Translate

Wednesday 1 June 2011

வவுனியாவில் இருந்து..(ஒரு அவசரத் தகவல்)


நடந்து முடிந்த ஈழத்திற்கான நீண்ட போரில் சில உலகநாடுகளின் உதவியுடனும் பல கொடுமையான சர்வதேச போர்க்குற்ற நடவடிக்கைகளுடனும் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த சிறிலங்கா ராணுவம் போருக்கு பின்னரும் பல மனிதஉரிமை மீறல்களையும் வன் கொடுமைகளையும் நடத்திவருகிறது. முள்வேலிகளுக்குள் அடக்கப்பட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் காணாமல்போவதும் நூற்றுக்கணக்கில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாவதுமே இதற்கு சாட்சி.


கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் இவர்களிடம் எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர் இன்னும் மீதம் இருப்பது 150 படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே.

போர் நடைபெற்ற காலத்திலேயும் போருக்கு முந்தைய காலகட்டத்திலும் எந்தவித ஆயுதங்களையும் கையில் எடுக்காமல் வன்முறைக்கு உட்படாத புலிகளின் அரசியல் பிரிவுகளிலும், அரசியல் தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த படித்த பட்டதாரி தமிழ் இளைஞர்களை போர்க்காலத்தில் சிங்கள ராணுவம் கைதுசெய்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ‘புலிகளின் அரசியல்’ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே வவுனியாவில் உள்ள தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் அந்தச் சிறையில் ஏற்கனவேயுள்ள சிங்களக் குற்றவாளிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். உணவு, உடை போன்ற அத்தியாவசியங்கள் மறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இது மட்டுமின்றி இவர்களை உளவியல் ரீதியான கொடுஞ் செயல்களுக்கு உட்படுத்தி மனநிலை பாதிக்கச் செய்கின்றனர்.

 கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் இவர்களிடம் எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை.  இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். இன்னும் மீதம் இருப்பது 150 படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே. எந்தவித வன்செயல்களிலும் ஈடுபடாத இந்த 150பேரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்வதற்கான உள் வேலைகளை சிங்கள ராணுவம் செய்துவருகிறது. எந்தவிதக் காரணமும், விசாரணையுமின்றி அப்பாவித் தமிழர்கள் 150பேர் ஒரே கூரையின் கீழ் கொல்லப்படப் போகிறார்கள்.

சிறிலங்கா அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகளும், விசாரணைகளும் நடந்துவரும் நிலையில் எந்தவித காரணமுமின்றி கொல்லப்படப் போகும் இவர்களைக் காப்பாற்ற அனைத்து ஊடகங்களும் முன்வரவேண்டும். இந்தச் செய்தியினை உலகிற்கு தெரிவித்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றி சிறிலங்கா ராணுவத்தின் மீதான போர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
வவுனியாவில் இருந்து  உறுதிப்படுத்திய தகவல்.

  • (இந்தச் செய்தியினை தங்களால் முடிந்தவரை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், முடிந்தால் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து உலகம் முழுவதும் இந்த அவசரத் தகவலைக் கொண்டு சேர்க்கவும். நடக்கவிருக்கும் உயிர்ப் பலியைத் தடுக்க நம்மால் மட்டுமே முடியம். நமது ஆதரவுக் கரங்களுக்காக மரணத்தின் விளிம்பில் நிற்கும் அந்த 150 தமிழ் இளைஞர்களை நினைத்துப்பாருங்கள் அவர்களைக் காப்பாற்ற நீங்கள் உதவுவீர்கள் என்று நம்பிக்காத்திருக்கும் - தமிழன்)

No comments:

Post a Comment