Translate

Wednesday 1 June 2011

இறுதிக்கட்டப் போரின்போது புலிகளை சுற்றிவளைத்த கருணா குழுவினர்!


இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகள் கிழக்கில் பதுங்கியிருக்கக்கூடிய பகுதிகளில் இராணுவத்துடன் இணைந்து கருணா குழுவினர் நிலைகொண்டிருந்தனர்.
இதன் மூலம் விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை இராணுவத்தினருக்கு கருணா குழுவினர் உதவியதாக இலங்கையின் இராணுவ உயரதிகாரி மேஜர் ஜெனரல் சாகி கலகே தெரிவித்துள்ளார்.

முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினர் முன்னின்று உதவியதாக அந்த உயர்ரதிகாரி தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான போரில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்துலக மாநாட்டின் இரண்டாம் நாள் இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் மேஜர் ஜெனரல் கலகே கலந்து கொண்டு உரையாற்றுபோது இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவால் விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் கருணா குழுவின் பங்களிப்பு தொடர்பாக கேட்கப்பட்டது.
இக்கேள்விக்குப் பதில் அளித்த மேஜர் ஜெனரல் சாகி கலகே;
புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினரின் உதவி பெறப்பட்டது, ஆனால் இக்குழுவினர் களமோதல்களில் நேரடியாக ஈடுபடுத்தப்படவில்லை, வேறு விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டனர் என்று கூறினார்.
இவர் தொடர்ந்து கூறுகையில், கருணா குழுவினர் கிழக்கு மகாணத்தின் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டனர். இம்மாகாணத்தில் புலிகள் உள்நுழைந்து இராணுவத் தாக்குதல்களை நடத்தாமல் இவர்கள் பார்த்துக்கொண்டனர் என்றார்.... ............ read 

1 comment: