ஓமல்பே சோபித தேரர் மனு தாக்கல் :
திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை எனவும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் தேவையில்லை எனவும் சாதாரண வாக்கெடுப்பின் மூலம் அதனை நிறைவேற்றுமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன்னர், ஷாமர மத்தும களுகே என்பவரால், தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக இந்த மனுவை ஹெல உறுமய தாக்கல் செய்துள்ளது. திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருபான்மை வாக்குளால் நிறைவேற்றி, அதனை அமுல்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என களுகே என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவிற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய தாக்கல் செய்துள்ள மனுவில், பிரதிவாதிகளாக ஷாமர மத்தும களுகே மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். திவிநெகும சட்டமூலத்தை சாதாரண வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் அதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெருபான்மை வாக்குகள் அவசியமில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13வது அரசியல் அமைப்புத்திருத்தம் என்ற புற்றுநோயை தேசத்தின் உடலில் இருந்து நீக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும் :
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் இந்த பொன்னான சந்தர்ப்பத்தில், 13வது அரசியல் அமைப்புத்திருத்தம் என்ற புற்றுநோயை தேசத்தின் உடலில் இருந்து நீக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும் என ஜாதிக ஹெல உறுமய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாகாண சபை முறைமையை ஒழித்து, தாய் நாட்டின் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த சகல தேசிய சக்திகளும் உடனடியாக ஒன்றிணைய வேண்டும் என நாட்டுக்கும் மக்களுக்கு வலியுறுத்திக் கூறிக்கொள்வதாக அந்த கட்சியின் தலைவரான ஓமல்பே சோபித தேரர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமை தொடர்பாகவும் நாட்டின் ஒருமைப்பாடு சம்பந்தமாகவும் திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக வாதவிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை நாட்டுக்கு பொருந்தாது என்பதே ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கையாகும். அத்துடன் மக்களின் அனுமதியின்றி பலவந்தமாக, வெளிநாட்டின் தலையீட்டுடன் அந்த முறைமை நாட்டில் செயற்படுத்தப்பட்டது.
அன்றிருந்த நாடாளுமன்றத்தில், மாகாண சபை சட்டமூலத்திற்கோ 13வது அரசியல் அமைப்புத்திருத்தச் சட்டத்திற்கோ சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நாட்டில் மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன் இந்தியாவின் அதிகார பரவலாக்க முறையில், இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் பலவந்தமாக இந்த சட்டம் சேர்க்கப்பட்டால், அது இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக் அரசியல் பொருளாதார, சமூக சூழலுக்கு ஏற்றதல்ல.
பலவந்தமான தலையீடு ஒன்றின் மூலம் நாட்டில் உருவாக்கப்பட்ட 13வது அரசியல் அமைப்புத்திருத்தம் மற்றும் மாகாண சபை முறை காரணமாக ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து அழிவுகள் அதிகமாகும். அத்துடன் நிதி வள அழிவுகள், நிர்வாக ரீதியான குழப்பமான நிலைமை என்பனவும் மிகபெரிய பிரச்சினைகள மாறியுள்ளன. இதனால் மாகாண சபை முறைமைய ஒழிக்கப்பட வேண்டும் என ஜாதிக லெ உறுமய தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment