தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி; தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரிய வரும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஈழ மொன்றை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விடயத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 13 October 2012
தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி; தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு
இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதால் இந்தியாவுக்கே பாதிப்பு; பொன். ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதால் இந்தியாவுக்கே பாதிப்பு; பொன். ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு |
இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதால் இந்தியாவுக்கே பாதிப்பு ஏற்படும் என பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
|
அரசியலமைப்பிற்கு முரணான த.தே.கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்காது
அரசியலமைப்பிற்கு முரணான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என சகோதரமொழிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கு முரணானதும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலுமான கோரிக்கைகளை அரசாங்கம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது.
அரசியலமைப்பிற்கு முரணானதும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலுமான கோரிக்கைகளை அரசாங்கம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது.
தீர்வு முயற்சியில் இந்தியா தீவிர அக்கறை கூட்டமைப்பின் பயணம் அதன் எதிரொலி; அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு
தீர்வு முயற்சியில் இந்தியா தீவிர அக்கறை கூட்டமைப்பின் பயணம் அதன் எதிரொலி; அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு |
"தீர்வு விடயத்தில் இந்தியா அக்கறை கொண்டுள்ளதன் காரணமாகத்தான் கூட்டமைப்பை அழைத்து அது பேச்சு நடத்துகின்றது. எனவே, இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை. "பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும்' என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருந்து வருகின்றோம்.''
|
கூடன்குளத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் போலீசார்! நேரில் ஆய்வு செய்த வழக்கறிஞர்கள் குழு பேட்டி!
கூடன்குளத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் போலீசார்! நேரில் ஆய்வு செய்த வழக்கறிஞர்கள் குழு பேட்டி!
கூடன்குளத்தில் 10.09.2012 அன்று நடந்த கலவரத்தின் தற்போதைய நிலைமையை கண்டறிய 22, 23.09.2012 ஆகிய இரு நாட்களில் நெல்லை மாவட்டம், கூடன்குளம், இடிந்தகரை, சுனாமி குடியிருப்பு, வைராவி கிணணு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களை நேரிடையாகச் சமநீதி வழக்கறிஞர்கள் சார்பில் 34 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
ஒரே நாளில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சூழல் இருந்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது: சுஷ்மா சுவராஜ்
ஒரே நாளில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சூழல் இருந்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது: சுஷ்மா சுவராஜ்
இலங்கைத் தமிழ் மக்களை இந்தியா கைவிட மாட்டாது. இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம். ஆனால், நாம் ஒரே அணியாக நின்று இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வோம் ௭ன்று இந்திய ௭திர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயற்பட த தே கூ இணக்கம்! - சம்பந்தன் அறிவிப்பு
இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு
2012 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தை ஒருங்கிணைத்தமைக்காக இப் பரிசு வழங்கப்படுவதாக நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ நகரில் வைத்து அமைதிக்கான நோபல் பரிசுக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தை ஒருங்கிணைத்தமைக்காக இப் பரிசு வழங்கப்படுவதாக நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ நகரில் வைத்து அமைதிக்கான நோபல் பரிசுக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
களத்து மேட்டிலும் உற்பத்தி செய்யலாம் கரன்ட்...!
களத்து மேட்டிலும் உற்பத்தி செய்யலாம் கரன்ட்...!
மாற்றுசக்தி! ஒரு புரட்சி!
'கரன்ட் இல்லை... கரன்ட் இல்லை...’ என்கிற குரல் ஒலிக்காத இடமே இல்லை. மாவு மில் தொடங்கி... 'மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள்’ வரை பவர் கட் பாதிப்பு, படுத்தி எடுப்பதன் விளைவு சொல்லி மாளாது. விவசாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. கருகும் பயிர்களைக் காப்பாற்ற இரவுபகலாக மின்சாரத்துக்காக காத்துக்கொண்டு... 'இதற்கான மாற்றுவழியே இல்லையா...?’ என ஏங்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, நம்பிக்கைக் கீற்றாக ஜொலிக்கிறது, 'சோலார் பவர்’ என்ற சூரியசக்தி மின்சாரம்.

மோரே - ஒரு குட்டித் தமிழ்நாடு!
”செம்மொழியான தமிழ் மொழியாம்...தமிழ் மொழியாம்... இன்பத் தமிழ் மொழியாம்...!”-தமிழின் புதிய கீதம் ஒலித்த இடம் தமிழகம் அல்ல; மோரே!
மணிப்பூர் மாநிலம் சாண்டல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் கிழக்கு எல்லைக்
கிராமம்தான் மோரே.இது ஒரு மலைக்கிராமம்.பூர்வீகக் குடிகளான குக்கீஸ்களுடன் தமிழர்கள், நேபாளிகள், பஞ்சாபிகள் என வசித்து வருகின்றனர்.இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் சரளமாகத் தமிழ் புழக்கத்தில் உள்ளது. மோரேவின் பூர்வீகக் குடிகளும் எல்லைப்பகுதியைச் சேர்ந்த பர்மியர்களுமே தமிழில் பேசிக் கொள்வது ஆச்சரியம்.
இவர்களை நம்பியா இருக்கிறோம்?
இவர்களை நம்பியா இருக்கிறோம்?
பனி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு, குழந்தைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு தலை தெறிக்க ஓடினார்கள்.

Friday, 12 October 2012
இலங்கை அரசிற்கு சாட்டை அடி - பிரித்தானியாவில் தமிழர்களுக்கு ஆளும்கட்சியில் தனித்துவ அந்தஸ்த்து!
பிரித்தானியாவின் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி (conservative) தனது கட்சிக்கான உப கட்சியாக பிரித்தானியத் தமிழர்களைக் கொண்ட உபகட்சியாக British Tamils Conservative (BTC) எனும் அமைப்பை உத்தியோக பூர்வமாக அங்குராற்பணம் செய்து வைத்துள்ளது.
இப்புதிய கட்சியில் பிரித்தானியத் தமிழர்கள் மட்டுமல்லாது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர். கடந்த செவ்வாய்க் கிழமை (09.10.2012) நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக
Rt. Hon. Thersa Villeris, MP & Minister (Secretary of State for Northern Ireland)
Lee Scott MP (Chairman, All party group for Tamils)
Dr. Syed Kamal MEP
Rt Hon. Grant Shapps, MP (Conservative party Chairman)
Jackie Doyle-Price MP,
Robert Halfon, MP for Harlow, Rt. Hon.
Dr. Rachel Joyce,
Roger Evans (GLA member),
Dr. Charles Tannock, MEP,
Liam Fox, MP,
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
"முன்னேஸ்வரம் சிவன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க பிக்குகள் தடை"
சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஜாதிக ஹெல உருமய பௌத்த பிக்குகள் கட்சி தடையாக இருப்பதாக அக்கோயிலின் தர்மகர்த்தாவும் தலைமைப் பூசாரியுமான பத்மநாப குருக்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று 12.10.12 காவிரியிர் தண்ணீர் தர மறுக்கும்
இன்று 12.10.12 காவிரியிர் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை தடை செய்ய வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
GTF உடன் இணைந்து ரகசியமான முறையில் செயற்பட்டு வரும் NGOகள் குறித்து விசாரணை
இலங்கை இராணுவத்திற்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தி, குற்றவாளியாக முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து ரகசியமான முறையில் செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்கள் குறித்து சிறீலங்கா அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நெய்வேலி அனல் மின்நிலையம் முற்றுகை: வைகோ கைது!
கர்நாடகாவுக்கு மின் விநியோகத்தை நிறுததக்கோரி நெய்வேலி அனல் மின்நிலையத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Thursday, 11 October 2012
வடக்கின் உண்மையான கருத்து, அபிலாஷைகளை வெளியிட ஆளுநரால் முடியாது: நீதிமன்றில் மாவை
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
வட மாகாணத்தின் உண்மையான கருத்துக்களையும் அபிலாஷைகளையும் முன்னுரிமை விருப்புகளையும் சரியாக வெளியிடுவதற்கு ஆளுநரால் இயலாது எனவும் அதற்கான தகுதி அவருக்கு இல்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உயர்நீதிமன்றில் இன்று தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களத்தின் பரப்புரைகள் பொய் என்பதனை உறுதிப்படுத்தியுள்ள ‘இந்து’பத்திரிகை அனலை நிதிஸ் ச. குமாரன்
பல தசாப்தங்களாக தமிழீழ விடுதலையைக் கொச்சைப்படுத்தியும், ஈழத் தமிழரின் விடுதலைக்காக வீரம் செறிந்த ஆயுதப் போரை முன்னெடுத்த விடுதலைப் புலிப் போராளிகளைக் களங்கப்படுத்தியும் எழுதிவந்த சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘இந்து’ பத்திரிகை முதல் முறையாக சிங்கள அரச தரப்பினர் வழங்கிய இராணுவப் புள்ளிவிவரங்கள் பொய் என்று தெரிவித்துள்ளதுடன், தான் சேகரித்த நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் செப்டம்பர் 20-ஆம் தேதியன்று நீண்ட முக்கிய தலைப்புக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக ஆயிரம் நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற உதாரணம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவாதம் அளித்தாலே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இணைய முடியும்: � சுமந்திரன்
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மூலம் மட்டுமே, நிலை யான அமைதியை கொண்டுவர முடியும் என்பதை சிறிலங்கா அரச தலைமைக்கு புதுடெல்லி தெளிவு படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித் துள்ளார்.
யூதர்களைப் போன்று நாமும் நமக்கென ஒரு நாட்டினை உருவாக்க வேண்டும்! - நாடு கடந்த தமிழீழ அரசவைத் தலைவர் பொன் பால்ராஜ்
'தமிழர்களின் வரலாற்றை, விடுதலைப் போராட்டத்தை யூதர்களுடன் ஒப்பிடும்போது யூதர்கள் பாலஸ் தீன மக்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் எப்படி தங்களு க்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். அதுபோன்றே தமிழீழப் போராட்டத்தின்போது ஏற்பட்ட பிரச்சினைகள், முரண்பாடான கருத்துக்கள் என்ற வரலாற்றைப் பார்க்கின்றபோது 1891ம் ஆண்டு ஜியோ னிசம் என்று ஆரம்பிக்கப்பட்டு யூதர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்ற சிந்தனை உருவாகியது.
|
இலங்கையில் மத சுதந்திரம் பேணப்படும் லட்சனத்தை பாருங்கள்! ராஜகோபுரம் அமைக்கத் தடை!
சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஜாதிக ஹெல உருமய பௌத்த பிக்குகள் கட்சி தடையாக இருப்பதாக அக்கோயிலின் தர்மகர்த்தாவும் தலைமைப் பூசாரியுமான பத்மநாப குருக்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
"இலங்கை தமிழர்களுக்கு உதவுவதிலிருந்து இந்தியா பின்வாங்காது"
இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு உதவ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின்வாங்காது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தங்களிடம் உறுதியளித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தர் தெரிவித்தார்...................read more
சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் மறுப்பு
இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, சொடுக்குஎரிக் சொல்ஹேம்தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.................... read more
சிலாபம் முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கு இராஜகோபுரம் அமைக்க ஹெல உறுமய தடை:
சிலாபம் முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கு இராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஜாதிக ஹெல உறுமய பௌத்த பிக்குகள் கட்சி தடையாக இருக்கின்றனர் என கோயிலின் தர்மகர்த்தாவும் தலைமைப் பூசாரியுமான பத்மநாப குருக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
பொறுமைக்கும் எல்லை உண்டு என்றார் கிருஷ்ணா': சம்பந்தர் - TNA - இந்தியத் தலைவர்கள் சந்திப்பு
இலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.செயலகத்தில் நாய்கள் சில ஊளையிட்டன – உங்களுக்கும் கேட்டதா - ஜி.ஏ.சந்திரசிறி
யாழ்.செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) சில நாய்கள் வந்து குரைத்துக்கொண்டிருந்தன. உங்களிற்கும் அது கேட்டதாவென கேள்வி எழுப்பியுள்ளார் வடமாகாண ஆளுநரும் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி. நேற்று செவ்வாய்க்கிழமை அவசர அவசரமாக வடமாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களை அழைத்து அவர் உரையாடினார்.
மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன'-பிரான்செஸ் ஹரிசன்
மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன'-பிரான்செஸ் ஹரிசன்
கேள்வி: சிறிலங்காவில் மீண்டும் தமிழர் போராட்டம் வெடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?
பதில்: ஆம், ஆனால் உடனடியாக இல்லை. நான் எனது புத்தகத்திற்காக நேர்காணல் மேற்கொண்ட எந்தவொரு புலி உறுப்பினர்களும் உடனடியாகப் போர் தொடங்க வேண்டும் எனக் கூறவில்லை.

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....
எச்சரிக்கைச் செய்தி. . . .
எச்சரிக்கைச் செய்தி. . . .
முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்..
எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..
அவர் தன்னுடைய Cellphoneல், மாதாமாதம் தவறாமல் 98ரூபாய்க்கு Recharge செய்து
Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..
அவர் தன்னுடைய Cellphoneல், மாதாமாதம் தவறாமல் 98ரூபாய்க்கு Recharge செய்து
Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
கனடா தமிழ் திரைப்பட விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி கோரிக்கை
கனடா தமிழ் திரைப்பட விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி கோரிக்கை |
கனடா, ரொறண்டோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் கனடா கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து கனடாவில் செயற்பட்டுவரும் நாம் தமிழர் கட்சி கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, |
பிரபா, பொட்டுவை பணயம் வைத்தே ஏனையோரைக் காக்கும் சர்வதேசத் திட்டம்; இப்போது போட்டுடைக்கிறார் எரிக் சொல்ஹய்ம்
பிரபாகரனையும் பொட்டம்மானையும் இலங்கை அரசிடம் பிடித்துக்கொடுத்துவிட்டு ஏனையவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்ற திட்டத்தையே சர்வதேசம் கொண்டிருந்தது.அதனால் புலிகள் அந்தத் திட்டத்தை நிராகரித்து விட்டனர் என்று நோர்வேயின் முன்னாள் அமைச்ரும், இலங்கையின் சமாதானப் பேச்சுக்களில் ஏற்பாட்டாளராக பணியாற்றியவருமான, எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் பி.பி.சி. தமிழோசை மற்றும் சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த செவ்வியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கூட்டமைப்பை சந்தித்த பின்னர் மகிந்தவை அடுத்தவாரம் சந்திக்கிறார் மன்மோகன்சிங்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை அடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அடுத்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் சட்ட ஒழுங்கை பேண வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்: சோபித தேரரரும் எதிர்ப்பு.
நாட்டின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தைச் சேர்ந்த மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார். நீதித்துறை, அதன் சுயாதீனத்தை இழந்துவிட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் மக்கள் உயிராபத்துக்களுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை கடற்படை அட்டூழியம்: 5 மீனவர்கள் காயம்,
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்கசென்றனர்.
கிருஷ்ணாவுடன் இலங்கை எம்.பி.க்கள் சந்திப்பு
புதுடில்லி: இந்தியா வந்திருந்த இலங்கை எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள்சம்பந்தன்தலைமையில் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் இன்று புதுடில்லியில் , வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு, மறு குடியமர்த்துதல் தொடர்பாக விவாதித்தனர்.
இந்த உணவைச் சாப்படுவோர் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.
இன்று நோய்களை வரவேற்கும் மைக்ரோ வேவ் சமையல் பற்றிய தகவல்.
ஆச்சரியம் தான்பா... ரெண்டே ரெண்டு நிமிஷம்... பொறியலைச் செய்து விட்டேன்... காலை அவசரத்துக்கு, மைக்ரோ வேவ் ஓவன்’ எவ்ளோ, “யூஸ்’ஆக
ஆச்சரியம் தான்பா... ரெண்டே ரெண்டு நிமிஷம்... பொறியலைச் செய்து விட்டேன்... காலை அவசரத்துக்கு, மைக்ரோ வேவ் ஓவன்’ எவ்ளோ, “யூஸ்’ஆக
ுது பார்...’ என, நண்பயிடம் பெருமைப்படக் கூறுகிறீர்களா?
“கீழே உள்ள கட்டுரையைப் படியுங்க...’ - இப்படி நாங்கள் சொல்வதற்கு முன், “அதெல்லாம் ஒண்ணுமில்லே... மைக்ரோவேவ் ஓவன் தயாரிப்பாளர் யாராவது விளம்பரம் கொடுக்காம இருந்திருப்பாங்க... அவங்களை மடக்க, இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கீங்க...’ என்ற எண்ணம், மனதில் மிக வேகமாக மின்னி மறைகிறதா... மேலே படியுங்கள்!

Monday, 8 October 2012
13ஆவது சட்டத் திருத்ததை எப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை
13ஆவது சட்டத் திருத்ததை எப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தத்தை தமிழர் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள, நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையை தாம் நாடுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி செய்திக் குழுமத்தின் பொய்ச் செய்திக்கு கிடைத்த தண்டனை
புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக அவதூறு செய்தி பிரசுரித்த வழக்கில் லங்காசிறி செய்திக் குழுமத்தின் உரிமையாளர் சிவஞானம் ஸ்ரீகுகன் சுவிஸ் நீதிமன்றத்தால் குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளார்.
சுவிஸை தளமாக கொண்டு இயங்குகின்ற ஊடகவியலாளரும், பத்தி எழுத்தாளருமான இரா. துரைரட்ணத்தை இலங்கை அரசின் உளவாளி என்றும் இலங்கையின் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஒற்றர் என்றும் சித்தரித்து தாறுமாறாக லங்காசிறி செய்திக் குழுமம் சில காலத்துக்கு முன் செய்தி பிரசுரித்தது.
இதை ஆட்சேபித்து இரா. துரைரட்ணம் பொலிஸ் முறைப்பாடு மேற்கொண்டார்.
Sunday, 7 October 2012
தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் - சொல்ஹெய்ம்
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் திர்வு வழங்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உடனடி முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் எதிர்காலத்தில் எந்த ஆயுதத்தைத் தூக்க வேண்டும் என்பதைச் சர்வதேசம் தான் தீர்மானிக்கப்
தமிழர்கள் எதிர்காலத்தில் எந்த ஆயுதத்தைத் தூக்க வேண்டும் என்பதைச் சர்வதேசம் தான் தீர்மானிக்கப் போகின்றது. இலங்கை அரசை நம்புவதற்கு தமிழர்கள் இனியும் தயாராக இல்லை என நேற்று யாழ்ப்பாணம் சென்ற ஐ.நா.துணைச் செயலாளர் அஜய் சிப்பரிடம் யாழ்.பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரி.ஆர்.ரி. தமிழ்ஒலியின் நிதி உதவியில் கோப்பாபுலவு மக்களுக்கு உதவி
மெனிக்பாம் முகாமில் இருந்த இறுதிக் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டு சூரிபுரத்தில் குடியேற்றப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு தேவையான உதவி பொருட்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இன்று கையளிக்கப்பட்டன
பிரான்ஸிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலி மற்றும் வவுனியா வர்த்தகர்கள் ஆகியவற்றின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட முறையே 30 துவிச்சக்கர வண்டிகளும் உலருணவு பொருட்களும் மீள்குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்டன.
மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச
்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.
“முடியட்டும் கூடங்குளம் கூத்து”
துக்ளக் பத்திரிகையின் 26.9.2012 இதழில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார் சோ “முடியட்டும் கூடங்குளம் கூத்து” என்ற தலைப்பில். “விடுதலைப் புலிகளைப் போல பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தி, போலீசாருடன் மோதுகிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டும்” என்று மீண்டும் ஓலம் இடுகிறார் சோ.
“எங்கே பிராமணன்” என்று தேடிக்கொண்டிருக்கும் சோவுக்கு பிரச்சினை அணுமின் நிலையம் அல்ல. பிராமணர் அல்லாத சாமான்ய மக்கள், அதாவது படகோட்டி, பனையேறி, பலசரக்குக் கடை நடத்துபவர், தலித் மக்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள் போன்றோர் பிராமணீயம் எடுக்கும் முடிவுக்கு எதிராக, போடும் திட்டங்களுக்கு எதிராகப் பேசுவதை, போராடுவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவாள் சொல்வதைக் கேட்டு அடங்கி நடக்க வேண்டிய நாம், சூத்திரர்கள், எப்படி எழுந்து நிற்க முடியும், போராட முடியும்? இதுதான் சோவின் பிரச்சினை.
Subscribe to:
Posts (Atom)