Translate

Saturday, 24 December 2011

இந்த வருடத்தின் செய்தியாளராக ஜக் லேட்டன் தெரிவு

 இந்த வருடத்தின் செய்தியாளராக ஜக் லேட்டன் தெரிவு


கனடாவில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபைஈசன் வருவதற்கு காரணகர்த்தா  ஜக்லேட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் சிறந்த செய்தியாளராக அதாவது ஊடகங்களில் அதிகளவு செய்திகளை உருவாக்கியவராகமறைந்த என்.டி.பிதலைவர் ஜக் லேட்டன் கனடா அச்சக நிறுவனத்தினால் தெரி வு செய்யப்பட்டுள்ளார்.பொது நல சேவையில் அதிகளவு ஈடுபாடு கொண்டு கட்சித் தலைவராகவும்சிறந்த குடும்பத் தலைவராகவும்இறுதியில் எதிர்க் கட்சித் தலைவராகவும் திகழ்ந்தவர்.



இவ்வருடத்துக்கான சிறந்த செய்தியாளர் தெரிவின் போது ஜக் லேட்டனுக்கு 90 வீதமான வாக்கு கள்கிடைத்துள்ளனபிரதமர்  ஸ் ரீபன் ஹாப்பருக்கு 5 வீதமான வாக்குகள் மாத்திரமே கிடைத் தனதன்னந்தனியாக நின்று தனது பேச்சுத் திறத்தால் கனடா அரசியலை மெருகூட்டியவர் ஜக் லேட்டன் என “The Huffington Post பத்திரிகையின் செய்தி ஆசிரியரான Brodie Fenlon கூறினார்கைத்தடியை ஊன்றி மேடைக்குமேடை ஏறி சிரித்த முகத்துடன் தேர்தல் பிரச்சாரம் செய்து அமோக வெற்றி ஈட்டியவர்அதன் மூலம்என்.டி.பி.கட்சியை எதிர்க் கட்சி ஆக்கிய பெரும ஜக் லேட்டனையே சாரும்.
அவர் 2003ம் ஆண்டு கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற போது 19 ஆக இருந்த கட்சியின் ஆச னம் 2006ம்ஆண்டு 29 ஆகவும்பின்னர் 2008ம் ஆண்டு 37 ஆகவும் அதிகரித்தமை அவரது செல்வாக்கினால் என்பதுமிகையாகாது.
 கனடாவில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபைஈசன் வருவதற்கு காரணகர்த்தா  ஜக்லேட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment