Translate

Wednesday 13 June 2012

உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றியிருந்தது.

உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றியிருந்தது.

குருதிஸ்தானில் (வட ஈராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர்.

ஐ.நா. நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கிடையே ’ஃபீஃபா’ (FIFA) அமைப்பினால் நடத்தப்படும் உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற முடியாத தேசிய இனங்களுக்கான போட்டியாக ’வீவா’ உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் முதன்முறையாக இம்முறை தமிழீழத்தின் சார்பாக தமிழீழம் உதைபந்தாட்ட அணி கலந்துகொண்டது.

இதில் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து தமிழ் உதைபந்தாட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் கனடாவில் இருந்து சென்ற வீரர்கள் திங்கட்கிழமை மாலை விமானநிலையத்தில் வந்திறங்கிய போது கனடிய தமிழர் விளையாட்டுக் கழகத்தினர், பெற்றோர், நண்பர்கள், இளையோர்கள் எனப் பலர் திரண்டு வரவேற்புளித்தனர்.

இரண்டு வருடங்களுக்கொருமுறை நடைபெறும் இப்போட்டிகளில் இம்முறை தமிழீழம், டார்புர், குருதிஸ்தான், வட சைப்ரஸ், ரேடியா, ஒக்சிரான்ரியா, புரோவென்ஸ், மேற்கு சகாரா, சான்சிபார் ஆகிய தேசிய இனங்களைச் சார்ந்த அணிகள் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கு பற்றியமை, தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற மற்றொரு ஒரு பதிவாகும்.

No comments:

Post a Comment