866 விடுதலை புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது!– அரசாங்கம்
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 866 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைவிடுதலை செய்ய முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.எம்.ஐ. தாக்குதல் ஹெலிகொப்டர்கள், இராணுவ முகாம்கள், பஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அமைப்புக்கள் கோரியுள்ளன. எனினும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment