அரசியல் தீர்வு குறித்த இரு தரப்பு பேச்சுக்கான சாதகமான சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கூட்டமைப்பினால் 2011 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கையளிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தீர்வு யோசனைக்குய பதிலை அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை. இந்த நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எவ்வாறு அங்கம் வகிக்கடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசிய கூட் டமைப்பு இணக்கம் தெரிவிக்காததனால் பாராளுமன்ற தெரிவுக் குழுவை கூட்ட முடியாமல் இருப்பதாக அரசாங்கம் கூறுவதை சம்பந்தன் நிராகரித்தார். ஏற்பட்ட இணக்கப்பாடுகள் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக்கூட்ட மைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு பத்து சுற்றுப் பேச்சுக்களுக்கு மேல் நடை பெற்றுள்ளன. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களில் காணப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பேசுவது என தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மார்ச் மாதம் சமர்ப்பித்த யோசனைகளின் அடிப்படையில் பேசி இணக்கத்தை ஏற்படுத்தி அந்த இணக்கப்பாட்டை பாராளு மன்ற தெரிவுக் குழுவில் சமர்ப்பித்து நிறைவேற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த அடிப்படையில்தான் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமை ப்பு இணையும் என பேச்சில் கலந்து கொண்ட அமைச்சர்களிடம் கூறப்பட்டிருந்தது. அதற்கு அரச தரப்பும் இணங்கியிருந்தது.
ஆகவே ஏற்றுக்கொண்ட இந்த விடயங் களை நடைறைப்படுத்தாமல் வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க ஒத்துழைப்பு வழங்கவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்த முடியாது. அந்தக் குற்றச்சாட்டு நியாயமற்றது.
கடந்த சுற்றுப் பேச்சுக்களில் எல்லா விட யங்களையும் நாங்கள் பேசியதாக கூற முடியாது. குறிப்பிட்ட மற்றும் அவசியமான விடயங்களை மாத்திரமே பேசியிருந்தோம்.அந்தப் பேச்சுக்களில் உறுதியளிக்கப்பட்ட மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்த அல்லது அதற்குய பதிலை அரசாங்கம் வழங்கவில்லை என்பதனால்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி அரசுடனான பேச்சை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிர்த்திருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியாக இடம்பெற்ற பேச்சிலும் கூட அரசாங்கம் மேற்படி விடயங்களுக்குய பதில் எதனையும் தரவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமை ப்பு பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றது.ஆனால் பேச்சை ஆரம்பிப்பதற்கான அறி குறிகள் எதுவும் இல்லை எனவும் சம்பந்தன் கூறினார்.
No comments:
Post a Comment