Translate

Wednesday, 22 February 2012

‘Lebara Village’ யாழ்ப்பாணத்தில் - போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி

‘Lebara Village’ யாழ்ப்பாணத்தில் - போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி 
போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு ‘லெபாரா நிதியத்தினால்’ (Lebara Foundation) வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

 
யாழ்ப்பாணம் மணியம்தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள 40 வீடுகள் கடந்த வாரம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதேநேரம், மேலும் 10 வீடுகள் தற்பொழுது கட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


 
இவ்வாறு கட்டப்படும் 50 வீடுகள் அடங்கிய தொகுதியை ‘லெபாரா கிராமம்’ (Lebara Village) என அந்தப் பிரதேச மக்களும், மத குருக்களும் பெரிட்டு, லெபாரா நிதியத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
 
லியோன், பாஸ்கரன், ரதீஸ் (LE-BA-RA) ஆகியோரால் உருவாக்கப்பட்டு, கடந்த 10 வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் லெபாரா நிறுவனம், தனது நிதியத்தின் ஊடாக பல்வேறு தொண்டுகளை வழங்கி வருகின்றது.
 
இதன் ஒரு அங்கமாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மூன்று அறைகள், குளிப்பறை, கழிப்பறை வசதிகளுடன் 50 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கு காணியைக் கொடுத்து உதவிய அந்தப் பிரதேச கோவில் நிருவாகத்திற்கு லெபாரா தனது நன்றியைத் தெரிவித்திருந்தது.
 
இதேவேளை, வன்னி, கிளிநொச்சியில் எதிர்கால சந்ததியின் கல்வி நலன் கருதி, கணினி வசதியுடன் நூலகம் கட்டும் பணியையும் லெபாரா நிதியம் மேற்கொண்டு வருகின்றது.
 
இந்தியா தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள 113 ஏதிலிகள் முகாம்களில் கடந்த பல வருடங்களாக இந்த நிதியத்தினால் பல்வேறு பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 4000 சிறுவர்களுக்கு உணவு, உறைவிட, கல்வி வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், தாயகத்தில் போரில் கால்களை இழந்த 200 பேருக்கு செயற்கைக்கால் பொருத்துதல் உட்பட மேலும் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
லெபாரா நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தாயகம், தமிழ்நாடு மற்றும் உலகில் உள்ள சிறுவர்கள், ஏதிலிகளுக்கு உதவி புரிவதற்காக ஒரு மில்லியன் யூரோவை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), மற்றும் ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் அமைப்பிற்கு (UNHCR) லெபாரா வழங்கி இருந்தது. இதன் மூலம் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் சிறுவர்கள் அனைத்துலக ரீதியாகப் பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment