Translate

Saturday, 25 February 2012

தமிழக அரசின் நிலையும் அது தானா? : சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
’’சிங்கள இனவாத அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கையாகும். 

தங்கள் தாயகத்தை மீட்கவும், சுதந்திரமாக தமிழர்கள் வாழவும் விடுதலையைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்த பின்னர் தோன்றியது தான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம். ............ read more 

எம்.ஜி.ஆர் வழியா இல்லை நம்பியார் வழியா.. ஜெனீவாவில் ஜெயிக்கப் போவது யாரு…


சிறீங்காவிற்கு எதிராக மனித உரிமைக் கமிஷன் கொண்டு வந்திருக்கும் குற்றச்சாட்டுக்களில் மறைமுகமான வில்லனாக இருப்பவர் மலையாள நம்பியாரே..
எம்.ஜி.ஆரை நம்பிய ஈழத் தமிழர் அழிக்கப்பட்டு, இப்போது கிளைமாக்சில் நிற்கிறார்கள்.. எம்.ஜி.ஆர் காட்டிய தர்மமா.. இல்லை நம்பியார் காட்டிய அதர்மமா..? ஜெனீவாவில் ஜெயிக்கப் போவது.. யாரு..?

விடுதலைப் புலிகள் வீழவில்லை! அவர்கள் இப்போதும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வில் நெருப்பாக எழுந்து நிற்கிறார்கள்!!


தமிழினம் தங்களது வாழ் நாளிலேயே ஈகத்தின் உன்னதங்களையும், வீரத்தின் விளை நிலத்தையும், இலட்சியங்களின் உறுதியையும், அர்ப்பணிப்புக்களின் அணிவகுப்புக்களையும், கூடவே துரோகங்களின் குழிபறிப்புக்களையும், எதிரிகளின் கொடூரங்களையும் தரிசனம் செய்து வருகின்றது.................. read more 

ஜெனிவா அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது!- தலைவர் இரா.சம்பந்தன்


ஜெனீவாவில் எதிர்வரும் 27 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மனிதவுரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சி இன்று காலை கூடி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்னில் இருந்து ஜெனீவா பேருந்து புறப்படும் இடமும் நேரமும்!அன்பார்ந்த அர்பணிப்புடன் செயல் படும் தமிழர்களே!!

Following are the details for the pick-ups of people from London to Geneva......
. 0n Sunday 26/02/2012


லண்டன்னில் இருந்து ஜெனீவா பேருந்து புறப்படும் இடமும் நேரமும்!
http://www.youtube.com/watch?v=WeMxP0poMJY&list=UUEkbLojuS6hjY8h6OZHDC0g&index=2&feature=plcp

அன்பார்ந்த அர்பணிப்புடன் செயல் படும் தமிழர்களே,

தயவு செய்து கீல் குறிப்பிடும் இடத்திற்கு,நேரத்திற்கு வந்து;உங்கள் முழுமையான ஒத்துழைப்பை;நாடி நிக்கிறோம்.

பிந்தி வருபவர்கள் பேருந்து புறபட்டா பிறகு டோவர் வந்து சேர்ந்தால் அனுமதிக்க படுவர்.உங்கள் அனுமதி சீட்டு,
சரியான கடவுசீட்டு வைத்திருக்க வேண்டும்.
  Starting at 5:00PM (South Harrow)
South Harrow Food & Wine, 234 Northolt Road, South Harrow, Middlesex, HA2 8DU

Coaches arranged from London.

We are united ! We will win the diplomatic war with Sinhala Chauvinism!

ஜெனிவா சென்ற இலங்கைக் குழுவுக்குள் பிளவு

news
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுப்போம் என ஜெனிவா விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள் தற்போது தமக்குள்ளே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாகப் பிரிந்து முட்டி மோதிக் கொள்கின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அமைச்சர்களின் தராதரமற்ற இந்தச் செயலானது சர்வதேச மட்டத்தில் நாட்டுக்குப் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

உருப்படியான திட்டமெதுவும் இலங்கையிடம் இல்லை _

உருப்படியான திட்டமெதுவும் இலங்கையிடம் இல்லை _

  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பலமான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றவில்லை என்று அமெரிக்கா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. 

சரணடையும் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுக் கொடுத்ததை ஒப்புக்கொண்டார் விஜய் நம்பியார்

புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு சாட்சியாக செல்ல திட்டமிட்டிருந்த போது இலங்கை அரசு அனுமதி மறுத்தது!- விஜய் நம்பியார்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

காப்பாற்ற முடியாது என்று கையை விரித்தார் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை


சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவிடம் கையை விரித்து விட்டார்

இலங்கை அரசை கை விட்டது இந்தியா! ஆதரவு திரட்டித்தர மறுப்பு!- அதிர்ச்சியில் உறைந்துள்ள கொழும்பு


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது
ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில், அவசரமாகக் கொழும்பிலிருந்து புதுடில்லிக்குச் சென்ற உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று, அந்நாட்டின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் விடுத்த வேண்டுகோளை சாதகமான முறையில் பரிசீலிப்பதற்கு இந்தியா மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது.

இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம்: சிபிஎம் தீர்மானம்



வடகிழக்கை இணைத்து தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும்!- : சிபிஎம் தீர்மானம்

நாகப்பட்டினம்: இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து நிலம், காவல் துறை உள்ளிட்ட மாநில சுயாட்சி அந்தஸ்துடன் கூடிய அதிகாரங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பிரிட்டனில் இருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி 100 தமிழர்கள் நாடு கடத்தல்!


பிரிட்டனில் இருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி 100 தமிழர்கள் நாடு கடத்தல்!
இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துகின்ற நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு கை விட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரி உள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி சுமார் 100 தமிழர்கள் வரையானோர் பிரிட்டனின் தொடர் நடவடிக்கைகளின் கீழ் நாடு கடத்தப்பட உள்ளனர்.

கூட்டத்துக்கு வர விடமாட்டேன்! வந்தால் விரட்டுவேன்!! சவேந்திர சில்வா மீது லூயிஸ் அம்மையார் பாய்ச்சல்!!!


அமைதிக்காக்கும் நடவடிக்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூர்க்கத்தனமானது என்றும் இதன் பின்னால் உயர்மட்ட தொடர்பு இருப்பதாகவும் சிறிலங்கா கூறியுள்ளது.

கூட்டமைப்புடன் பேச வேண்டாம்! எங்களுடன் பேசுங்கள்!! அடம்பிடிக்கும் ஈ.பி.டி.பி.!!!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்புடன் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஈ.பி. டி.பி.யினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மனித உரிமைகளை பேசும் பாதிரிமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தேவானந்தா!

மனித உரிமைகளை பேசும் பாதிரிமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தேவானந்தா!

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கிறிஸ்தவ பாதிரிமாருக்கு அரசுத் தரப்பைச் சேர்ந்த சக்திகள், படையினர், துணை ஆயுத குழுவினர் ஆகியோரால் படுகொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்து இருக்கின்றனர்.

பாடசாலைச் சிறுவனுக்கும் கேலியாகிப் போன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ - கடுப்பானார் முதலமைச்சர்


பாடசாலைச் சிறுவனுக்கும் கேலியாகிப் போன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ - கடுப்பானார் முதலமைச்சர்
இலங்கையின் மத்திய மாகாண முஸ்லீம் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை போல் வேடமிட்டு, நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த சம்பவம் காரணமாக, மத்திய மாகாண முதலமைச்சர் கடுப்பாகிப் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கலைகளுக்கென செய்தியாளர்கள் தேவை: சி.ஜெயசங்கர் -


கலைகளுக்கென செய்தியாளர்கள் தேவை: சி.ஜெயசங்கர் -
'ஊடகங்கள் மிகப்பெரும்பாலும் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் அல்லது பாரம்பரிய கலைகளென்று ஏற்கனவே உள்ள பழைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதே தவிர, இன்றும் உயிர்ப்புடன் நடக்கும் விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தயாராக இல்லை. ஏனென்றால் அரசியல் செய்தியாளர், வணிகச் செய்தியாளர் போன்று கலைகளுக்கென செய்தியாளர்கள் இல்லை' என்கிறார் நாடக நடிகரும் எழுத்தாளருமான சி.ஜெயசங்கர்.

வெள்ளைக் கொடி சம்வம் குறித்து நம்பியார் விளக்கம்


வெள்ளைக் கொடி சம்வம் குறித்து நம்பியார் விளக்கம்
வெள்ளைக் கொடி சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி விஜயம் நம்பியார் விளக்கமளித்துள்ளார்.
 
சிரேஸ்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் தம்மைத் தொடர்பு கொண்டதாகத்தெரிவித்துள்ளார். மேரி கொல்வின் அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 24 February 2012

ஐ.நா முன்றலில் மக்கள் எழுச்சி


ஜெனீவா – ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவோம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடர்இ சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என பலராலும் எதிர்வு கூறப்பட்டுவரும் நிலையில்இ சிங்கள தேசத்துக்கு எதிரான தமிழர்களின் இராஜதந்திரப் போரின் முக்கிய சமர்களமாக இக்கூட்டத் தொடரினை கருகின்வோம்............ read more

பெப்27 ஜெனீவா ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு தமிழர் அமைப்புகள் அறைகூவல்


பெப்27 ஜெனீவா ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பலவும் அறைகூவல் விடுத்தள்ளன.
உலக மன்றின் கதவுகள் திறக்கப்படும்போது எமது மக்களிற்காய் நீதிகோரும் மனுவோடு திரள்வோம்!............... read more 

அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் ஆளுங்கட்சி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலக்கத்தில்


ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சி எதிர்வரும் வாரத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ள எதிர்ப்புச் செயற்பாடுகள், ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன எனத் தெரிகிறது. 

தமிழை எளிய முறையில் கற்றுக் கொடுக்கிறது ஓர் இணையத்தளம் தமிழை எளிய முறையில் கற்றுக் கொடுக்கிறது ஓர் இணையத்தளம்



இந்தத் தேவைக்காக ஆறு வருடங்களுக்கு முன்பு இளங்கோ சேரன் என்ற தமிழ் ஆர்வலர் உருவாக்கியுள்ளார். முப்பத்தி மூன்று பாடங்களுடன் மிகவும் பயனுள்ளதாகத் திகழ்கிறது. எளிய முறையில் கற்பித்தல் நடத்தப்படுகிறது.

ஜெனீவா ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு தமிழகத்தில் இருந்து நடிகர் சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார் !

அனைவரினது கவனமும் நம் பக்கம் திரும்பும் போது தான் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் எமது இலட்சியம் வெற்றிபெறும் என்றார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெனீவா ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு தமிழகத்தில் சீமான் அறைகூவல்!


பெப்ரவரி 27ஆம் நாள் தொடங்கவிருக்கின்ற ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களை ஐ.நா முன்றிலில் அணிதிரளுமாறு தமிழகத்தில் இருந்து செந்தமிழன் சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஒபரேஷன் கழுத்து வலி: கிருமினல் குற்றத்துக்காக அதிரடியாக 37 தமிழர்கள் கைது !


ஒபரேஷன் கழுத்து வலி: கிருமினல் குற்றத்துக்காக அதிரடியாக 37 தமிழர்கள் கைது !
24 February, 2012 by admin
இன்றைய தினம் இரவோடு இரவாக கனடாவில் சுமார் 37 தமிழர்களைப் பொலிசார், வீடு வீடாகச் சென்று கைதுசெய்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இந்தக் கைது நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் கழுத்து வலி என்று பெயரிடப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். ஆஹா என்ன இது கொஞ்சம் வித்தியாசமான பேரா இருக்கே எண்டு பார்க்கிறீர்களா ? வழமைபோல இந்த மேட்டரும் படு சுவாரசியமானது தான். வாங்க மேட்டருக்குள் போகலாம் !

லண்டன் ஜெனீவா பேருந்து பற்றுசீட்டு பெரும் இடங்கள்:Return trip by bus!LONDON to GENEVA!! 4 JUSTICE & PEACE!!! £70 only (SEVENTY POUNDS)TOGETHER 4 TAMILS Call & pay for your seat ACT NOW 07877204123


லண்டன் ஜெனீவா பேருந்து பற்றுசீட்டு பெரும் இடங்கள்:Return trip by bus!LONDON to GENEVA!! 4 JUSTICE & PEACE!!! £70 only (SEVENTY POUNDS)TOGETHER 4 TAMILS Call & pay for your seat ACT NOW 07877204123

Return trip by bus!LONDON to GENEVA!! 4 JUSTICE & PEACE!!! £ 70 only (SEVENTY POUNDS)
TOGETHER 4 TAMILS
http://www.youtube.com/watch?v=o59aAvWf6Ww&feature=player_embedded#!லண்டன்  ஜெனீவா பேருந்து பற்றுசீட்டு பெரும் இடங்கள்:

WEMBLEY:                                                                 
Sivayogam-London Nadarajar Temple
Anglo Asian Video Centre
Rathy Jewellers
Western Jewellers
Palm Beach Restorent

18வது நாளைத் கடந்து வலிந்து நடக்கும் கால்களுடன் வலிமையுடன் தொடர்கின்றது நீதிக்கான நடைப்பயணம்.

Tamilthesa Pothu Udamai Kachi Maniarasan supports Walk For Justice


Tamilthesa Pothu Udamai Kachi Maniarasan supports Walk For Justice




இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி18 நாட்களைக் கடந்து எழுச்சி வலுப்பெற நடைப்பயணம் தொடர்கின்றது.

ஆயுதப் போராட்டம் – சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் உங்கள் முன் ஒன்றாக


வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த 18ஆம் திகதி அன்று தம்pழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து முதன்முறையாக ஒரு மக்கள் சந்திப்பை நடத்தினர். கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன்,வினோநோகராதலிங்கம், மாவை. சேனாதிராஜா,.சரவணபவன், எம்.எ.சுமந்திரன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.; இந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போதே த.சித்தார்தன் மேற்கண்டவாறு கூறினார்.

சனல் 4 தொலைக்காட்சிக்கு 3 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது !


இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்துக்கும், மற்றும் சொமாலியா குறித்து எடுக்கப்பட்ட பிறிதொரு படத்துக்குமாக மொத்தம் 3 விருதுகள், சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது.

சனல் 4 தொலைக்காட்சிக்கு பிரித்தானியாவில் 3 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. றோயல் டெலிவிஷ சொசாயிட்டி எனப்படும் சமூக தொலைக்காட்சி அமைப்பு ஒன்று, வருடந்தோறும் வழங்கி வரும் விருதுகளில், இம் முறை 3 விருதுகளை சனல் 4 தட்டிச் சென்றுள்ளது. இதில் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்துக்கும் விருது கிடைத்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இவ்விருதுகளை தட்டிச் செல்ல அல்ஜசீரா, மற்றும் BBC போன்ற சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்கள் கடும்போட்டியில் இறங்கியிருந்தது.

சிறிலங்காவிடம் உருப்படியான திட்டம் ஒன்றுமில்லை – அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு


நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பலமான பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் பின்பற்றவில்லை என்று அமெரிக்கா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்த நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர்,

ஐரோப்பிய ஒன்றியமும் அறிக்கை – சிறிலங்காவுக்கு மற்றொரு எச்சரிக்கை


ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாகநடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

அரசாங்கம் உலகின் நம்பிக்கையை பெற தவறி விட்டது கடைசி ஆயுதம் கற்றுக்கொண்ட ஆணைக்குழு என்கிறார் மனோ கணேசன்


ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பில் அரசாங்கம் எதிர்கட்சிகளின் நம்பிக்கையை பெற தவறி விட்டது. மறுபக்கத்தில் அரசாங்கத்தின் சில பங்காளி கட்சிகள் மனித உரிமை விவகாரம் முழுவதையும், மேற்கத்தைய நாடுகளின் சதி என்று குரல் எழுப்ப தொடங்கிவிட்டனர்.

ஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு?-கே.சஞ்சயன்


ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது.இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது.சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும்.

இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு பிரேரணையின் சாராம்சமும் வெளியானது


newsஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா அமர்வில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு மேலும் ஆதரவு வலுத்து வருகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் நேற்றுப் பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன. அந்த நாடுகளில் ஒன்றே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழியும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்கா, பிரித்தானியாவுடன் நோர்வேயும் கைகோர்க்கிறது


சிறிலங்காவில் இடம்பெற்ற போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரும் நாடுகளுடன் நோர்வேயும் இணைந்து கொண்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக நோர்வேயும் அறிவித்துள்ளது.

மனோ கணேசன் நாளை சனிக்கிழமை நீர்கொழும்பில் உரை

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் நாளை சனிக்கிழமை 25 ம் திகதி  நீர்கொழும்பில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கை ஆகியவை தொடர்பில் உரையாற்றவுள்ளார்.

சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தபால் அட்டைகள்


http://naathamnews.com/wp-content/uploads/2012/02/post-card2.jpg

Wednesday, 22 February 2012

மார்ச் 5 அன்று ஐநா வில் அணிதிரண்டு நீதி கேட்போம்-திரு ஜெயானந்தமூர்த்தி

மார்ச் 5 அன்று ஐநா வில் அணிதிரண்டு நீதி கேட்போம்-திரு ஜெயானந்தமூர்த்தி

ஐரோப்பிய நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கி இடம் பெற்று வரும் மூன்று இளைஞர்களின் இலட்சியப் பயணம் எமது இனத்திற்கு சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட கொடுமையை சர்வதேசம் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அம்மூவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு அவர்களின் உயரிய இலட்சியத்தில் புலம்பெயர் மக்கள் அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் சங்கதிக்கு தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: “

பந்து இப்போது இந்தியாவிடம்


"இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய பரிந்துரையானது வெளிநாட்டு சக்திகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. அது இலங்கையின் நாடாளுமன்றில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்'' எனவும் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இது இந்தியாவை வெளிப்படையாக எதிர்க்கின்ற செயல்.
எனவே இலங்கை தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மீளாய்வு செய்யவேண்டிய காலம் நெருங்கி விட்டது. ............. read more 

2014 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மிகப்பெரிய அவலத்தைச் சந்திக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை - அறிக்கை!


கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு எதிராக ஜெனிவாவில் அய்.நா.வின் போர்க்குற்றத் தீர்மானம்
நியாயத்தின் பக்கம் நின்று இந்தியா ஆதரிக்கவேண்டும்
இல்லையேல் 2014 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மிகப்பெரிய அவலத்தைச் சந்திக்கும்

தமிழர் தலைவரின் எச்சரிக்கை - அறிக்கை!..............read more

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா தலைமையிலான "த எல்டர்ஸ்" அமைப்பு கடிதம்


ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு நெல்சன் மண்டேலா தலைமையிலான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான  த எல்டர்ஸ் அமைப்பு, ஜெனிவாக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளின் தூதுவர்களுக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘Lebara Village’ யாழ்ப்பாணத்தில் - போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி

‘Lebara Village’ யாழ்ப்பாணத்தில் - போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி 
போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு ‘லெபாரா நிதியத்தினால்’ (Lebara Foundation) வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

 
யாழ்ப்பாணம் மணியம்தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள 40 வீடுகள் கடந்த வாரம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதேநேரம், மேலும் 10 வீடுகள் தற்பொழுது கட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழர்களுக்கு குரல்கொடுத்த மரியா கெல்வின் இன்று கொல்லப்பட்டார் !

ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது. சிரியாவில் அந் நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தை உலகறியச் செய்யவும், செய்திகளைச் சேகரிக்கவும் அவர் அங்கே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர், போர் நடைபெறும் அனைத்து நாடுகளுக்கும் சென்றுள்ளார். 2001ம் ஆண்டு இவர் இலங்கை சென்றிருந்தவேளை ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி தனது ஒரு கண்ணை இழந்தார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டபோது தன்னை மயக்காமல் அவசர கண் சத்திர சிகிச்சையை செய்ய அவர் துணிச்சலோடு அனுமதித்தார். இருப்பினும் அது பலனளிக்கவில்லை. 

நோர்வே ரெலிகொம்மை கதிகலங்கவைக்கும் ஈழத் தமிழர் லியோன் !


லியோன், பாஸ்கரன், மற்றும் ரதீஸ் எனப்படும் 3 தமிழர்களால் நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் லிபரா ரெலிகொம் ஆகும். இதன் ஸ்தாபகர்களில் முக்கியமானவர் லியோன் ஆவார். அவர் நோர்வே நாட்டில் பல வருடங்களாக வசித்துவரும் ஒரு ஈழத் தமிழர் ஆவார். குறைந்த செலவில் இலங்கைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தக்கூடிய பல ரெலிகொம் நிறுவனங்கள் தற்போது இருக்கிறது. ஆனாலும் அவற்றுள் கணிசமான அளவு முன்னேற்றமடைந்து உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் காலூன்றியுள்ள ஒரு தமிழர் நிறுவனம் லிபரா ரெலிகொம் ஆகும். இந் நிறுவனம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்பது ஒரு சுவாரஷியமான விடையம் ஆகும்.