மக்களும் ஆதாரப்படுத்தப்பட்ட வகையில் சென்றடையவில்லை அதனால் இன்று வெளியிடப்படும் இந்நூலை மிக முக்கியமான ஒரு ஆவணமாக கருதுகின்ற வேளையில் , இந்நூலை உருவாக்குவதற்கு தமது உயிர்களை அர்பணித்தவர்களை நினைவில் பதித்து இதை யேர்மன் மொழியில் வெளியிட்டு வைப்பதற்கு மிக பெரும் உதவியை செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் ,அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் மற்றும் பெயர் குறிப்பிட்ட முடியாத அனைவருக்கும் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்தார் .அத்தோடு சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட இனப்படுகொலையை செய்துவருகின்றதை இந்நூல் ஆதாரத்துடன் வெளிக்காட்டுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினர் .
அத்தோடு செல்வி லக்சி லம்பேர்ட் அவர்கள் உரையாற்றுகையில் தன்போன்ற இளையோர்கள் இவ்வாறன ஆவண நூலை பயன்படுத்தி கொடுமைகள் இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேடி கொடுப்பதற்கு அரசியல் வேலைத்திட்டங்களுக்கு இந்நூலை பயன்படுத்த வேண்டும் என்றும் அத்தோடு இவ்வாறான ஆவணத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதலுக்கு மத்தியில் தமது உயிர்களை காப்பாற்ற எண்ணாமல் நடந்த இனப்படுகொலைகளை பதிவு செய்தவர்களை நினைவில் நிறுத்தி ஈழத்தமிழர்களின் விடுதலையை நோக்கி இளையோர்கள் செயற்பட வேண்டும் என்றும் கூறினார் .
அத்தோடு இந் நூல் யேர்மனியில் உள்ள நூல்நிலையங்களுக்கும் , உயர்கல்விக்கூடத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் , மனிதவுரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று வெளியீட்டார்கள் அறிவித்துள்ளார்கள் .மற்றும் புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் கொடுமைக்களை புகலிட நாட்டு அரசாங்கத்திற்கு ஆதாரத்துடன் கொடுப்பதற்கும் இந் நூல் மிக முக்கியம் வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்கள் .
இந் நூலை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
Draupadi Verlag
Dossenheimer Landstr. 103
69121 Heidelberg
Tel.: +49 - (0)6221 - 412 990
Fax: +49 - (0)332 2372 2343
E-Mail: info@draupadi-verlag.de
அல்லது
தமிழர் கலையகம்
023122630584
அத்தோடு இந் நூலை வெளிக்கொண்டுவந்த வடகிழக்கு மனித உரிமை செயலகத்திற்கு (NESoHR) தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் அனைவராலும் தெரிவிக்கப்பட்டது .
http://www.eeladhesa...chten&Itemid=50

No comments:
Post a Comment