Translate

Saturday, 26 May 2012

அரசியல் கொலைகளில் அதிவீர சூரராக உள்ளது சிறீலங்கா அரசு: அமெரிக்கா


சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகவும் மீறப்படும் மனிதவுரிமை மீறல்களுக்கும் அரசுத் தரப்புக்கும் தொடர்பு உள்ளது என அமெரிக்கா சிறிலங்காவின் மனிதவுரிமைகள் வடயம் குறித்து கடுமையாகச் சாடியுள்ளது.

"இன்வென்சன்ஸ் ஜெனிவா" கண்காட்சியில் இலங்கையின் கண்டுபிடிப்பாளர்கள் கௌரவிப்பு _


  வைத்திய கலாநிதி எஸ்.ஜே.பி. லினாடோரா மற்றும் தினேஷ் கடுகம்பல ஆகியோரின் கண்டுபிடிப்புகள், ஜெனிவாவில் இடம்பெற்ற "இன்வென்சன்ஸ் ஜெனிவா" கண்காட்சி நிகழ்வில் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ச்சியான 40ஆம் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வானது கண்டுபிடிப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் இடம்பெறும் உலகின் மிகப்பெரும் நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சுமார் 46 நாடுகளை சேர்ந்த, 789 கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன், 1000க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

தலைமைத்துவ பயிற்சி பெற்ற மலையக மாணவர்களுக்கு கொழும்பில் கௌரவம்

வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் ஏற்றுக்கொள்கிறேன்

வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீள்குடியேறும்நாளை அறிவிப்பதாகக் கூறி ஏமாற்றப்பட்ட கதிர்காமர் முகாம் மக்கள்; ஆவலுடன் காத்திருந்தவர்கள் கொதிப்பு

news
 முள்ளி வாய்க்கால் உள்ளிட்ட இறுதிப்போரின் இறுதிக்கணங்கள் கழிந்த பகுதிகளைச் சொந்த இடங்களாகக் கொண்ட மக்களின் மீள்குடியமர்வுக் கனவுகள் நேற்று நசுக்கப்பட்டன. இதனால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்த மக்கள் படையினரையும் அரச அதிகாரிகளையும் திட்டித் தீர்த்தனர்.
 
 
தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் சுமார் 6,000 பேர் வவுனியா மனிக் பாமில் உள்ள கதிர்காமர் முகாமில் தங்கியுள்ளனர். அவர்களை ஜுன் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் மீளக்குடியேற்றுவதாக அமைச்சர்கள் உறுதியளித்திருந்தனர்.

படையினராலும் ஆயுதக்குழுக்களாலும் தமிழர் பிரதேசங்களில் படுகொலைகள்; இலங்கை அரசின் உரிமை மீறல்களை நீண்ட பட்டியலிட்டது அமெரிக்கா

news
 இலங்கையில் தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் அரச படைகளினதும், அரச ஆதரவு துணை ஆயுதக்குழுக்களினதும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளே பிரதானமான மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள மனித உரிமை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படையினராலும் ஆயுதக்குழுக்களாலும் தமிழர் பிரதேசங்களில் படுகொலைகள்; இலங்கை அரசின் உரிமை மீறல்களை நீண்ட பட்டியலிட்டது அமெரிக்கா

news
 இலங்கையில் தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் அரச படைகளினதும், அரச ஆதரவு துணை ஆயுதக்குழுக்களினதும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளே பிரதானமான மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள மனித உரிமை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கை நேற்றுமுன்தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கு என்ன உரிமை உள்ளது? இனவாத அமைச்சர் சம்பிக்க சீற்றம்


இலங்கையின் மனித உரிமை தொடர்பாக கதைப்பதற்கு அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் கிடையாது என இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
உலகில் மிகவும் மோசமான முறையில் மனித உரிமைகளை மீறுவது அமெக்காவே இதனை அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். எனக் கடிந்துள்ள சம்பிக்க,

அன்றும் இன்றும் தமிழர்களைக் கொல்லும் தம்பிமுத்து என்னும் தறுதலை !

1987ம் ஆண்டு கொக்கட்டிச் சோலை படுகொலைகள் பலற்றி பலர் அறிந்திருப்பீர்கள். ஆனால் அது எவ்வாறு நடந்தது ஏன் நடந்தது என்பது தொடர்பாக பலருக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை . சமீபத்தில் லண்டன் வந்து புரொன் லைன் கிளப் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட அருன் தம்பிமுத்து என்பவர் யார் ? என்று மக்கள் அறிந்திருக்கவேண்டும். விடுதலைப் புலிகள் தமது தாய் தகப்பனை சுட்டுக்கொன்றதாக இவர் வேற்றின மக்கள் மத்தியில் கடும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். துடிக்கத் துடிக்க தமது தாய் தந்தையர் இறந்ததாக 70MM பயாஸ்கோப் படம் போட்டுக் காட்டும் இந்த அருன் தம்பிமுத்து யார் ? இவர் குடும்ப வண்டவாளம் என்ன... உங்களுக்கும் தெரியவேண்டாமா .... 

சரி 1987ம் ஆண்டு நடந்தது என்ன ? விடையத்துக்குச் செல்வோம்:

சிறீலங்காவில் நடப்பது குடும்ப ஆட்சியே : அமெரிக்கா


வொஷிங்டனில் நேற்று முன்தினம் காலை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சுமார் 200 நாடுகளின் மனித உரிமை நிலைவரம் குறித்த 2011 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டார்.
இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 44 பக்க அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு

பிரித்தானியத் தூதுவர் மீது கடும்கோபத்தில் இலங்கை


வடக்கில் இராணுவத்தைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின், வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கருத்து தொடர்பாக பிரித்தானிய தூதுவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, இலங்கை  வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவநீதம்பிள்ளையை இலங்கை வர அனுமதிக்க வேண்டும்!– அமெரிக்கா வேண்டுகோள்


ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பின் போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை தொடர்பாக ஆராய 3 நாடுகளை கொண்ட குழு ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நியமனம்


ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் காரியாலயத்தின் ஊடாக இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக 3 நாடுகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மனிதவுரிமைகள் ஆணையகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், எதிர்வரும் ஒக்டோபர் 22 ம் திகதியிலிருந்து நவம்பர் 5 ம் திகதி வரை இடம்பெறுவுள்ள ஆய்வு குழு கூட்டங்களின் போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

இலங்கைத் தமிழரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு அரசே காரணம்!


தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 தமிழ் மொழி பேசத் தெரியாத சிங்கள வைத்தியர்கள், தமிழ்ப் பிரதேசங்களில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.இதனால் நோயாளிகளுகளுடன் நேரடியாகப் பேசமுடியாத நிலை காணப்படுகின்றது என தென் சிறிலங்காவைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுருவான Melani Manel Perera என்பவர் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு இலங்கை அரசாங்கமே காரணம் என யாழ்ப்பாணத்தில் கூடிய கத்தோலிக்க மதகுருமார்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், நீர், மின்சாரம், மலசலகூட வசதிகள் மற்றும் அரசாங்கத்தின் எந்தவித நிதி சார் உதவிகளும் கிடைக்கப் பெறாத யுத்தத்தில் கணவன்மாரை இழந்த 184 பெண்கள் தற்போதும் தற்காலிக வீடுகளில் வாழ்கின்றனர்.

பிரித்தானியவில் இருந்து நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர் விவகாரம் பாராளுமன்றத்தின் கவனத்தில்!


பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு வரும் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் தொடர்பில், பிரித்தானிய பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில், கடந்த 23-05-2012 புதன்கிழமை, பிரித்தானிய பாராளுமன்ற வளாக Committee Room 9 கூடத்தில், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக, பிரித்தானிய செயலகம் மேற்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் எதிரொலித்துள்ளது.

தெஹிவளை மசூதியை அகற்றக்கோரி பிக்குகள் தலைமையில் சிங்களவர்கள் தாக்குதல்!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையிலுள்ள முஸ்லிம்களின் மசூதி ஒன்றை அங்கிருந்து அகற்றுமாறு கோரி அதன் மீது தாக்குதலை நடத்துவதற்கு பிக்குகள் தலைமையில் வந்த சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட முயற்சி நேற்று மாலை பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்போது ஏற்பட்ட மோதல்களால் தெஹிவளைப் பகுதியில் பெரும் பதற்றநிலை காணப்பட்டது.

கோடீஸ்வர தந்தை, மகன் பாலியலுக்குப் பொலிஸார் பாதுகாப்பா?

அநுராதபுரத்தில் உள்ள கோடீஸ்வரர் ஒருவரின் மகன் கடந்த ஜனவரி 12;,13ம் திகதிக்குள் 13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை தனது கெப் வாகனத்தில் பலாத்காரமாக கடத்திச் சென்று அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு அநுராதபுரம் பொலிஸ் தலைமையத்தைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்............. read more 

Friday, 25 May 2012

மன்னார் நாகதாள்வு கிராமத்தில் புத்தர் சிலை பாதுகாக்குமாறு படையினர் வற்புறுத்தல்! (படங்கள்)


மன்னார் நாகதாழ்வு கிராமத்தில் ஆலமரத்தடியில் உடைந்த நிலையில் காணப்பட்ட புத்தர் சிலையினை தற்போது படையினர் மீண்டும் புனரமைத்து அங்குள்ள மக்ளை பாதுகாக்குமாறு வற்புறுத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.

இங்கு படையினரோ அல்லது சிங்கள மக்கலோ இல்லாத நிலையில் புத்த தர்மத்தையும் மீறி அவ்விடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அதனை பாதுகாக்குமாறு அங்குள்ள இந்து மக்களை படையினர் வற்புறுத்தியுள்ளதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்............................. read more

அரசின் காலங்கடத்தும் நடவடிக்கைக்கு கூட்டமைப்பு ஒத்துழைக்கக்கூடாது – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்!


அரசின் காலங்கடத்தும் நடவடிக்கைக்கு கூட்டமைப்பு ஒத்துழைக்கக்கூடாது – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்!


அரசியல் தீர்வுக்கான செயன்முறை எனும் அரசின் காலம் தாழ்த்தும், மற்றும் சர்வதேசத்திடம் நேரத்தை கடத்தும் முயற்சியில் தாம் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு
25 05 12
 
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே. இம்மானுவல் ஆகியோர், இந்நினைவேந்தல் நிகழ்வில் கூட்டாக பங்கெடுத்திருந்தன
ர்.

வருவானாம் ராஜபக்சே- பகைவிரட்ட வா தமிழா!

வருவானாம் ராஜபக்சே- பகைவிரட்ட வா தமிழா!!!-ஆதித்தன்
25 05 12

அடிமைப்பட மறுத்து அகதியென்ற இழிச்சொல்லுடனும் மறுக்கப்பட்டஉரிமைக்காய் பயங்கரவாதி என்ற பழிச்சொல்லுடனும் இன்று உலகம் முழுதும் விடியலுக்காய் காத்திருக்கும் என் தமிழ் சொந்தங்களே!!
உலகம் உருண்டை என்பதை ஊர் ஊராய் அலைந்து நிரூபித்துக்கொண்டிருப்பவர்கள் நாங்கள் "சொந்தமண்' 'வீடு' 'வாசல்' எல்லாம் அங்கே விருந்தாளிகள் ஆக்கிரமிப்புக்குள் அலறித்துடித்துக்கொண்டிருக்கின்றது.

யாழ்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மிகப் பிரமாண்டமான மருத்துவக் கண்காட்சி நடை பெற்று வருகின்றது.


யாழ்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மிகப் பிரமாண்டமான மருத்துவக் கண்காட்சி நடை பெற்று வருகின்றது. அதைப் பல ஆயிரக்கணக்கான மக்களும் மாணவர்களும் பார்வையிட்டுப் பயனடைகின்றனர்.

வடக்கின் மக்கள் தொகை புள்ளி யொன்றில் சந்தித்தது போல தற்போது காட்சியளிக்கிறது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகம். அலை மோதும் சனக்கூட்டத்தையும் தினமும் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வரும் பாட சாலை மாணவர்களையும் அங்கு காண முடிகிறது.

கோவை இன எழுச்சி பொதுக்கூட்டம்/மூன்றாம் ஆண்டு துவக்க விழா


மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி -
சீக்கியர்களையும் தமிழ் ஈழத்திற்காக உறுதியேற்க வைத்த 'நாம் தமிழர்'களுக்கு வாழ்த்துக்கள்.

யேசு சிலுவையில் அறையப்படவில்லை


யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது.

மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர
்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Protest

கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது


 கறிவேப்பிலை குறித்து அவுஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர்.

இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்பது குறித்து மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர்.

அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

Thursday, 24 May 2012

முடக்குவாதத்துக்கு அருமருந்தான மஞ்சள்!


பார்க்கின்சன் நோய் எனப்படும் முடக்குவாதத்துக்கு மஞ்சள் அருமருந்தாக இருக்கிறது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய உணவு மற்றும் பாரம்பரிய மருந்துகளில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. மஞ்சளின் மருத்துவ குணங்கள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர் பாசிர் அகமது மற்றும் லிசா லேபிடஸ் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

தஸ்தயேவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”


சுசீலாவின் தமிழ் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” நாவலை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அதில் கல்குதிரை சிறப்பிதழில் வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் மனைவியான அன்யாவின் “என் கணவரைப் பற்றிய சில நினைவுகள்” என்ற பகுதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. 
நுாற்றைம்பது வருடங்களுக்கு முன்பு பிறந்த பியோதர் தஸ்தயேவ்ஸ்கியைக் காட்டிலும் சிறந்த உரைநடை, புனைகதை மேதை உலகில் தோன்றியதில்லை என்று கருதுபவர்கள் இன்றிருக்கிறார்கள்.அந்த மாபெரும் எழுத்தாளனின் மனைவியின்(அன்யா) வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்து சில வரிகள் இவை.

கிளிநொச்சியில் கனேடிய பிரஜை படுகொலை தொடர்பில் சந்தேக நபர்கள் ஐவர் கைது


கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட கனேடியப் பிரஜையின் கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, 23 May 2012

யாழில் காணாமல் போன சிறுவன் மதம் - பெயர் மாற்றப்பட்ட நிலையில்


யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களினில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதேயிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். மதம் மாற்றப்பட்டு இச்சிறுவன் வளர்க்கப்பட்டு வருகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

முதலில் தன்னை கடத்திவந்த சிலர் குறித்த வீட்டாரிடம் கையளித்ததாகவும் அங்கு தான் வேலையாளாக இருந்ததாகவும் பின்னரே தன்னை மதம் மாற்றி பெயர் மாற்றத்தையும் அவர்கள் செய்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
அத்துடன் குறித்த சிறுவன் மத ரீதியான கிரியைகளுக்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பட்டதாரிகளுக்கு அரசியல் செல்வாக்குடன் நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள்:அரியநேத்திரன் _

பட்டதாரிகளுக்கு அரசியல் செல்வாக்குடன் நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள்:அரியநேத்திரன் _

  நேர்முகப்பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகளுக்கு அரசியல் செல்வாக்குகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளுக்கு அரசாங்கமே பெறுப்பேற்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மக்களுக்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு ஹிருணிகா மனு

news
மக்களுக்கான இறைமை அதிகாரங்கள் நியாயமாக வழங்கப்படல் வேண்டும் என்று ஹிருணிகா பிரே மச்சந்திர ஜனாதிபதியிடம் மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மன்னார் ஆயரை புத்த பிக்குவுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரிஷாட் மன்னிப்பு கோர வேண்டும் :அடைக்கலநாதன் எம்.பி.


  மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப்பை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அத்துடன் அவர் இவ்வாறு பேசியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் தெரிவித்தார்.

பொலன்னறுவையிலுள்ள சிவன், விஷ்ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு _


  பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விஷ்ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார். 

அதிக குற்றச்செயல்கள் பட்டியலில் யாழ்ப்பாணம் முதலிடம் _


  யாழ். மாவட்டத்தில் அதிக குற்றச் செயல்கள் அண்மையில் இடம்பெறும் பொலிஸ் பகுதியாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எல்.பெரேரா குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதைத் தெரிவித்தார்.

ஈழத் தமிழ்க் குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் நடந்த கதி!

Posted Imageகடந்த ஏப்ரல் மாதம் திருமணமாகியிருந்த கணேஷ் ரஞ்சினி தம்பதியர் அவுஸ்திரேயாவின் மெல்பேர்ண் குடிவரவுத் திணைக்கள அலுவலகத்திற்கு கடந்த 10-05-2012 வியாழக்கிழமை மாதாந்த நேர்காணலுக்கென அழைக்கப்பட்டு சென்றபோது இடிபோல அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று அங்கு தமக்காகக் காத்திருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !


Posted Imageதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும், சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளும், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று (22.5.2012) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு, தாயகத்தில் சந்தித்தனர். யுத்த காலத்தில் ஏற்பட்ட ஈழத்தமிழர் படுகொலை குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கு ஏற்பட்டு உள்ள சூழ்நிலை, சிங்களர் குடியேற்றம், ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு அற்ற அபாயம், சர்வதேச சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமைகள் குறித்தும், மிக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன என அதிர்வு இணையம் அறிகிறது.

இராணுவ தளபதியுடன் தனியாக சந்திக்க அழைந்தது யாழ்,பல்கலை நிர்வாகம் மறுத்தார்கள் மாணவ பிரதிநிதிகள்


இராணுவ தளபதியுடன் தனியாக சந்திக்க அழைந்தது யாழ்,பல்கலை நிர்வாகம் மறுத்தார்கள் மாணவ பிரதிநிதிகள்
news
யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளை யாழ்ப்பாண இராணுவ கட்டளை தளபதியான ஹத்துருசிங்கவுடன் தனியான சந்திப்பொன்றை நேற்றைய தினம் பல்கலை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த போதிலும் மாணாவர் பிரதிநிதிகள் இதனை மறுத்துள்ளனர்.

முல்லைத்தீவு வட்டுவாகலில் சிங்கள குடியேற்றமும், முளைத்துள்ள புத்தவிகாரையும்!


முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்தை துரிதப்படுத்தும் முகமாக வட்டுவாகல் கிராமத்தில் நிறுவப்பட்ட புத்தவிகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
இங்கு புத்த பிக்குகளும், அதனை சுற்றி சிங்கள குடியேற்றங்களும் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இறுதி யுத்தத்தின் போது மிகப்பெரிய இனப்படுகொலை நடந்த வட்டுவாகல் கிராமத்தில் அக்கிராம தமிழ் மக்கள் செல்வதற்கோ மீளக்குடியமர்வதற்கோ அனுமதிக்கப்படாத நிலையில் புத்தவிகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழர்களை அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியேறுவதற்கு கண்ணிவெடி இருப்பதாக கூறி தடுத்து வரும் சிங்கள படையினர் அங்கு புத்த விகாரையை அமைத்து சிங்களவர்கள் நடமாடுவதற்கு அனுமதித்துள்ளனர்.

அமெரிக்காவில் தவறான புள்ளி விபரங்களைத் தெரிவித்தார் அமைச்சர் பிரீஸ் ?


சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் அமெரிக்காவில் கூறிய பொருளாதார புள்ளிவிபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை
எனக் கருத்துக்கள் எழுந்துள்ளன.

இந்து சமுத்திரத்தில் கூர்மையடையும் இந்திய - சீனா மோதல்


essay20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது.
 
 
20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. 

கோதாவின் போர் நூலிலிருந்து ஒரு குறிப்பு

essay தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்குவது மிகப்பெரிய அச்சுறுத்தலாக முடியும் என்று கோத்தபாய கூறுவதை 100% ஏற்பதாக அலோக் பிரசாத் வெளிப்படையாக அறிவித்தார்.

""கருணாநிதிதான் தங்களைக் காக்கக்கூடிய ஒரே தலைவர்'' (ஹீரோ) என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தயாரித்த அறிக்கை கருணாநிதியை அடைவதற்கு முன்னால், இலங்கை அரசின் போர்ச் சலுகை அறிவிப்பு கருணாநிதியை எட்டுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
 


2008 ஒக்ரோபர் மாதத்தில்தான் இராணுவ ரீதியாகவே புலிகளை ஒடுக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சாமர்த்தியமாக இந்திய அரசை சேர்த்தது எப்படி என்பதையும், இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கிய பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விவரிக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவியுங்கள்; நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை


news
 உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டு மென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளு மன்றில் கோரிக்கை விடுத்தார்.
 
உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ்க்கைதிகளுக்கு அரசு உறுதியான உறுதிப்பாடொன்றை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் வடக்கு, கிழக்கில் மிதமிஞ்சிய இராணுவத்தின் பிரசன்னத்தை அரசு குறைக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவியுங்கள்; நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை


news
 உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டு மென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளு மன்றில் கோரிக்கை விடுத்தார்.
 
உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ்க்கைதிகளுக்கு அரசு உறுதியான உறுதிப்பாடொன்றை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் வடக்கு, கிழக்கில் மிதமிஞ்சிய இராணுவத்தின் பிரசன்னத்தை அரசு குறைக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.

தமிழர் தாயகத்தில் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்த சரியான திட்டமிடல் அவசியம்


தமிழ் மக்களின் போராட்டம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ்ச் சமூகம் கல்வியறிவில் மேலோங்க வேண்டும். ஆனால் தமிழர் தாயகப் பகுதியில் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான முழுமைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! – ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர்


இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர் ஜீன் லெம்பர்ட் கோரியுள்ளார். ஐ.ஏ.என்.எஸ் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தன்னால் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா!


தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் தற்போதுள்ள ஆட்சியை கவிழ்க்க முடியும் என அண்மையில் விடுதலையான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ரொயிட்டஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஐநா மனித உரிமை மன்றம் முன்வர வேண்டும்

இலங்கை சிறைகளில் விசாரணையின்றி வாடும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாத்தறையில் பாரிய ஆயுதத் தொழிற்சாலை: பொலிசார் முற்றுகையிட்டனர் !


மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, தெடியாகல பகுதியில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையமொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ரி௫6 துப்பாக்கிகளைப் போன்ற பகுதியளவில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பலகைத் தொழிற்சாலை என்ற போர்வையில் இந்த ஆயுத தயாரிப்பு நிலையம் இயங்கியுள்ளது. இம்முற்றுகையின்போது ஒரு நபரை பொலிஸார் கைது செய்தனர்.

மட்டக்களப்பிலுள்ள அருட் தந்தை வில்லியம் ஓல்டின் உருவச் சிலை சேதப்படுத்தல் (படங்கள்)

மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள அருட் தந்தை வில்லியம் ஓல்டின் உருவச் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது என புளியந்தீவு மெதடிஸ்த்த திருச்சபையின் முகாமை குரு அருட் தந்தை எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார்.................... read more

சரத் பொன்சேக்கா: ஒரு தறுதலையின் விடுதலையின் பின்னணியில் நடந்தவை


காலம்: 08-02-2010 இரவு 10 மணி, 
இடம்
: இராஜ்கீய மாவத்த( ரோயல் கல்லூரிக்கு எதிரே), கொழும்பு. 
பாத்திரங்கள்
: சரத் பொன்சேக்கா, மனோகணேசன், சோமவன்ச அமரசிங்க, ரவு ஹக்கீம், கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா.
இப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்ட இடத்தில் ஒரு கலந்துரையாடாலைச் செய்துகொண்டிருக்கும் போது இராணுவக் காவற்துறைப் பிரிகேடியர் விஜயசிரி, மேஜர் ஜெனரல் மானாவடுகே ஆகியோர் தலைமையில் ஒரு இராணுவக் காவல்துறைப் படையினர் அங்கு நுழைந்தனர். அவர்களை எதிர்த்துப் பேசிய கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா என்னும் சரத் பொன்சேகாவின் ஊடகத்துறைப் பேச்சாளர் முதலில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சரத் பொன்சேக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டது:

Monday, 21 May 2012

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது வைகோ, கொளத்தூர் மணி, சத்யராஜ் .(படங்கள் & காணொளி)

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது,ஈழவிடுதலை மலரும்வரை இந்தமுழக்கம் ஓயாது.ஜ.நாவே! இந்தியஅரசே! ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து என்ற உரிமை முழக்க பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜீ.ஆர் நகரில் இடம்பெற்றுள்ளது.................... read more