
1006 ஜோடிகளின் திருமண விழா வருகிற 18ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடைபெறுகிறது.
இதற்காக கோவில் அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருமண விழாவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை தாங்குகிறார். 1006 புதுமண ஜோடிகளும் பந்தலில் அமர வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா 4கிராம் தங்கத்தாலியுடன் கூடிய மாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.