நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளமான www.naathamnews. comஇணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார்.
நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.

கடந்த 2010 அக்டோபர் மாதம் லண்டன் கிங்-கிரஸ் ரயில் நிலையத்தில் டேவிட் பேர்ஜஸ் என்னும் (ஆணாக இருந்து பெண்ணாக மாறிய) சோனியா தற்கொலைசெய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டது. அவர் ஓடும் ரயிலின் முன்னால் விழுந்து தற்கொலைசெய்ததாக அறிவிக்கப்பட்டது............ READ MORE 

காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களைப் பகிருமாறு தாம் விடுத்துள்ள கோரிக்கை சிறிலங்கா அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதா என்று தாம் முடிவு செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அதிகாரப் பகிர்வு முறையை ஏற்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானத்துக்கு வரவேண்டும். அதனைவிடுத்து அவசர அவசரமாக கருத்துக்களை வெளியிடுவதாலோ, ஏனைய கட்சிகளுடன் பேசுவதன் மூலமோ எதிர்பார்க்கின்ற பலாபலன்களை பெற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது............. READ MORE
பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லை, இராணுவ முகாம்கள் வாபஸ் இல்லை, என்ற ஜனாதிபதியின் அறிவிப்புகள் புதிய ஆண்டில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை தகர்த்து விட்டுள்ளன. புலிகளை அழித்து, போரை முடித்து வைத்து விட்டு சமாதானத்தை வாங்கித்தருகிறோம் என இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள் காப்புறுதி சான்றிதழ்கள் வழங்கியிருந்தன.................. READ MORE
கூடங்குளம் அணுமின்உலைப் பிரச்சினையில் போராட்டக் குழுவினருடன் ஒருபுறம் பேச்சு நடத்திக்கொண்டே மறுபுறம் 15 நாட்களில் அணுமின் உலை செயல்படத் தொடங்கும் என எதேச்சதிகார முறையில் அறிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.......... read more
இந்த விதவைகள் விசேடமாக இளம் விதவைகள் எதிர்கொள்ளுவதும்,வெகு அபூர்வமாகப் பேசப்படுவதுமான மற்றொரு விடயம். அவர்கள் விதவைகளானபடியால் அவர்களது உடற்தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலே தங்கி விடுகின்றன.இது எவ்வளவு தீவிரமான விடயம் என்பதை எங்களில் அநேகர் சிந்திப்பதேயில்லை.இந்தப் பாலியல் பசிக்கு ஆளாகும் விதவைப் பெண்கள் தங்கள் இயற்கைத் தேவைகளை போக்குவதற்காக வேறு திசைதிருப்பக்கூடிய மார்க்கங்களோ அல்லது பொழுதுபோக்குகளோ இல்லாமல் சாதாரண வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும் என எவ்வாறு நாங்கள் எதிர்பார்க்க முடியும்?
போர் மற்றும் ஏனை காரணங்களால் தமிழர் தாயகத்தில் 80 ஆயிரத்துக்கும மேற்பட்ட விதவைப் பெண்கள் உள்ளார்கள் என புள்ளி விபரமொன்று தெரிவிக்கையில் யாழ் குடாநாட்டில் மட்டும் 29 ஆயிரம் விதவைப் பெண்கள் உள்ளார்கள் என யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்............ read more
தென் தமிழீழத்தை ஆக்கிரமித்துக் கொண்ட சிங்களப் பேரினவாத அரசானது,கிழக்கின் உதயம் எனும் திட்டத்தின் ஊடாக தமிழர் நிலங்களை அபகரிப்பதோடு தமிழர்களை அவலத்துக்க உள்ளாக்குவதிலேயே குறியாக உள்ளது.............. read more 
இன்று பிற்பகல் டென்மார்க் வெளிநாட்டமைச்சில் பொது மக்கள் சந்திப்புக்கான வாய்ப்புக் கிடைத்தது, இதனை சாதகமாக்கி, டென்மார்க் தமிழர் பேரவையின் அரசியல் விவகாரக் குழு வெளிநாட்டமைச்சரை சந்தித்துள்ளனர்............. read more
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைத் தரமுடியாது என்று சிறீலங்கா அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அந்த அதிகாரங்களை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் பயன் ஏதும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அந்த அதிகாரங்கள் தரப்படாவிட்டால் அப்படியொரு தீர்வே வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. .......... read more
இலங்கை இராணுவத்தில் பணி புரிந்த மற்றும் கப்டன் தரத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. 2003ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் ஒரு பிரிவின் கப்டனாகப் பணி புரிந்த விக்கிரமசிங்க என்பரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். 51 வயதுடைய இவர் 2 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். சம்பவ தினமன்று இவரைத் தொடர்புகொண்ட சிலர் பெனாண்டோ என்று அழைக்கப்படும் இவரது நண்பரின் பெயரைச் சொல்லி இவருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.................. read more
தமிழீழ விடுதலையின் தேவையை உணர்த்தும் விதமாகவும் தமிழிழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாகவும் மிக அழுத்தம் திருத்தமாக எடுத்து திரையிடப்பட்டுள்ள உச்சிதனை முகர்ந்தல் திரைப்படம் தொடர்பான செய்தி சன் டிவியில் இன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது............. read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடுதியை இராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். பல்கலைக் கழகத்தின் பாலசிங்கம் ஆண்கள் விடுதியின் இருமருங்கிலும் தரித்து நின்று வீதியால் செல்பவர்களை இராணுவத்தினர் சோதனை செய்தனர்........... read more
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்காவும் நிராகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமையவில்லை என்று அது தெரிவித்துள்ளது.......... read more
30 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த ராதிகாவைப் போல பல பெண்கள் உட்பட வடக்கு கிழக்கில் தற்போது 89,000 வரையான கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர்.
அதிகாரப்பகிர்வின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கவும் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.......... read more
வடக்கு கிழக்கில் தமிழர்வாழ்இடங்களில் உள்ள படைமுகாம்கள் ஒருபோதும் அகற்றப்படமாட்டது என அரசதரப்பு பிரதமகொறடா தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் வழியில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சுமார் ஏழாண்டு காலமாக பல அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்தியாவைச் சேர்ந்த சுவாமி ஸ்ரீமத் ஞானமயானந்த ஜீ மகராஜ் அவர்கள் இன்று 12.30மணியளவில் மட்டக்களப்பிலிருந்து நிரந்தரமாக இந்தியாவை நோக்கி இராமகிருஷ்ன மிஷனின் தலைமை மடமான வேலூர் மடத்திற்கு பயணமானார்............ read more| வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது! |
![]() நக்கீரன் (கனடா) தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அலங்காரப் பெயரில் ஒரு விண்ணப்பம் வெளிவந்துள்ளது. அதில் பல பெயர்கள் காணப்படுகின்றன. பெரும்பான்மையினர் வண. பிதாக்கள் மற்றும் வைத்திய கலாநிதிகளது பெயர்களாகும். எது எப்படியோ தமிழ் மக்களது அரசியல் தீர்வு பற்றி இந்த தமிழ் சிவில் சமூகம் காட்டும் கரிசனை வரவேற்கத்தக்கது............. read more |


![]() |