புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக அவதூறு செய்தி பிரசுரித்த வழக்கில் லங்காசிறி செய்திக் குழுமத்தின் உரிமையாளர் சிவஞானம் ஸ்ரீகுகன் சுவிஸ் நீதிமன்றத்தால் குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளார்.
சுவிஸை தளமாக கொண்டு இயங்குகின்ற ஊடகவியலாளரும், பத்தி எழுத்தாளருமான இரா. துரைரட்ணத்தை இலங்கை அரசின் உளவாளி என்றும் இலங்கையின் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஒற்றர் என்றும் சித்தரித்து தாறுமாறாக லங்காசிறி செய்திக் குழுமம் சில காலத்துக்கு முன் செய்தி பிரசுரித்தது.
இதை ஆட்சேபித்து இரா. துரைரட்ணம் பொலிஸ் முறைப்பாடு மேற்கொண்டார்.
லங்காசிறி செய்திக் குழுமதுக்கு எதிராக சுவிஸ் பொலிஸார் குற்றவியல் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தனர்.
இச்செய்தி தவறானது என்றும் இரா. துரைரட்ணம் சம்பந்தப்பட்ட செய்திக்கு ஆதாரங்கள் கிடையாது என்று நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார் ஸ்ரீகுகன்.
இந்நிலையில் ஸ்ரீகுகனை குற்றவாளியாக இந்நீதிமன்றம் கண்டு கொண்டது.
தீர்ப்பு வழங்கப்படுகின்ற நேரத்தில் இருந்து 72 மணித்தியாலங்களுக்குள் பிழை திருத்தச் செய்தியை விரிவாகவும், தெளிவாகவும் லங்காசிறி செய்திக் குழுமம் பிரசுரிக்கின்றமையுடன் இரா. துரைரட்ணத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வழக்கு சம்பந்தமாக அரச தரப்புக்கு ஏற்பட்டு இருக்கக் கூடிய செலவுகள் அனைத்தையும் ஸ்ரீகுகன் செலுத்த வேண்டும் என்றும் இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின் நடக்காத பட்சத்தில் ஸ்ரீகுகன் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை ஸ்ரீகுகன் ஏற்றுக் கொண்டார்.
இவர் அரச செலவினமாக 50,000 யூரோ வரை செலுத்த வேண்டி இருக்கும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் மூலம் எமக்குத் தெரிய வந்து உள்ளது.
அத்துடன் துரைரட்ணம் மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்கின்ற பட்சத்தில் பல இலட்சம் யூரோக்களை ஸ்ரீகுகன் நஷ்ட ஈடாக செலுத்த வேண்டி இருக்கும் என்றும் அறிய வந்து உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரரே ஸ்ரீகுகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment