Translate

Sunday, 7 October 2012

தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் - சொல்ஹெய்ம்


தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் - சொல்ஹெய்ம் -
தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் திர்வு வழங்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உடனடி முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசனினால் எழுதப்பட்ட 'ஸ்டில் கவுன்டிங் தி டெட்' என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமிழ் மக்களை அணுக வேண்டுமாயின் நான்கு முக்கிய காரணிகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
1.   அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல்
2.   வெள்ளை வான் கடத்தல் எனப்படும் சட்டவிரோத கடத்தல்கள் நிறுத்தப்படல்
3.   வடக்கின் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல்
4.   வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் இடம்பெறாது என்பதற்கு உத்தியோகபூர்வ வாக்குறுதியளித்தல்
ஆகிய நான்கு பிரதான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பிரதிநிதி யாஸ்மீன் சூகா மற்றும் சர்வதேச அனர்த்தக் குழுவின் பிரதிநிதி அலன் கீனன் ஆகியோரும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment